PM-Kisan: பிஎம் கிசான் திட்டத்தின் 9-வது தவணை -ரூ.19,500 கோடியை பிரதமர் மோடி இன்று விடுவிக்கிறார்!!


விவசாயிகளுக்குப் பிரதமர் கிசான் திட்டத்தின் அடுத்த தவணை ரூ.19,500 கோடியைப் பிரதமர் நரேந்திரமோடி இன்று விடுவிக்கிறார்.


பிரதமரின் கிசான் திட்டம்


விவசாயிகளின் நலன்கருதி மத்திய அரசு பல்வேறுத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதில் முக்கியமானது பிரதமரின் கிசான் திட்டம்(PM Kisan Scheme) .



விவசாயிகளுக்கு ரூ.6000 நிதியுதவி


இந்த பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2000 வீதம் நிதியதவி வழங்கப்படுகிறுது. இது, மூன்று தவணையாக ஆண்டுக்கு மொத்தம் ரூ. 6000 நிதியுதவி வழங்கப்படுகிறது.


ரூ. 1.38 லட்சம் கோடி நிதி உதவி


இந்தத் திட்டத்தில் இதுவரை ரூ. 1.38 லட்சம் கோடி நிதி உதவி, விவசாயக் குடும்பங்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள் இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர். இதன் காரணமாக, பிரதமரின் கிசான் திட்டத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.


8 தவணைகள்  விடுவிப்பு


நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2,000 வீதம் ஏற்கெனவே 8 தவணைகள் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுவிட்டது. அதாவது, நாடு முழுவதும் விவசாயிகளுக்கு ரூ.1.38 லட்சம் கோடி செலுத்தப்பட்டுள்ளது.



இன்று முதல் 9-வது தவணை


இந்நிலையில், பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் 9-வது தவணை நிதியை, பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகல் 12:30 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக விடுவிக்கிறார்.


ரூ.19,500 கோடி விடுவிப்பு


இதன்படி 9.75 கோடிக்கும் அதிகமான விவசாய குடும்பங்களுக்கு சுமார் 19 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக பரிமாற்றம் செய்யப்படும்.


கலந்துரையாடல்


இந்த நிகழ்ச்சியின்போது விவசாய பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடுவதுடன், நாட்டு மக்களிடமும் உரையாற்றுகிறார். மத்திய வேளாண் அமைச்சரும் இந்த விழாவில் கலந்து கொள்கிறார்.


பணம் வந்துவிட்டதா? இல்லையா?


இத்திட்டத்தில் நிதியுதவி பெறுவதற்கு பயனாளியின் பெயர் இணைக்கப்பட்டுள்ளதா என்று தெரிந்துகொள்வதற்கு pmkisan.gov.in இணையதளத்தில் சென்று பார்க்கலாம்.


அதில் மெனு பாரில் உள்ள ’farmers corner’ என்ற வசதியை கிளிக் செய்து அதில் 'beneficiary list' என்பதில் உள்நுழைய வேண்டும்.


பிறகு உங்களது மாநிலம், மாவட்டம், பிரிவு, கிராமத்தின் பெயர் போன்ற விவரங்களைப் பதிவிட வேண்டும்.


பின்னர் 'Get information' என்பதை கிளிக் செய்து பார்த்தால் இத்திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகளின் பெயர் விவரங்களை நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.


புகார் அளிக்க


விவசாய நிதியுதவித் திட்டத்தின் கீழ் தகுதியுள்ளவர்களுக்குப் பணம் வந்துசேரவில்லை என்றால் அரசின் ஹெல்ப் லைன் எண்களுக்கு அழைத்து புகார் தெரிவிக்கலாம்.



இலவச உதவி எண்கள்


அதேபோல, மின்னஞ்சல் மூலமாகவும் புகார் செய்யலாம். PM Kisan Toll free Number: 18001155266 PM Kisan Helpline Number: 155261 PM Kisan Landline Number: 011-23381092, 23382401 PM Kisan Helpline:0120-6025109 Email முகவரி: pmkisan-ict@gov.in மூலமாகவும் புகார் செய்யலாம்.


மேலும் படிக்க....


வீட்டில் உள்ள வீணான தக்காளியை வைத்து தக்காளியை வளர்ப்பது எப்படி?


PM Kisan விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கில் ₹2000!! மத்திய அரசு வெளியிட்ட ஹேப்பி நியூஸ்...!!


விவசாயிகளுக்கு ரூ.1.18 கோடி ஒதுக்கீடு!! மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள்!!


மேலும் தொடர்புக்கு....


எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடரந்து காணுங்கள் நன்றி......

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post