உளுந்து மற்றும் பாசிப்பயறுகளில் சத்து பற்றாக்குறை அறிகுறிகள் மற்றும் மேலாண்மை முறைகள்!!
உளுந்தில் கந்தகச் சத்து பற்றாக்குறை அறிகுறிகள்
பற்றாக்குறை உள்ள செடிகள் மஞ்சள் நிறமாகக் காணப்படும். முதலில் புதிதாக வளர்ந்த இலைகள் பாதிக்கப்படும். படிப்படியாக முழு செடியுமே நிறம் மாறி மஞ்சள் நிறமாக மாறிவிடும்.
மேலாண்மை முறைகள்
கால்சியம் சல்பேட் 0.5-1.0% இலை வழி தெளிப்பாக தெளிக்கவும்.
உளுந்தில் துத்தநாகச்சத்து பற்றாக்குறை அறிகுறிகள்
இளம் இலைகள் சிறியவையாக தோன்றும். இலைகள் வெளிர் மஞ்சள் நிறமாக மாறும். கணுவிடைப்பகுதிகள் குறுகிக்காணப்படும், சிறிய இலைகள் நுனியில் கொத்தாக வளர்ந்து கொத்து இலை நோய் போன்று காணப்படும்.
மேலாண்மை முறைகள்
துத்தநாக சல்பேட் 0.5% (5 கிராம்/லிட்டர்) கரைசலை இலை வழியாக 10 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும்.
உளுந்தில் போரான் சத்து பற்றாக்குறை அறிகுறிகள்
தண்டினுடைய மேல் கணுவிடைப்பகுதிகள் சிறுத்து காணப்படும். இது செடிகளுக்கு ரோஜா பூ இதழ் போன்ற தோற்றத்தை அளிக்கும். வளர்முனைக்கு அருகில் இருக்கும் மேல் இலைகள் மஞ்சள் நிறமாகவும், சில சமயங்களில் சிவப்பு நிறமாகவும் காணப்படும்.
இலைமுனையில் அறிகுறிகள் அதிகமாக தோன்றும், அடி இலைகள் பச்சையாகவே இருக்கும் இலைகள் சுருக்கமுடன் இருக்கும், இலைகள் சிறியதாக மாறிவிடும்.
மேலாண்மை முறைகள்
போராக்ஸ் 0.2% இரண்டு வார கால இடைவெளியில் இலை தெளிப்பாக தெளிக்கவும். இது பொதுவாக சுண்ணாம்புச்சத்து அதிகமுள்ள மண்ணில் தோன்றும்.
பாசிப்பயிரில் தழைச்சத்து பற்றாக்குறை அறிகுறிகள்
முதிர்ந்த இலைகளில் அறிகுறிகள் தென்படும். இலைகள் மஞ்சள் நிறமாக இருக்கும். செடிகளில் இலைகள் வளர்வது குறைந்து காணப்படும். தண்டுகள் மெல்லியதாகவும், நோய்வாய்ப்பட்டது போல் இருக்கும்.
கிளைகள் குறைந்து காணப்படும். இலைகள் மங்கலான பச்சை நிறத்திலேயே இருக்கும். முதிர்ந்த இலைகள் மஞ்சள் நிறமாக மாறிவிடும் மற்றும் முதிராத நிலையில் இறந்து விடும்.
மேலாண்மை முறைகள்
இலை தெளிப்பு – டி.ஏபி 2% ஒரு வார கால இடைவெளியில் தெளிக்கவும்.
பாசிப்பயிரில் சாம்பல்சத்து பற்றாக்குறை அறிகுறிகள்
இலைகளின் விளிம்புகளில் மஞ்சள் நிறத்திட்டுக்கள் தென்படும். பிறகு இந்த திட்டுகள் ஒன்று சேர்ந்து இலைகளை மஞ்சள் நிறமாக மாற்றிவிடும். பாதிக்கப்பட்ட இடங்களில் கரும்புள்ளிகள் தோன்றும்.
இலைகள் சுருண்டு காணப்படும். இலையின் அடிப்பாகத்தில்தான் அறிகுறிகள் தோன்றும். மஞ்சள் நிறமாற்றம் இலையின் அடியில் காணப்படும் மேல் உள்ள இலைகள் பச்சை நிறத்திலேயே இருக்கும்.
விளிம்புகள் மற்றும் இலை நரம்பின் இடையில் மங்கலான மஞ்சள் நிறத்தில் அறிகுறிகள் தோன்றும் இலைகள் காய்ந்து உதிர்ந்து விடும்.
மேலாண்மை முறைகள்
1% முஊட (பொட்டா’;) ஒரு வாரகால இடைவெளியில் நிவர்த்தி வரை தெளிக்கவும்.
பாசிப்பயிரில் சுண்ணாம்புச்சத்து பற்றாக்குறை அறிகுறிகள்
முனையிலுள்ள முதல் இலைகள் காய்ந்து, குறுக்கே வளர்ந்து, நிறம் நீக்கிய கீற்றை போன்று இலையின் விளிம்பைச் சுற்றி உருவாகும். இலை நரம்புகளின் இடையில் உள்ள திசுக்களில் வார்ப்பு காணப்படும்.
நுனி மொட்டுகள் சீர் குலைந்தும், இலைக்காம்புகள் ஒடிந்தும் இருக்கும். முதல் இலைகள் மிகவும் மெல்லியதாக மாறி உதிர்ந்து விடும்.
மேலாண்மை முறைகள்
கால்சியம் சல்பேட் 1% இரண்டு வார கால இடைவெளியில் தெளிப்பாக தெளிக்கவும்.
மேலும்
படிக்க....
சொர்ணவாரி பருவத்திற்கு ஏற்ற நெல் ரகங்கள் இருப்பு வைக்க நடவடிக்கை!!
பயிர்களைத் தாக்கும் பூச்சிகள் மற்றும் நோய்களை தடுக்கும் தாவர பூச்சிக் கொல்லிகள்!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற
YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை
தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக
வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...