26 கிலோ எடை கொண்ட உலகிலேயே
குள்ளமான பசு- வெறும் 51 சென்டிமீட்டர்தான்
அதன் உயரம்!
உலகிலேயே
குள்ளமான பசு
பசு ஒன்று மிககுள்ளமாக
இருந்து கின்ன்ஸ் சாதனையில் இடம்பிடித்த புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வங்கதேசத்தில் வாழும்
51 செ.மீ., உயரமுள்ள உலகின்
மிகக் குள்ளமான பசுவை ஆயிரக்கணக்கானோர் ஆச்சர்யத்துடன் பார்வையிட்டுச் செல்கின்றனர்.
பசுவின்
எடை
26 கிலோ மட்டுமே
வங்காள தேச தலைநகர் டாக்காவுக்கு அருகே உள்ள இடம் சாரிகிராம். இங்கு அருகே உள்ள ஷிகோர் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு, சொந்தமாக பண்ணையில் உள்ள அந்த பசுமாடுதான் டாக்காவில் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது.
26 கிலோ
எடை கொண்ட இந்த பசுவின் உயரம்
எவ்வளவு தெரியுமா? வெறும் 51 சென்டிமீட்டர்தான். நீளம், 66 சென்டி மீட்டர். எடை 26 கிலோ. பிறந்து 23 மாதங்களான இந்தப் பசுதான் உலகிலேயே குள்ளமான பசுவாகக் கருதப்படுகிறது.
மற்றவர்களைக்
கவரும் பசு
பொதுவாக
உலகிலேயே பெரிய விஷயமாக இருந்தாலும், சிறிய விஷயமாக இருந்தாலும் அது அதிக முக்கியத்துவம்
பெறும்.
குள்ளமான
பசு உலகை ஈர்த்தது
அந்த
வகையில், 51 சென்டிமீட்டர் உயரமுள்ள பசு, தற்போது உலக
மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
குள்ளமான
பசுவை காண குவியும் மக்கள்
இந்த பசுவின் படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. பல்வேறு ஊடகங்களிலும் இது தொடர்பான செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால், கோவிட் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி இந்தப் பசுவைக் காண ஆயிரக்கணக்கானோர். அந்த பண்ணைக்கு படையெடுத்து வருகின்றனர்.
அந்தப் பசுவுடன் செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு
வருகின்றனர். இதில் என்ன ஒரு சிறப்பு
என்னவென்றால், இப்போது லாக்டவுன் என்பதால் போக்குவரத்து எதுவும் இல்லை. ஆனாலும், டாக்காவிலிருந்து தென்மேற்கே 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த பண்ணைக்கு
மக்கள் ரிக்ஷாவை பிடித்து
வந்து கொண்டு பார்க்கிறார்களாம்.
அதிகாரிகள்
அறிவுறுத்தல்
இதையடுத்து, பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டாம் என, பண்ணை உரிமையாளரிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
முந்தைய
சாதனை
இதற்கு முன்பு
கின்னஸ் சாதனையில் மிக குள்ளமான பசு இடம்பெற்றிருந்தது. கேரளாவை சேர்ந்த மாணிக்யம்
என்பவரின் பசு அது, கடந்த 2014-ல் முதல் இந்த பசுதான் கின்னஸில் முதலிடத்தில் உள்ளது.
அதன் உயரம் 61 செமீ ஆகும். ஆனால், அந்த பசுவை விட தற்போது ராணி 10 சென்டிமீட்டர் குறைவாம்.
மேலும்
படிக்க....
நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டம் - பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு!! வேளாண்துறை அறிவிப்பு!!
இனி இவர்களுக்கெல்லாம் PM Kisan திட்டத்தில் கீழ் 6000 ரூபாய் கிடைக்காது!! புதிய நடைமுறைகள் என்ன?
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி
மேலும் அறிந்துகொள்ள
TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை
தொடரந்து காணுங்கள்
நன்றி......
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...