உடலுக்கு குளுமை தரும் வாழை நாரில் சேலைகள் உற்பத்தி முழு விபரம் இதோ!!
தமிழகத்தின் மிக முக்கியமான பணப் பயிர்களில் வாழையும் ஒன்று. புயல் மாதிரியான இயற்கைச் சீற்றங்களால் சில நேரங்களில் நஷ்டம் ஏற்பட்டாலும் கூட, பெரும்பாலும் நல்ல வருமானம் தரக்கூடியது.
வாழை என்றால் உடனே நம் நினைவுக்கு வருவது வாழைப்பழம் தான் என்ற போதிலும் வாழையில் இலை, காய், பூ, தண்டு என வாழையின் எந்த ஒரு பாகமும் வீண் போவதில்லை. அதன் அனைத்துப் பாகங்களும் ஏதோ ஒரு வகையில் அனைவருக்கும் பயன்படுகிறது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு காரணமாக நிலம், நீர், காற்று மாசு ஏற்படாத பொருட்களுக்கு தட்டுப்பாடு கூடி வருகிறது. தற்போது வாழை நார் மூலம் பல்வேறு வகையான பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யப்படுகின்றன.
வாழை நார்களில் இருந்து அலங்காரத் தொப்பிகள், கூடைகள், பாய்கள், மிதியடி, திரைச்சீலைகள் போன்ற பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்து சந்தைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.
மேலும் வாழை நார்கள் பொதுவாகவே தண்ணீரின் மேல் மிதக்கும் எண்ணெயை அதிக அளவில் உறிஞ்சும் தன்மை கொண்டவை என்பதால் வாழை நார்களைப் பயன்படுத்தி கடலில் கலக்கும் எண்ணெயை எளிதில் பிரிக்க முடியும் என்று ஆய்வுகளின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
வாழை
நார் புடவைகள்
வாழை நார் சேலை என்பது இப்போது வந்த புது மாடல் இல்லை. இலங்கையில் ராவணன் சீதா தேவியைக் கடத்தி வைத்திருந்தார். ராவணன் கொடுத்த சேலையை அணியக்கூடாது என்று எண்ணிய சீதா தேவி, வாழை மரத்தில் உள்ள நாரை எடுத்து சேலை நெய்ததாகக் சொல்லப்படுகிறது.
அனைத்து வகையான வாழை
நாரை வைத்து புடவையை நெய்வது மிகவும் கடினம். செவ்வாழை, நேந்திரம் வகை வாழைநார்களே இதற்கு
உகந்தவை ஆகும்.
நார்
பிரித்தெடுத்தல்
வாழையின்
தண்டுப் பகுதியை அறுவடை செய்தப் பின்னர், 48 மணி நேரத்தில் நார் பிரித்தெடுத்தல் நடை
பெற வேண்டும். வாழை நார் பிரித்து எடுக்க இயந்திரம் உள்ளது. 8 மணி நேரத்தில்
30 கிலோ வாழை நார்களை எடுக்க முடியும். ஒரு மரத்தில் இருந்து 300 கிராம் நார்களை பிரித்து எடுக்க முடியும்.
வாழை
நூல் உற்பத்தி
வாழை மட்டை நார் எடுக்கும் போது சிறு, சிறு நூலாக இருக்கும். அவற்றைத் தண்ணீரில் ஊறவைத்து சீப்பு வைத்துக் கோதி விடவேண்டும். நாரின் இரு முனைகளிலும் கயிற்றில் கட்டி வைக்க வேண்டும்.
குறைந்தது இரண்டு குடம் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் 100 கிராம் அளவிற்கு தேவைப்படும் கலர் சாயப்பொடியுடன் ஒரு கிலோ உப்பு சேர்த்து சாயம் உருவாக்க வேண்டும். ஐந்து நிமிடங்கள் கட்டப்பட்ட நாரில் அதனை ஊற வைக்க வேண்டும்.
சாயம் ஏற்றப்பட்ட நாரை அரை மணி நேரங்கள் உலர வைத்து நூலாகப் பிரிக்க வேண்டும். பின்னர் நமக்கு தேவையான பொருட்களை வாழை நூலில் இருந்து எளிதில் தயார் செய்து கொள்ள முடியும்.
வாழை நாரால் தயாரிக்கப்படும் புடவைகள் எடை குறைவாகவும், மிருதுவாகவும், அதிக ஈரத்தன்மை உறிஞ்சும் தன்மை கொண்டதாகவும் இருக்கும் தன்மை கொண்டவை.
இதனால் வாழைநார் புடவைகளுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வாழை நாருடன், பருத்தியையும் கலந்து தயாரிக்கப்படும் புடவைகளுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு அதிகமாக உள்ளது.
பருத்திப் புடைவையை நெய்வதற்கு ஒரு நாள் தேவைப்படும் என்றால், வாழை நார்ப் புடவையை நெய்வதற்கு குறைந்தது மூன்று நாட்கள் தேவைப்படுகிறது. இது மாதிரியான ஆர்கானிக் சேலைகள் உடல் சூட்டைக் குறைத்து குளுமையாக வைத்திருக்க உதவுகின்றன. வாழை நார்ப் புடவைகள் தற்போது இணையத்திலும் கிடைக்கின்றன.
மேலும்
படிக்க....
விவசாயிகள் வங்கிக் கணக்கில் பருவ மழை நிவாரணமாக ரூ.20,000 வரவு வைக்கப்படும்!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint
WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
1 Comments
Super
ReplyDeleteஉங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...