வேம்புவைக்கொண்டு பயிர்களை தாக்கும் பல்வேறுவகையான பூச்சிகளை கட்டுப்படுத்த ஆலோசனைகள்!!
நோய் கட்டுப்பாட்டில் வேம்பு, வேம்பிலிருந்து கிடைக்கும் இலை, கொட்டை, எண்ணெய் முதலியவற்றை பயிர்ப் பாதுகாப்பில் பயன்படுத்துகிறோம். ஆனால் இவற்றின் சிறப்பை உணர்ந்து பயிர்ப் பாதுகாப்பு மருந்துகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள் வேப்பெண்ணையுடன் திரவ ஒட்டுவான்களைக் கலந்து பயிர்ப் பாதுகாப்பிற்காக பல பெயர்களில் எடுத்து எண்ணெய் தயாரித்து அதனை ஆராய்ந்ததில் புதிய லிமோனாய்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு வேப்பெண்ணெயில் அசாடிராக்டின், சலனின், 6-ஓ அசெட்டைல் இனிம்பாண்டியோல், 3-டெஸ். அசெட்டைல் சலனின் என்பவை கண்டறியப்பட்டுள்ளன. டி அசட்டைல் அசாடிராக்டினோல் எனும் இரசாயனப் பொருளும் வேப்பெண்ணெயில் இருப்பதும் அதற்கு அசாடிராக்டின் போன்று பூச்சி தோலுரித் தடுப்பு பண்பு உண்டு என்றும் 1986-ம் ஆண்டு ஹீலியாதிஸ் வைரசென்ஸ் என்றும் புழுவில் சோதனை செய்து கண்டுபிடிக்கப்பட்டது.
நோய் கட்டுப்பாட்டில் வேம்பு
வேப்பம் புண்ணாக்கு தென்னையில் ஏற்படும் தஞ்சாவூர் வாடல் நோயை கட்டுப்படுத்த உதவுகிறது. தென்னை மரத்திற்கு இடப்படும் உரங்களுடன் மரம் ஒன்றிற்கு 5 கிலோ கிராம் வீதம் வேப்பம் புண்ணாக்கை இடவேண்டும்.
இதனால் மண்ணில் உள்ள வாடல் நோயை ஏற்படுத்தும் பூஞ்சாணத்திற்கு எதிரிப் பூஞ்சாணங்கள் அதன் எண்ணிக்கையில் பல மடங்கு பெருகி வாடல்நோயைக் குறைக்கின்றன.
வேப்பம் புண்ணாக்கு நெல் வயலுக்கு இடுவதால் பழுப்பு இலைப்புள்ளி நோய் குறைகிறது. குலைநோய், இலையுறை கருகல் ஏற்படுவதை தாமதப்படுத்துகிறது.
வெற்றிலையில் தோன்றும் வாடல் நோயினைக் கட்டுப்படுத்த கொடி இறக்கிக்கட்டிய 15, 55, 100வது நாட்களில் மும்முறை வேப்பம் புண்ணாக்கை இடவேண்டும். வெற்றிலையின் வாடல் நோயின் தீவிரத்தைக் குறைப்பதற்கு எக்டருக்கு 3.75 டன் வேப்பந்தழையை பட்டத்தில் இட்டு சேறு பூசுதல் வேண்டும்.
நெல் நாற்றங்காலில் வேப்பம் புண்ணாக்கை எக்டருக்கு 375 கிலோ கிராம் வீதம் கடைசி உழவின் போது மண்ணில் கலந்து நாற்றங்காலை தயாரித்தால் வளரும் நாற்றுகளில் நோய் மற்றும் பூச்சியினால் ஏற்படும் பாதிப்பு குறைவாக உள்ளது.
வேப்பெண்ணெய் (3 சதம்) மற்றும் வேப்பங்கொட்டைச்சாறு (5 சதம்) ஆகியவற்றைத் தெளிப்பதால் நெல்லின் கதிர் உறை அழுகல் நோய், செம்புள்ளி நோய், நிலக்கடலை துருநோய் முதலியவை கட்டுப்படுத்தப்படுகின்றன.
வேப்பெண்ணெய் 3 சதம் மற்றும் வேப்பங்கொட்டைச்சாறு 5 சதக் கரைசலை நெற்பயிரின் மீது தெளிப்பதால் நெல் துங்ரோ நோயைப் பரப்பும் பச்சை தத்துப்பூச்சியின் எண்ணிக்கை குறைகின்றது.
வேப்பெண்ணெய் ஒரு சத அடர்வில் நெற்பயிரில் தெளிப்பதால் மைக்கோபிளாஸ்மா என்ற உயிரியால் உண்டாகும் மஞ்சள் குட்டை நோயின் அளவு குறைகின்றது.
பச்சைப் பயிரியில் வேப்ப எண்ணெயைத் 3% தெளித்து மஞ்சள் தேமல் நோய் பரவுவதைக் குறைக்கலாம். வேப்பெண்ணெய் 3% தெளிப்பதன் மூலம் உளுந்தின் சாம்பல் நோயைக் கட்டுப்படுத்தலாம்.
வேப்பம் புண்ணாக்கை இலைகளின் மீது தெளிப்பதால் எலுமிச்சையில் தோன்றும் பாக்டீரியச் சொறிநோய் கட்டுப்படுத்தப்படுகின்றது. வேப்ப இலைச் சாற்றை (20 கிராம் – 100 மில்லி லிட்டர் தண்ணீர்) தெளித்தால் ஐந்து நாட்களுக்கு பழம் பாதுகாக்கப்படுகிறது.
வாழைத்தாரை ஒரு சத வேப்பெண்ணையிலோ அல்லது 10 சத துளசி இலைச் சாறிலோ 3 நிமிடம் வைத்து, அதன் பின் சேமித்து வைத்தால் கொலிட்டோட்ரைக்கம், போட்ரியோ டிப்ளோடியா போன்ற பூஞ்சாணங்களின் தாக்குதல் குறைந்து அதிக நாட்களுக்கு சேமித்து வைக்க முடிகிறது.
வேப்பெண்ணெய் (3 சதம்), வேப்பங்கொட்டைப் பருப்புச்சாறு (5 சதம்) தெளிப்பதால் நெல்லில் இலை உறை அழுகல், இலை உறை கருகல், பாக்டீரியா இலைக்கருகல், துங்ரோ நோய்களின் தாக்குதல் குறைகிறது. இத்தகவலை, தேவகோட்டை வேளாண்மை உதவி இயக்குநர் தெரிவித்தார்.
மேலும்
படிக்க....
தமிழகத்தில் இன்றும் கன மழை!! தணியும் கோடை வெப்பம் வானிலை மையம் தகவல்!!
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட செயலாக்க குழு கூட்டம்!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற
YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை
தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக
வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...