பயிர்களைத் தாக்கும் பூச்சிகள் மற்றும் நோய்களை தடுக்கும் தாவர பூச்சிக் கொல்லிகள்!!


தாவரப் பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாடுகள்


பொதுவாக பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லி மருந்துகளையே விவசாயிகள் அதிகளவில் பயன்படுத்தும் போது வயலில் உள்ள நன்மை செய்யும் பூச்சிகள் அழிக்கப்படுவதோடு சற்றுப்புறமும் மாசுபடுகிறது. 



இவற்றைத் தவிர்க்க விவசாயிகள் தாவரப் பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தி பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்தலாம். இந்த இயற்கை முறையில் வேம்பின் அனைத்து பாகங்களும் பூச்சிக் கொல்லியாகவும், பூச்சி விரட்டியாகவும் பயன்படுத்தலாம். 


அந்துப்பூச்சிகள் தாக்குதலை தடுக்கலாம்


வேப்பந்தழை இட்ட நிலத்தில் கரையான் பாதிப்பு இருக்காது. நூற்புழுவின் தாக்குதல் வெகுவாகக் குறைந்து விடும். உலர்ந்த வேப்பிலைகளை நெல், சோளம் போன்ற தானியங்களுடன் கலந்து வைப்பதினால் வண்டுக்கள், அந்துப்பூச்சிகள், துளைப்பான்கள் ஆகியவற்றின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கலாம்.

 


10 கிலோ வேப்பங்கொட்டையை நன்கு துகள்களாக்கி 20 லிட்டர் தண்ணீரில் கரைத்து 24 மணி நேரத்துக்கு பிறகு வடிகட்டி 200 லிட்டர் நீர் சேர்த்து ஒட்டும் திரவம் 200 மில்லி அல்லது 100 கிராம் காதிபார் சோப்பு சேர்த்து தெளிப்பதன் மூலம் கம்பளிப்புழு, அசுவினி, தத்துப்பூச்சிகள் புகையான், இலைச் சுருட்டுப்புழு, ஆனைக கொம்பன் ஈ, கதிர்நாவாய் பூச்சி ஆகியவற்றைக் கட்டுப்படுத்தலாம். 


மஞ்சள் வைரஸ் நோய் தாக்குதலை தடுக்கலாம்


3 லிட்டர் வேப்பெண்ணையுடன் ஒட்டும் திரவம் அல்லது காதி பார் சோப்பு சேர்த்து தெளிப்பதன் மூலம் சாம்பல் நோய், மஞ்சள் வைரஸ் நோய் போன்றவற்றை கட்டுப்படுத்தலாம்.


ஆணைக் கொம்பன் நோய் தாக்குதலை தடுக்கலாம்


அதுபோலவே 5 கிலோ நொச்சி தழையையும் 5 கிலோ வேப்பந்தழையையும் நீர் நிரப்பிய பானை ஒன்றில் இட்டு கொதிக்க வைத்து, கூழாக்கி அல்லது அரைத்து இரவு முழுவதம் வைத்திருந்து வடிகட்டி ஏக்கருக்கு 100 லிட்டர் வீதம் தண்ணீரில் கலந்து நெற்பயிரில் தெளிக்க இலைச்சுருட்டுப் புழு, ஆணைக் கொம்பன், கதிர்நாவாய் பூச்சி ஆகியவற்றை கட்டுப்படுத்தலாம். 



தகவல் வெளியீடு


வேம்பில் அசாடிராக்டின், நிம்பிடின் போன்ற பொருட்கள் இருப்பதால் பூச்சி மற்றும் நோய்களுக்கு தடுப்பாக அமைந்து பயிர்களைக் காப்பதோடு சுற்றுச்சூழலையும் பாதுகாக்கலாம் என திண்டுக்கல், விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் ம.ச.ந்திரமாலா அவர்கள் தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க....


நெல் விதைப்பண்ணையில் அறுவடைக்கு பின் கவனிக்க வேண்டிய வழிமுறைகள்!!


கரும்பு பயிரில் அதிக மகசூல் பெற விவசாயிகள் கையாள வேண்டிய தொழில்நுட்பங்கள்!!


SMAM திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு விவசாய இயந்திரங்கள் வாங்க 50% மானியம்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post