நெல் விதைப்பண்ணையில் அறுவடைக்கு பின் கவனிக்க வேண்டிய வழிமுறைகள்!!
சான்று விதைகளை உற்பத்தி செய்யும் பொழுது, விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறையில் பதிவு செய்து வயல் தரம் தேறிய நெல் விதைப்பண்ணைகள் அறுவடை செய்யப்படும் போதும், அறுவடைக்குப் பின்பு கிடைக்கும் வயல்மட்ட விதைகளிலும் பின்வரும் நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.
இயந்திரத்தின் மூலம்
அறுவடை செய்யும் பொழுது பிற இரக நெல் கலப்பு ஏற்படுவதைத் தவிர்க்க அறுவடைக்கு முன்பு இயந்திரத்தின் நெல் கொள்கலனை நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.
அறுவடை
செய்யப்பட்ட நெல்மணிகளில் முதல் இரண்டு அல்லது மூன்று மூடையளவு விதைகளை விட்டுவிட்டு மீதமுள்ள
விதைகளை விதைக்காக பயன்படுத்த வேண்டும்.
புதிய கோணிப்பைகளில் மட்டுமே பிடிக்க வேண்டும். அறுவடை செய்யப்பட்ட வயல்மட்ட நெல் விதைகளை உடனடியாக காய வைத்து ஈரப்பதத்தை 13% சதவீதத்திற்கு கீழ் கொண்டு வர வேண்டும். நெல் விதைகளைக் காய வைக்கும் உலர் களத்தை முதலில் நன்கு சுத்தம் செய்து பிறகு நெல் விதைகளை உளரவைக்க வேண்டும்.
நன்கு
காய வைக்கப்பட்டு 13% சதவீதத்திற்கு கீழ் ஈரப்பதம் உடைய வயல்மட்ட நெல் விதைகளை புதிய
கோணிப்பகைளில் பிடித்து கோணிப்பைகளில் விதைச்சான்று எண், பயிர், இரகம், சான்றளிப்பு
நிலை போன்ற விபரங்களை எழுதி சணல் கொண்டு தைத்து ஈயக்குண்டு கோர்த்து சுத்தி அறிக்ககை
பெற ஸ்பெக்ஸ் (SPECS) இணைய தளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம்
பெற்ற பிறகு சம்பந்தப்பட்ட விதைச்சான்று அலுவலர் உங்கள் விதைக்குவியலை ஆய்வு செய்து
முத்திரை இட்டு நீங்கள் விரும்பும் அங்கீகாரம் பெற்ற விதைச் சுத்தி நிலையத்திற்கு எடுத்துச்
செல்ல சுத்தி அறிக்கை வழங்குவார். அதனைத் தொடர்ந்து தொடர் சான்றுப்பணி மேற்கொள்ளப்படும்.
மேற்கண்ட இந்த விதிமுறைகளை விதைப்பண்ணை விவசாயிகளும், விதை உற்பத்தியாளர்களும் முறையாக கடைபிடித்து
தரமான விதை உற்பத்தி செய்ய வேண்டும் என திண்டுக்கல், விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று
உதவி இயக்குநர் ம.ச.சந்திரமாலா தெரிவித்துள்ளார்.
மேலும்
படிக்க....
பாரம்பரிய பூச்சிக்கொல்லிகள் தயாரிப்பு முறைகள் மற்றும் பயன்படுத்தும் முறைகள்!!
விவசாயிகளுக்கு இலவசமாக 100% மானியத்தில் உரங்கள்! இந்த சிறப்பு திட்டம் மூலம் இலவசமாக உரம் பெறலாம்!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற
YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை
தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக
வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...