பயறு வகை விதைப்பண்ணைகள் நிறைந்த லாபம் தரும் தொழில்! கூடுதல் லாபம் ஈட்ட இதை செய்யுங்கள்!!


பயறு வகை விதைப்பண்ணைகளை அமைத்து விவசாயிகள் கூடுதல் லாபம் ஈட்டலாம்.


விதைப்பண்ணைகள்


சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விதை உற்பத்தியாளர்கள் பாசிப்பயரில் கோ 8 அறிவிக்கப்பட்ட இரகங்களிலும், தட்டைப் பயரில் வம்பன் 3 அறிவிக்கப்பட்ட இரகங்களிலும் உளுந்து பயிரில் வம்பன் (பிஜி) 6. வம்பன் (பிஜி) 8, மற்றும் வம்பன் (பிஜி) 10 இரகங்களிலும் விதைப்பண்ணை அமைத்து விதைச்சான்று உதவி இயக்குநர், சேலம் அலுவலகத்தில் உரிய ஆவணங் களுடன் விதைப்பண்ணையினை பதிவு செய்து உள்ளனர்.



விதைச்சான்று நடைமுறைகள்


பயறு வகை விதைப்பண்ணைகளில் அதிக மகசூலும் பிற இரசு கலப்பு இல்லாத சான்று விதை உற்பத்தி செய்வதன் மூலமும்,வேளாண்மைத் துறையின் விதை உற்பத்தி மானியமும் பெற்று,கூடுதல் லாபமும் பெற விதைச்சான்று நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.


விதைப்பு


பயறு வகை விதைப்பண்ணைகளில் விதைப்பு செய்து 40 நாட்களில் பூப்பருவத்தின் போது ஒரு முறையும், 55 நாட்களில் காய் முதிர்வு நிலையில் மறு முறையும் செய்யலாம்.


கலவன் கணக்கீடு


அந்தந்த பகுதி விதைச்சான்று அலுவலரால் வயலாய்வு மேற்கொள்ளப்பட்டு பயிர் விலகு தூரம், கலவன் கணக்கீடு குறித்தறிவிக்கப்பட்ட நோய் தாக்கிய பயிர்களின் கணக்கீடு போன்ற காரணிகள் கணக்கீடு செய்யப்பட்டு ஆய்வறிக்கைகள் வழங்கப்படும்.


பராமரிப்பு

பயிர் விலகு தூரம் ஆதார நிலைக்கு 10 மீட்டரும் சான்று நிலைக்கு 5 மீட்டருக்குக் குறையாமலும் இருக்குமாறு விதைப் பண்ணைகள் பராமரிக்கப்பட வேண்டியது அவசியம். விதைப்பண்ணை வயல்கள் கலவன்கள் இன்றி பராமரிக்கப்பட வேண்டியது மிக அவசியமானதாகும்.



அடையாளம்


புறத்தோற்றத்திலும், குணாதிசயத்தாலும் மாறுபட்டுள்ள பிற இரக மற்றும் இதர செடிகளை அப்புறப்படுத்தவும் காய்களில் வடிவம், நிறம் மற்றும் பருமன் ஆகியவற்றை அடிப்படையாக வைத்தும் பிற இரகச் செடிகளை நன்கு அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்.


கலவன்களை நீக்குதல்


பிறகு கலவன்களை நீக்கியும், நோய் தாக்கிய செடிகளை அப்புறப்படுத்தியும் விதைச்சான்று அலுவலரின் அறிவுரையை பின்பற்றி பிற இரக கல்வன்கள் இல்லாமல் விதைப்பண்ணைகளைப் பராமரிக்க வேண்டும்.


பிற இரக கலவன்கள் பயறுவகை பயிர்களில் சான்று நிலை விதைப்பண்ணையாக இருந்தால் 0.2 சதவீதமும், ஆதாரநிலை விதைப்பண்ணையாக இருந்தால் 0.1 சதவீதமும் மட்டுமே அனுமதிக்க இயலும்.


சுத்தம் செய்தல்


மேற்குறிப்பிட்ட அளவினை விட அதிகமாக இருப்பின் விதைப்பண்ணைகள் தள்ளுபடிக்கு பரிந்துரைக்கப்படும்.  தொடரந்து அறுவடை நிலை ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பின், ஈரப்பதம் வரும் வரையில் நன்கு உலர்த்தி விதைச்சான்று அலுவலர் பரிந்துரைக்கும் சல்லடைகளை பயன்படுத்தி விதைகளை நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.



90 நாட்களுக்குள்


அவ்வாறு சுத்தம் செய்யப்படும் தரமான விதைகளைச் சாக்குப் பைகளில் நிரப்பி, சுத்தி அறிக்கை பெற்று, அறுவடை நிலை ஆய்விலிருந்து 90 நாட்களுக்குள் அறுவடை செய்யப்பட்ட விதையினை விதை சுத்தி நிலையம் கொண்டு செல்ல வேண்டும். விதை சுத்தி நிலையத்தில் இருப்பு வைக்கப்பட்ட 90 நாட்களுக்குள் சுத்தி செய்து, விதை மாதிரி எடுத்து, விதை பரிசோதனை நிலையம் அனுப்பப்படும்.


சான்று அட்டை


இதைத்தொடர்ந்து, அனுப்பப்பட்ட விதை மாதிரி, தரமானது என சான்றளிக்கப்பட்டால், அவ்விதை குவியலுக்கு விதை பகுப்பாய்வு நாளிலிருந்து 2 மாதத்திற்குள் சான்றட்டை பொருத்தப்பட வேண்டும்.


இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் சான்று விதைகளுக்கு வேளாண்மைத் துறையின் விதை உற்பத்தி மானியம் கிடைப்பதால் அதிக மகசூலுடன் பிற விவசாயிகளை விட கூடுதல் லாபமும் பெறலாம்.


தகவல் வெளீயீடு


தி.கௌதமன்

விதைச்சான்று உதவி இயக்குநர்

சேலம்.


மேலும் படிக்க....


தென்னை மரங்கள் வளர்ப்பதற்கான தட்ப வெட்ப சூழல் மற்றும் தென்னை மேம்பாடு!!


519 ஹெக்டர் பரப்பளவிற்கு பாசன உபகரணங்கள் வழங்கிட ரூ.4.30 கோடி 100% மானியம் விவசாயிகளுக்கு அழைப்பு!!


30% கூடுதல் மகசூல் வேண்டுமா? - ஒற்றை நாற்று நடவு முறையை மேற்கொள்ளுங்கள்! - வேளாண்துறை அறிவுரை!!


மேலும் தொடர்புக்கு....


எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடரந்து காணுங்கள் நன்றி......

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post