ஒரே ஆண்டில் 1 லட்சம் விவசாய மின் இணைப்பு!! தமிழகம் வளர்ச்சி அடையும் முதல்வர் ஸ்டாலின் பேச்சு!!
ஒரே ஆண்டில் 1 லட்சம் விவசாய மின் இணைப்பு வழங்கப்பட்டு இருப்பதால், வேளாண் உற்பத்தி அதிகரித்து, தமிழகம் வளர்ச்சி அடையும் என முதல்வர் ஸ்டாலின் பேசினார். தமிழக மின் வாரியம் 2021 - 22-ல் ஒரே ஆண்டில் 1 லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு வழங்கியுள்ளது.
ஒரு லட்சமாவது மின் இணைப்பிற்கான ஆணையை, கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை விவசாயி கண்ணுபிள்ளையிடம் வழங்கினார். பின் மின் வாரியத்தின் தஞ்சை, திருவண்ணாமலை, கரூர் ஆகிய மூன்று புதிய மண்டலங்களை துவக்கி வைத்தார். தொடர்ந்து, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, மாநிலம் முழுதும் மின் இணைப்பு பெற்ற விவசாயிகளுடன், ஸ்டாலின் கலந்துரையாடினார்.
இந்நிகழ்ச்சியில், ஸ்டாலின் பேசியதாவது
ஓராண்டிற்குள் ஒரு லட்சம் பேருக்கு மின் இணைப்பு கொடுத்துவிட முடியுமா என்ற சந்தேகம் பலருக்கு இருந்தது, ஏன் எனக்கே இருந்தது, இத்திட்டத்தை 2021 செப்., 23ல் துவக்கி வைத்தேன். ஓராண்டு முடியும்முன் ஒரு லட்சம் பேருக்கு மின் இணைப்பு தரப்பட்டுள்ளது.
இதனால், 1 லட்சம் குடும்பம் பயன் அடையும், அவர்களின் வேளாண் உற்பத்தியால் இந்த மாநிலம் அடைய உள்ள வளர்ச்சி என்ன என்பதை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும். தி.மு.க., அரசு, 1990 நவ., 19ல் அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் என்று அறிவித்தது.
துரித நடவடிக்கைகடந்த 2001 - 2006 வரை, 1.62 லட்சம்; 2006 - 11 தி.மு.க., ஆட்சியில், 2.09 லட்சம் இலவச விவசாயி மின் இணைப்புகள் வழங்கப்பட்டன. குறிப்பாக, 2010 - 11ல், 77 ஆயிரத்து 158 இணைப்புகள் வழங்கப்பட்டன.
கடந்த 2011 - 2021 வரையிலான 10 ஆண்டுகால ஆட்சியில், 2.21 லட்சம் விவசாய மின் இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டன. 2021 மார்ச் நிலவரப்படி, 4.53 லட்சம் விவசாய மின் இணைப்பு கோரும் விண்ணப்பங்கள் நிலுவையில் இருந்தன.
இந்த குறையை தீர்க்க, 2021 - 22ல், ஒரு லட்சம் மின் இணைப்பு வழங்க, துரித நடவடிக்கை எடுக்கப்பட்டது.கொரோனா தொற்று, வட கிழக்கு பருவ மழை போன்ற இடர்களுக்கு இடையிலும், விவசாய மின் இணைப்பு வழங்கும் பணி தொய்வின்றி செய்து முடிக்கப்பட்டுள்ளது.
இதைச் சேர்த்து, தமிழகத்தில் வேளாண் தொழில் செய்வோரின் எண்ணிக்கை, 21.80 லட்சத்தில் இருந்து, 22.80 லட்சமாக உயர்ந்திருக்கிறது. ஒரு லட்சம் மின் இணைப்புகளால் வேளாண் நிலப்பரப்பு 2.13 லட்சம் ஏக்கராக அதிகரித்துள்ளது.இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, எரிசக்தி துறை செயலர் ரமேஷ்சந்த் மீனா, மின் வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி மற்றும் மின் வாரிய உயரதிகாரிகள், விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.
மேலும்
படிக்க....
10.89 லட்சம் விவசாயிகளுக்கு 2020-21 பயிர் காப்பீடு இழப்பீட்டுத்தொகை ரூ.2285 கோடி விடுவிப்பு!!
PMFBY 2020-21 ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத்தொகை ரூ.183.13 கோடி விடுவிப்பு!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற
YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை
தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக
வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...