கரும்பு பயிரில் அதிக மகசூல் பெற விவசாயிகள் கையாள வேண்டிய தொழில்நுட்பங்கள்!!


புதுக்கோட்டை மாவட்டத்தில் 4315 ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. கரும்பு பொதுவாக, நடவு செய்த 11 முதல் 12 மாதங்களில் சர்க்கரையின் அளவை பொறுத்தே அறுவடை செய்யப்படுகிறது. 


கரும்பு அறுவடை செய்யும் போது சராசரியாக ஒரு டன் கரும்புக்கு 10% சதவீதம் வரையில் தோகை கிடைக்கிறது. அறுவடைக்குப் பின்னர் வயலில் விடப்படும் கரும்பு தோகையை பெரும்பாலான விவசாயிகள்  தீயிட்டு எரித்து விடுகின்றனர்.



இவ்வாறு செய்வதால், காற்று மாசுபடுவதுடன் மண்ணில் அங்ககசத்து குறைபாடும் ஏற்பட்டு கரும்பில் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. முறையான தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் முதல் ஆண்டு பெற்ற மகசூல் போன்றே தொடர்ச்சியான வருடங்களிலும் மகசூல் பெறலாம்.


அறுவடை செய்த வயல்களில் உள்ள தோகையினை எரிக்காமல் கரும்பு தோகையினை பொடியாக்கும் கருவியினை கொண்டு வயலில் தூளாக்கி இட வேண்டும். வெட்டிய கரும்பு தூர்களை வரப்பு அல்லது கங்கு அறுக்கும் கருவிகளை பயன்படுத்தி நன்கு சீவ வேண்டும். 


தோகை பொடியாக்கும் இயந்திரம்  கிடைக்காத பட்சத்தில் விவசாயிகள் ஒரு பார் விட்டு ஒரு பாரில் கரும்பு தோகையினை பரப்பி விடலாம் இதன் மூலமாக வெயில் காலங்களில் மண் ஈரம் காக்கப்பட்டு இளம் குருத்து புழுவின் தாக்குதல்  கணிசமாக குறையும். 



பார் முறையில் நடவு செய்த கரும்பு வயல்களில் கூப்பர் கலப்பை கொண்டு பார் ஓரங்களில் நன்கு உழ வேண்டும். கரும்பு வெட்டி 30 நாட்களுக்குள் கரும்பு இல்லாத பகுதிகளில் மற்ற தூர்களில் முளைத்த வேறொரு கரும்பு பயிரை பெயர்த்து எடுத்து நடவு செய்ய வேண்டும். 


இல்லையெனில் பாலித்தீன் பைகளில் வளர்க்கப்பட்ட கரும்பு நாற்றுகளில் நடவு செய்ய வேண்டும். ஏக்கருக்கு 5 மெ.டன் மக்கிய தொழு உரம் மற்றும் 250 கிலோ சூப்பர் பாஸ்பேட் போன்றவற்றை இட வேண்டும்.


பரிந்துரைக்கப்பட்ட தழைச்சத்தில் 25% சதவீதத்தினை 5 முதல் 7 நாட்களில் இட வேண்டும். ஏக்கருக்கு 1 கிலோ பெரஸ் சல்பேட் நுண்ணூட்டத்தினை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து 15 நாட்களில் தெளிக்க வேண்டும். 


இதனால் இரும்பு நுண்சத்து குறைபாட்டினால் ஏற்படும் வெள்ளை தோகை குறைபாட்டினை கட்டுப்படுத்தலாம். இக்குறைப்பாடு மேலும் குறையவில்லையெனில் அடுத்த 15 நாட்களில் பெரஸ் சல்பேட்டினை தெளிக்க வேண்டும்.



கரும்பு வெட்டிய 20 நாட்களுக்கு பின்னர் முதல் களை எடுக்க வேண்டும். இதேபோன்று 40 மற்றும் 50 ஆம் நாட்களில் இரண்டாவது களை எடுக்க வேண்டும். முதல் மேலுரம் 25ஆம் நாளிலும், இரண்டாவ மேலுரம் 45-50 நாட்களுக்கு இடைப்பட்ட காலங்களில் இட வேண்டும். 


கடைசி உரமிடுதல் 70-75 நாட்களுக்குள் இட வேண்டும். கடைசி மண் அணைப்பு 90ஆம் நாட்களில் செய்யப்பட வேண்டும். கரும்பு சாயாமல் இருக்க 180ஆம் நாட்களில் தோகைதொகை உரித்தல் செய்ய வேண்டும்.


எனவே, புதுக்கோட்டை மாவட்ட கரும்பு விவசாயிகள் கரும்பு சாகுபடியில் மேற்கண்ட தொழில் நுட்பங்களை கடைப்பிடித்து அதிக மகசூல் பெற்று பயனடையுமாறு புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் இராம. சிவகுமார் அவர்கள் தெரிவித்தார்.

 


மேலும் படிக்க....


விவசாயிகளுக்கு இலவசமாக 100% மானியத்தில் உரங்கள்! இந்த சிறப்பு திட்டம் மூலம் இலவசமாக உரம் பெறலாம்!


SMAM திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு விவசாய இயந்திரங்கள் வாங்க 50% மானியம்!!


பட்டுப்புழு வளர்ப்பு குடிலுக்கு ரூ.1.20 லட்சம் மானியம்! சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியம்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post