Random Posts

Header Ads

PM கிசான் போன்ற திட்டங்கள் விவசாயிகளுக்கு புதிய பலத்தை அளித்து வருகின்றன என் பிரதமர் பெருமிதம்!!



பி.எம் கிசான் போன்ற திட்டங்கள் விவசாயிகளுக்கு புதிய பலத்தை அளித்து வருகின்றன என் பிரதமர் பெருமிதம்!!


பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஒரு மாநாட்டில் உரையாற்றிய போது அவர். ​​பிரதமர் கிசான் யோஜனா மற்றும் விவசாயம் தொடர்பான பிற திட்டங்கள், நமது நாட்டின் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு புதிய பலத்தை அளித்து வருகின்றன என்று தெரிவித்தார்.

 


விவசாயிகளின் பலத்தை எடுத்துரைத்த பிரதமர் மோடி, விவசாயிகள் வலுப்பெறும் போது நாடு தானாகவே முன்னேறும் என்று கூறினார். பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தி குறிப்பில், "நாடு நமது விவசாயிகளால் பெருமை கொள்கிறது. 


அவர்கள் வலுவாக இருந்தால், புதிய இந்தியா வளமானதாக இருக்கும். நான் மகிழ்ச்சி அடைகிறேன். பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனா மற்றும் விவசாயம் தொடர்பான பல்வேறு திட்டங்கள் நாட்டின் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு புதிய பலத்தை கொடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

 


மேலும் அவர் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டம் மற்றும் பிற திட்டங்கள் பற்றிய தகவல்களையும் மக்களிடையே பகிர்ந்து கொண்டார். பகிரப்பட்ட தகவல்களின்படி, இந்தியாவில் உள்ள சுமார் 11.3 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு ரூ.1.82 லட்சம் கோடி நேரடியாகப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 

தொற்றுநோய் காலத்தில் ரூ.1,30 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரி கிசான் யோஜனா திட்டத்தின் கீழ், அனைத்து விவசாயிகளுக்கும் ஆண்டுக்கு 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது மற்றும் தொற்றுநோய்களின் போது, ​​1,30 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது, 


இது சிறு விவசாயிகளுக்கு மிகவும் உதவியாக இருந்தது. மேலும், விவசாய அடிப்படைக் கட்டமைப்புத் திட்டங்களான மொத்தம் 11,632 திட்டங்களுக்கு ரூ.8,585 கோடி கடனுதவி அளிக்கப்பட்டுள்ளதையும் அவர் குறிப்பிட்டார்.

 


அனைத்து ஏபிஎம்சி மண்டிகளும் (சந்தைகள்) டிஜிட்டல் முறையில் இணைக்கப்பட்டுள்ளன, அதில் 1.73 கோடி விவசாயிகள் பதிவு செய்துள்ளனர் மற்றும் eNAM இல் ரூ 1,87 லட்சம் கோடி வணிகம் நடந்துள்ளது என்றும் பிரதமர் அடிக்கோடிட்டுக் காட்டினார் .

 

(eNAM) நேஷனல் அக்ரிகல்ச்சர் மார்க்கெட் (National Agricultural Market) என்பது ஒரு இந்திய மின்னணு வர்த்தக இணையதளமாகும், இது விவசாயப் பொருட்களுக்கான ஒருங்கிணைந்த தேசிய சந்தையை உருவாக்குவதற்கு தற்போதுள்ள APMC மண்டிகளை இணைக்கிறது.

 

அவரது, இந்த உரை விவசாயிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அவர் தெரிவித்த தகவல்கள், விவசாயிகளை ஊக்கமளித்து, அவர்களை பயனடையச் செய்யும் என்று நம்பப்படுகிறது என்றார்.



மேலும் படிக்க....


PM Kisan புதிய அப்டேட் e_KYC இல்லாமல் 11-வது தவணையை பெற வாய்ப்பு!!


SMAM திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு விவசாய இயந்திரங்கள் வாங்க 50% மானியம்!!


நவீன விவசாய தொழில்நுட்பத்தில் நானோ உரங்கள் பயன்பாடு செயல் விளக்கம்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments