பிரதமர் கிசான்
யோஜனா திட்டத்தில் பெரிய மாற்றம்!! இனி இவர்களுக்கும்
PM KISAN RS.6000 கிடைக்கும்!!
பிரதமர் கிசான்
யோஜனா
நாட்டின்
விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கும்
பொருட்டு, பிரதமர் (Prime Minister
Narendra Modi) நரேந்திர
மோடி 2018 ஆம் ஆண்டில் பிரதமர்
கிசான் யோஜனாவைத் தொடங்கினார். இந்த திட்டத்தின் கீழ்,
ஒவ்வொரு ஆண்டும் ரூ .6,000 பதிவு செய்யப்பட்ட விவசாயிகளின் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த தொகை நான்கு
மாத இடைவெளியில் தலா ரூ .2,000 என
மூன்று தவணைகளில் விவசாயிகள் கணக்கில் அனுப்பப்படுகிறது.
12 கோடி
விவசாயிகள் இணைப்பு
இந்த
திட்டத்துடன் இதுவரை 12 கோடி விவசாயிகள் இணைக்கப்பட்டுள்ளனர்.
இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, இந்தத் திட்டத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு
வருகின்றன. தற்போது செய்யப்பட்டுள்ள பெரிய மாற்றங்கள் என்ன என்பதை அறிவோம்.
நாட்டின்
எந்த விவசாயியும் பயன்பெறும் வசதி
முன்னதாக,
இந்த திட்டத்தின் (pm kisan samman
nidhi yojana) கீழ், 2 ஹெக்டேருக்கு குறைவான சாகுபடி நிலம் கொண்ட விவசாயிகளுக்கு மட்டுமே பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதியின் நன்மை வழங்கப்பட்டது. ஆனால் பின்னர் இந்த திட்டத்தின் விதிமுறைகள்
மாற்றப்பட்டன. இப்போது நாட்டின் எந்த விவசாயியும் இந்த
திட்டத்தை பயன்படுத்தி கொள்ள முடியும்.
பிரதமர் கிசான்
திட்டத்தில் ஆதார் முக்கியம்
ஆதார்
அட்டை (Aadhar card) இல்லாமல் எந்த விவசாயியும் பிரதமர்
கிசான் யோஜனாவைப் பயன்படுத்த முடியாது. உங்களிடம் ஆதார் அட்டை இல்லையென்றால், இந்த திட்டத்தின் கீழ்
நீங்கள் பதிவு செய்ய முடியாது. இந்த திட்டத்திற்கு மத்திய
அரசு ஆதார் கட்டாயமாக்கியுள்ளது.
நாட்டில்
உள்ள விவசாயிகள் அனைவரும் இந்த திட்டத்தின் பலனைப்
பெற முடியும். இந்த திட்டத்தில் இனைந்துக்கொள்ள
கணக்காளர், தாலுக்க ஆபிசர் மற்றும் வேளாண் அலுவலரை சந்திக்க தேவையில்லை என மத்திய அரசாங்கம்
தெரிவித்துள்ளது.
பிரதமர் கிசான்
திட்டத்தில் இணைவது எப்படி?
இப்போது
விவசாயிகள் (Farmers) வீட்டில் இருந்தே எங்கும் அலையாமல் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
விவசாயிகள் தங்கள் சாகுபடி நில ஆவணங்கள், ஆதார்
அட்டை, மொபைல் எண் மற்றும் வங்கி
கணக்கு எண் மூலம் pmkisan.nic.in வலைத்தளத்தின் மூலம்
ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இப்போது
நீங்கள் வீட்டில் அமர்ந்தபடியே உங்களுக்கான தவணை செலுத்தப்பட்டதா? இல்லையா?
என்ன நிலையில் இருக்கிறது போன்றவற்றை சரிபார்க்கலாம். ஆன்லைன் போர்ட்டல் மூலம் உங்கள் பகுதியில் வெளியிடப்பட்ட தவணைகளின் நிலையை நீங்கள் சரிபார்க்கலாம். இந்த திட்டத்தின் கீழ்,
பதிவுசெய்யப்பட்ட எந்தவொரு விவசாயியும் தனது ஆதார் எண்,
மொபைல் அல்லது வங்கி கணக்கு எண்ணை உள்ளிட்டு தனது தவணையின் நிலையை
சரிபார்க்க முடியும்.
கிசான்
கிரெடிட் கார்டு இணைப்பு
சில
நாட்களுக்கு முன்பு, பிரதமர் கிசான் யோஜனாவின் கீழ் மக்களுக்கு நிதி
உதவி பெறுவதற்காக மத்திய அரசு ஒரு பெரிய
அறிவிப்பை வெளியிட்டது. கிசான் கிரெடிட் கார்டை பிரதமர் கிசான் யோஜனாவுடன் இணைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இப்போது எந்த விவசாயியும் கே.சி.சி.யின்
(Kisan Credit Card) கீழ்
விவசாயத்திற்காக கடன் பெறலாம்.
மேலும்
படிக்க....
30% கூடுதல் மகசூல் வேண்டுமா? - ஒற்றை நாற்று நடவு முறையை மேற்கொள்ளுங்கள்! - வேளாண்துறை அறிவுரை!!
இனி இவர்களுக்கெல்லாம் PM Kisan திட்டத்தில் கீழ் 6000 ரூபாய் கிடைக்காது!! புதிய நடைமுறைகள் என்ன?
PMFBY - பிரதமர் பயிர் பாதுகாப்பு திட்டத்தில், விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்த அரசு!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி
மேலும் அறிந்துகொள்ள
TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை
தொடரந்து காணுங்கள்
நன்றி......
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...