10.89 லட்சம் விவசாயிகளுக்கு 2020-21 பயிர் காப்பீடு இழப்பீட்டுத்தொகை  ரூ.2285 கோடி விடுவிப்பு!!


தமிழக அரசு எடுத்த தொடர் நடவடிக்கையால் 10.89 லட்சம் விவசாயிகளுக்கு 2,285 கோடி ரூபாய் பயிர் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு உள்ளது என வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.



பயிர் காப்பீடு இழப்பீடு தொகை அவரது அறிக்கை 


வெள்ளம் புயல் போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இழப்பீட்டுத் தொகையை விரைவாக பெற்றுத்தர தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.


கடந்த 2020 - 2021 ஆம் ஆண்டில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு திட்டத்தில் இழப்பீட்டுத் தொகை விரைவாக கிடைக்க காப்பீட்டு கட்டண மானியத்தில் மாநில அரசின் பங்குத் தொகை 1940 கோடி ரூபாய் காப்பீட்டு நிறுவனங்களுக்கு உரிய காலத்தில் அரசால் வழங்கப்பட்டுள்ளது.



மத்திய அரசு வழங்க வேண்டிய பங்குத்தொகையான 1118 கோடி ரூபாய் தொகையில் இதுவரை 660 கோடி ரூபாய் காப்பீட்டு நிறுவனங்களுக்கு விடுவிக்கப் பட்டுள்ளது. 


இதனால் 2020 - 21ல் ராபி பருவத்தில் காப்பீடு செய்யப்பட்ட கோடை கால பயிர்களில் மகசூல் இழப்பால் பாதிக்கப்பட்ட 1.15 லட்சம் விவசாயிகளுக்கு 10 நாட்களில் மட்டும் 183.13 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.


தமிழக அரசு எடுத்த தொடர் நடவடிக்கைகளால் 2020 - 21ம் ஆண்டில் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளில் 10.89 லட்சம் விவசாயிகளுக்கு 2285 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. 



மேலும் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு 200 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகையை வழங்க தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.



 

மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS

மேலும் படிக்க....


PMFBY 2020-21 ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத்தொகை ரூ.183.13 கோடி விடுவிப்பு!!


PM கிசான் போன்ற திட்டங்கள் விவசாயிகளுக்கு புதிய பலத்தை அளித்து வருகின்றன என் பிரதமர் பெருமிதம்!!


வேம்புவைக்கொண்டு பயிர்களை தாக்கும் பல்வேறுவகையான பூச்சிகளை கட்டுப்படுத்த ஆலோசனைகள்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post