பயிர் வகைகளின் பூச்சிகள் மற்றும் நோய்களும் அவைகளை கட்டுபடுத்தும் தெளிப்பான்கள் மற்றும் அவற்றின் வகைகள்!!
வேளாண்மையில் பயிர் பாதுகாப்பில் பூச்சி, நோய் மற்றும் பயிரின் எதிரிகள் ஆகியவற்றிலிருந்து பயிரை பாதுகாப்பது மிக அவசியமான ஒன்று. மேலும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் மருந்துகளை வாங்குவதில் எவ்வளவு கவனம் செலுத்துகிறோமோ அதேபோன்று பூச்சிமருந்துகளை தெளிக்க பயன்படுத்தும் தெளிப்பான்களையும் தேர்வு செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
தெளிப்பான்கள் மற்றும் அவற்றின் வகைகள் குறித்து பின்வருமாறு காண்போம்.
ஏன் தெளிப்பான்கள்?
தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் புதிய பயிர் வகைகளின் அறிமுகங்களால், புதிய பூச்சிகள் மற்றும் நோய்களும் அறிமுகமாகின்றன. மேலும் அவைகளை கட்டுபடுத்தும் சாதன முறைகளும் உள்ளன.
பயிர் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படும் பல ரசாயன பூச்சிக்கொல்லிகளை நேரடியாக மனிதர்களால் பயன்படுத்த முடியாது. மேலும் அவைகளை நுண் துகள்களாக பயன்படுத்த வேண்டும். இதுபோன்று பயன்பாட்டிற்கு இயந்திரங்கள் இன்றியமையாததாகும்.
தெளிப்பான்கள்
தெளிப்பான், தெளிப்பு திரவத்தை நுண் துகள்களாக்கி சிறு துளிகளாக பரவலாக சிறு பலன் கொண்டு வெளியேற்றப்படுகிறது. இது பூச்சிக்கொல்லி திரவம் வெளியேறும் அளவை கட்டுப்படுத்துகிறது.
வகைகள்
தெளிப்பான்கள் ஆற்றல் மற்றும் திரவம் வெளியேற்றப்படும் வேகம் ஆகியவற்றை பொறுத்து நான்கு வகைகளாக வகைப்படுத்தப்படுகிறது.
- ஹைட்ராலிக் ஆற்றல் தெளிப்பான்.
- வாயு ஆற்றல் தெளிப்பான்.
- மைய விலக்கு ஆற்றல் தெளிப்பான்.
- இயக்க ஆற்றல் தெளிப்பான்.
கை தெளிப்பான்
- சிறிய, எடை குறைவான மற்றும் சிறிய அலகுடையது
- கொள்கலனின் கொள்ளளவு 500-1000 மிலி.
- பொதுவாக இவற்றை வீட்டுத்தோட்டம் மற்றும் ஆய்வகங்களில், சிறு பகுதிகளுக்கு தெளிக்க பயன்படுத்தலாம். இது ஒரு நீர்ம ஆற்றல் தெளிப்பான்ஆகும்
க்னாப்சாக் தெளிப்பான்
முதுகில் சுமந்தபடி பயன்படுத்தப்படும் தெளிப்பான்கள் க்னாப்சாக் தெளிப்பான் என்றழைக்கப்படுகிறது. கொள்கலனினுள் ஹைட்ராலிக் பம்ப் பொருத்தப்பட்ட கையினால் பம்ப் செய்து செயல்படுத்தப்படும் கனாப்சாக் தெளிப்பான் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது.
கொள்கலனின் அடிப்பகுதியில் உலக்கை இருப்பதனால், பராமரிப்பு எளிதாகிறது. அழுத்தத்திற்குட்பட்ட திரவம், பம்பின் முடிவு முனையில் உள்ள வெளியேற்று குழல் மூலம் தெளிப்பு திரவம் தெளிக்கப்படுகிறது
அசைந்தாடும் தெளிப்பான்
பொதுவாக ஒரு சதுர சென்டிமீட்டருக்கு 14 முதல் 18 கிலோகிராம் வரையிலான அழுத்தத்தை அழுத்தக் கலனில் உருவாக்கி இலகுவாக தொடர்ந்து திரவத்தை தெளிப்பதற்கு உதவுகிறது. இது உயர்ந்த மரங்களில் திரவத்தை தெளிப்பதற்கு உகந்தது.
வாளித்தெளிப்பான்
வாளித்தெளிப்பானானது திரவத்தை நேரடியாக திறந்தவெளிக் கலனில் இருந்து தெளிக்க உதவுகிறது.
மிதித் தெளிப்பான்
இது மாற்றம் செய்யப்பட்ட ராக்கர் தெளிப்பான் வகையாகும்.
