கோடை மழையினை பயன்படுத்தி கோடை உழவு செய்ய வேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனைகள்!!
அரியலூர் மாவட்டத்தில் சராசரியாக ஆண்டு தோறும் 1,00,000 எக்டேரில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இவற்றில் 38000 எக்டேர் பாசன வசதியுடனும், மீதமுள்ள 62,000 எக்டேர் மானாவாரிப் பயிராகவும் சாகுபடி செய்யப்படுகிறது.
அரியலூர் மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழையளவு 954 மில்லி மீட்டர் ஆகும். கோடைகாலத்தில் சராசரியாக 83 மில்லி மீட்டர் மழையளவு பெறப்படுகிறது. தற்சமயம் அரியலூர் மாவட்டம் முழுவதும் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. விவசாயிகள் இம்மழையினை பயன்படுத்தி கோடை உழவு செய்யலாம்.
கோடை உழவு செய்வதினால் பின்வரும் பயன்களைப் பெறலாம். கோடை உழவு செய்வதினால் மண்ணின் மேற்பரப்பில் உள்ள கடினப்பகுதி உடைக்கப்பட்டு, மண்ணின் நீர் பிடிப்புத் தன்மை அதிகரிக்கரிக்கிறது. மேலும் நிலத்தடி நீர்மட்டம் உயர ஏதுவாகிறது.
கோடை உழவு செய்வதினால், மண்ணானது ஈரமும் மற்றும் காய்ச்சலுமாக இருப்பதினால் மண்ணின் அமைப்பு மேம்படுத்தப்படுகிறது.கோடை உழவு செய்த வயலில், அங்கக மற்றும் தொழு உரம் இடுவதினால் மண்ணில் நுண்ணுயிர்கள் எண்ணிக்கை பல்கி பெருகி மண்ணின் வளம் மேம்படுத்தப்படுகிறது.
கோடை உழவு செய்வதினால் களைக்கொல்லி மற்றும் பூச்சிக்கொல்லிகளின் எஞ்சிய நஞ்சு சிதைவுற்று மண்ணிற்கு பாதிப்பில்லாமல் பாதுகாக்கப்படுகிறது. கோடை மழை, வளி மண்டலத்திலுள்ள வளிமண்டல நைட்ரேட்டுடன் இணைந்து பெறப்படுவதினால் மண்ணின் வளம் மேம்படுத்தப்படுகிறது.
கோடை உழவு செய்யும் போது, மண்ணில் உள்ள பூச்சிகள், கூட்டுப் புழுக்கள், அவற்றின் முட்டைகள், பூஞ்சாணம் மற்றும் நோய் பரப்பக் கூடிய பாக்டீரியாக்கள், நூல் புழுக்கள் இவை அனைத்தும் முழுமையாக மண்ணின் மேற்பரப்பிற்கு கொண்டு வரப்பட்டு அழிக்கப்படுகிறது.
கோடை உழவின் போது பயிர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய களைகள், அவற்றின் விதைகள் முழுவதுமாக மக்கி மண்ணிற்கு உரமாக மாற்றப்படுகிறது. செங்குத்து மற்றும் சரிவாக உள்ள வயல்களில் குறுக்கும் நெடுக்குமாக கோடை உழவு செய்வதால் மண் அரிமானம் தடுக்கப்பட்டு மண்ணின் வளம் பாதுகாக்கப்படுகிறது.
அறுவடை செய்யப்பட்ட வயல்களில் உள்ள அடித்தாள், வேர்கள், கட்டைகள் போன்றவற்றை கோடை உழவின் போது மடக்கி உழுவதால் மண்ணின் அங்ககச்சத்துக்கள் அதிகரிக்கிறது. களைகள் கட்டுப்படுத்தப்படுகிறது. பயிருக்கு தீங்கு செய்யக் கூடிய கூட்டுப்புழுக்கள் வெளிக்கொணரப்படும். அவற்றை கொக்கு, நாரை போன்ற பறவைகள் உண்டு அழிக்கின்றன.
இத்தகைய பயன்தரக்கூடிய கோடை உழவினை அனைத்து விவசாயிகளும் தற்போது பெய்துள்ள மழையினை பயன்படுத்தி உழவு செய்யுமாறு வேளாண்மை இணை இயக்குநர் இரா.பழனிசாமி கேட்டுக் கொண்டார்.
மேலும்
படிக்க....
உளுந்து மற்றும் பாசிப்பயறுகளில் சத்து பற்றாக்குறை அறிகுறிகள் மற்றும் மேலாண்மை முறைகள்!!
தென்னை சாகுபடியில் உரச்செலவு அதிகரிப்பதை கட்டுப்படுத்த பசுந்தாள் உரம்!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற
YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை
தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக
வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...