பட்டுப்புழு வளர்ப்பு குடிலுக்கு ரூ.1.20 லட்சம் மானியம்! சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியம்!!
பட்டு விவசாயத்தை மேம்படுத்தும் நோக்கில் பட்டு விவசாயிகளுக்கு அரசு சார்பில் பட்டுப்புழு வளர்ப்பு குடிலுக்கு ரூ.1.20 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. இந்த மானியத்திட்டத்தினை பட்டு விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என வேளாண்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசு பட்டு வளர்ச்சி துறையின் திருச்சி உதவி இயக்குனர் அலுவலக கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பெரம்பலூர் தொழில்நுட்ப சேவை மையத்திற்கு உட்பட்ட அரியலூர் மாவட்டத்தில் பட்டுப்புழு வளர்ப்பில் சிறந்து விளங்கிய தலா 3 விவசாயிகளுக்கு ரொக்கப் பரிசு வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
விவசாயிகளுக்கு ரூ.60 ஆயிரம் ரொக்கப் பரிசு
அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமணசரஸ்வதி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், முதல் பரிசாக கொடுக்கூர் பட்டு விவசாயி செல்வகுமார் என்பவருக்கு ரூ.25 ஆயிரம், இரண்டாம் பரிசாக வேம்புக்குடி விவசாயி கலியமூர்த்தி என்பவருக்கு ரூ.20 ஆயிரம், மற்றும் மூன்றாம் பரிசாக கண்டிராதித்தம் விவசாயி ஜெயபாலு என்பவருக்கு ரூ.15 ஆயிரம் என மொத்தம் ரூ.60 ஆயிரம் பரிசாக வழங்கப்பட்டது.
விழாவில் மாவட்ட ஆட்சியர் குறிப்பிட்டது
தமிழக அரசு பட்டு வளர்ச்சித்துறையின் மூலம் பட்டு வளர்ப்பு விவசாயிகளுக்கு நடவு மானியம் ரூ.10,500, புழு வளர்ப்பு குடிலுக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம், புழு வளர்ப்பு தளவாடங்களுக்கு ரூ.52,500 வரையில் வழங்கப்படுகிறது என தெரிவித்தார்.
மேலும், பட்டுப்புழு வளர்ப்பு தொழிலில் தற்போது ஒரு கிலோ பட்டுக்கூடுகளுக்கு ரூ.750-க்கு மேல் லாபம் கிடைப்பதால், விவசாயிகள் இதனை மிகவும் ஆர்வமுடன் அதிகமாகப் பயிரிட்டுள்ளனர்.
சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியம்
இதற்கு சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்திலும், பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியத்திலும் சொட்டுநீர் பாசனம் தோட்டக்கலைத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருவதால், இதனை அரியலூர் மாவட்ட பட்டு விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
படிக்க....
நவீன விவசாய தொழில்நுட்பத்தில் நானோ உரங்கள் பயன்பாடு செயல் விளக்கம்!!
PMFBY பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் "என் பாலிசி எனது கையில்" வழங்கும் திட்டம்!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற
YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை
தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக
வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...