519 ஹெக்டர் பரப்பளவிற்கு பாசன உபகரணங்கள் வழங்கிட ரூ.4.30 கோடி 100% மானியம் விவசாயிகளுக்கு அழைப்பு!!

 


519 ஹெக்டர் பரப்பளவிற்கு பாசன உபகரணங்கள் வழங்கிட ரூ.4.30 கோடி 100% மானியம் விவசாயிகளுக்கு அழைப்பு!!


மாவட்ட அறிவிப்பு


நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் வட்டாரத்தில் நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தில் விவசாயிகள் தோட்டக்கலைத்துறையில் விண்ணப்பங்கள் வழங்கலாம் என தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது.



இதுகுறித்து, வெண்ணந்தூர் வட்டாரத் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் தமிழ்ச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டிருப்பதாவது:


நடப்பு ஆண்டில் இலக்கு நிர்ணயம்


நடப்பு ஆண்டில் தோட்டக்கலைப் பயிர்செய்யும் விவசாயிகளுக்கு 519 ஹெக்டர் பரப்பளவிற்கு நுண்ணீர்ப் பாசன உபகரணங்கள் வழங்கிட ரூ.4.30 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.


100% மானியம் யார்க்கு?


இதன்படி சிறு, குறு விவசாயிகளுக்கு 5 ஏக்கர் வரை நுண்ணீர்ப்பாசனம் அமைத்திட 100 சதவீத மானியத்திலும், பெரு விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் மூலம் அமைத்துக்கொள்ளலாம்.


இந்த திட்டத்தில் முன்னுரிமை


இந்த திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் பயன் பெறலாம் ஆனால் ஆதிபழங்குடி, பெண் விவசாயிகளுக்கு மட்டும் முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தேவைப்படும் ஆவணங்கள்


இந்த திட்டத்தில் இணைய கீழ் கண்ட ஆவணங்கள் மட்டும் போதுமானது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


1.பாஸ்போர்ட் அளவு புகைப்படம்


2. சிட்டா


3. அடங்கல்



4. நிலவரைபடம்


5. குடும்ப அட்டை


6. ஆதார்


7. வங்கிக்கணக்கு புத்தகம்


8. சிறு, குறு விவசாயி சான்றிதழ் நகல்


மேலே குறிப்பிட்ட உள்ள அனைத்து கோப்புகளின் நகல்களை சம்மந்த பட்ட வேளாண்துறை அலுவலகத்தில் சமர்ப்பித்து பதிவு செய்ய வேண்டும்


முன்பதிவு கட்டாயம்


மேலேக் குறிப்பிட்டுள்ள ஆவணங்களை வெண்ணந்தூர் வட்டாரத் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் வாங்கு விவசாயிகள் தங்கள் பெயரை முன்பதிவு செய்துப் பயன் பெறலாம்.


மானியத் தொகை விபரம்


மேலும் நடப்பு ஆண்டில் புதிதாக இத்திட்டத்தில் நுண்ணீர்ப் பாசனம் அமைக்கும் விவசாயிகளுக்கு குழாய் லைன் பதிக்க குழி எடுக்க ஆகும் செலவுத்தொகை ஹெக்டருக்கு ரூ.3 ஆயிரம் வழங்கப்படும்.



துணைத் திட்டமாக ரூ.40,000 வரை


மேலும் இதன் துணைத் திட்டமாக பிரதான குழாய் லைன் அமைக்க அதிகபட்ச மானியமாக ரூ.10 ஆயிரம், புதிதாக பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் கிணறு அல்லது போல்வெல்லில் மின்மோட்டார் பொருத்திக்கொள்ள ரூ15,000மும், பானத்திற்காக நீர்த்தேக்கத் தொட்டி 116 கனமீட்டர் அளவில் அமைக்க மானியமாக ரூ.40,000 வழங்கப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க....


30% கூடுதல் மகசூல் வேண்டுமா? - ஒற்றை நாற்று நடவு முறையை மேற்கொள்ளுங்கள்! - வேளாண்துறை அறிவுரை!!


வெள்ளரி சாகுபடி செய்வது எப்படி? ஜூலை மாதத்தில் வெள்ளரி சாகுபடி முழு விபரம்!!


பசுந்தாள் சாகுபடி உவர் மற்றும் களர் நிலங்களை சீராக்கும் பசுந்தாள் உரங்கள்!


மேலும் தொடர்புக்கு....


எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடரந்து காணுங்கள் நன்றி......

 

Post a Comment

0 Comments