சொர்ணவாரி பருவத்திற்கு ஏற்ற நெல் ரகங்கள் இருப்பு வைக்க நடவடிக்கை!!


செங்கல்பட்டு மாவட்டத்தில் தற்போது அனைத்து வட்டாரங்களிலும் சம்பா மற்றும் நவரை பருவ நெற்பயிர் அறுவடை நடந்துக்கொண்டிருக்கும் நிலையில், சொர்ணவாரி பருவ நெல் சாகுபடிக்கான ஆயத்த பணிகள் விவசாயிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 



நெல் சாகுபடிக்கு நாற்றங்கால் தயார் செய்தலும் மற்றும் பருவத்துக்கேற்ற இரகங்களை தேர்வு செய்வதும் மிக முக்கியமானதாகும். செங்கல்பட்டு மாவட்டத்தில் சொர்ணவாரி பருவதில் CO 51, ADT 43, ADT 37 போன்ற இரகங்கள் அதிகமாக பயிரிடப்பட்டு வருகிறது. 


மேலும் ADT 36, ASD 16, ASD 18, MDU 5, IR 50, CO 47, ADT (R) 45, ADT (R) 47, ADT (R) 48, CORH 3 போன்றவை சொர்ணவாரி பருவத்திற்கு ஏற்ற நெல் இரகங்களாகும். விவசாயிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும், தனியார் விற்பனை நிலையங்களிலும் மேற்கண்ட சான்று பெற்ற இரகங்கள் போதுமான அளவில் இருப்பு வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 



மேலும் ADT 37 பூச்சி மற்றும் நோய் தாக்குதலை தாங்கி வளரக்கூடியது மற்றும் நல்ல விளைச்சலை தரக்கூடிய இரகமாகும். எனவே, விவசாயிகள் நடப்பு சொர்ணவாரி பருவத்திற்கு தங்களுக்கு தேவையான நெல் விதைகளை அந்தந்த வட்டார வேளாண்மைத்துறை அலுவலர்கள் மற்றும் வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி பயன்பெறுமாறு வேளாண்மை இணை இயக்குநர் முனைவர் எல்.சுரேஷ் தெரிவித்தார்.


மேலும் படிக்க....


தென்னை சாகுபடியில் உரச்செலவு அதிகரிப்பதை கட்டுப்படுத்த பசுந்தாள் உரம்!


பயிர்களைத் தாக்கும் பூச்சிகள் மற்றும் நோய்களை தடுக்கும் தாவர பூச்சிக் கொல்லிகள்!


நெல் விதைப்பண்ணையில் அறுவடைக்கு பின் கவனிக்க வேண்டிய வழிமுறைகள்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post