தீவிர குறைந்த தொகுதி தெளிப்பான்
தேவைப்படும் வேதிப்பொருளின்அளவை குறைக்கும் மற்றும் உபயோகப்படுத்தப்படும். நீரின் அளவை முற்றிலும் நீக்கும்.
தெளிப்பு முனை
நான்கு முக்கியமான செயல்பாடுகளைக் கொண்டது, திரவத்தை சிறு சிறு துளிகளாக மாற்றுகிறது. குறிப்பிட்ட அளவில் திரவத்தை தெளிக்கிறது. நீரியல் செயல்பாட்டினை கொடுக்கிறது. தெளிப்பான்களில் மிகவும் முக்கியமான பகுதி தெளிப்புமுனையாகும்.
தெளிப்பு சாதனங்களின் வகை மற்றும் தெளிப்பு தொழில்நுட்பம்
பூச்சிக்கொல்லிகள் பல்வேறு வடிவில் கிடைக்கின்றன. செயல்படுத்தப்படும் ஆற்றலானது கொள்ளளவிற்கு ஏற்ப அளவில் சிறியது முதல் பெரியது வரை உள்ளது.
தெளிப்பு இயந்திரங்கள் இயந்திரம் மூலமாகவும் மற்றும் மனித ஆற்றலைக் கொண்டும் இயங்குகிறது. மேலும் இது நகர்த்தக்கூடியது மற்றும் எடுத்துச் செல்லக்கூடியது என இரு வகைப்படுகிறது.
நகர்த்தக்கூடியது என்பது சக்கரத்தின் மூலம் அல்லது இரண்டுக்கு மேற்பட்ட நபர்களால் தூக்கிச் செல்லக்கூடிய வகையை கொண்டது. எடுத்துச் செல்லக் கூடியது என்பது ஒரு மனிதனால் எங்கும் எளிதில் எடுத்துச் செல்லக் கூடியது ஆகும்.
சாதனத்தை தேர்வு செய்யும் முறை
பூச்சிக்கொல்லி தெளிக்கும் இயந்திரத்தை வாங்குவதென்பது நீண்டகால முதலீடு ஆகும். இதனை வாங்கும்பொழுது கீழ்கண்டவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும்.
தெளிப்பிற்கு தகுந்த சாதனமாக இருத்தல், எளிதில் பயன்படுத்ததக்க மற்றும் பராமரிக்க கூடியதாக இருத்தல், சிறந்த செயல்திறன் கொண்டிருத்தல், சிறந்த சேவை வசதி, உதிரிபாகங்கள் எளிதில் கிடைக்க வேண்டும், நியாயமான விலையில் கிடைத்தல்.
உபகரணத்தை தேர்வு செய்யும் முறை
விவசாயிகள் தெளிப்பான்கள் தேர்வு செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை
மூலப் பொருட்களின் தரத்தினை ஆய்வு செய்தல், பற்ற வைக்கப்பட்ட இணைப்புகளையும், அசையும் பகுதியையும் அதன் மென்மையையும் தெளிப்பையும் சோதித்து பார்த்தல்,
அகற்றி பின் சேர்க்கக் கூடிய பகுதிகளை ஆய்வு செய்தல், தெளிப்பு முனை உகந்ததா என்றும், அதன் வெளியிடும் திறன் மற்றும் கோணத்தை ஆய்வு செய்தல், தெளிப்பானை வாங்குவதற்கு முன்னர் அதனை இயக்கி முழுவதும் சந்தேகத்தை தீர்த்தல்.
உபயோகிக்கும் முறை
ஒரு எக்டேருக்கு தேவையான திரவத்தைப் பொறுத்து உபயோகப்படுத்தும் முறைகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
அதிக தொகுப்பு / அளவு
ஒரு எக்டருக்கு 150 லிட்டருக்கு மேல் திரவம் தேவைப்படுவது. பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி மற்றும் பூஞ்சாணக்கெல்லிகளுக்கு ஏற்றது. முதுகில் சுமக்கும் தெளிப்பான் மற்றும் டிராக்பில் இணைப்பு பெற்ற தெளிப்பான்களைக் கொண்டு பயன்படுத்தலாம்.
குறைந்த தொகுப்பு அளவு
ஒரு எக்டேருக்கு தோராயமாக 10-150 லிட்டர் வரை திரவம் தேவைப்படுவது. பூச்சிக்கொல்லி மற்றும் பூஞ்சாணக்கொல்லிக்கு ஏற்றது. விசைத்தெளிப்பான், வானூர்திமற்றும் குறைந்த சுழற்சி சுழலும் வட்டுக்களுடைய தெளிப்பான்களையும் பயன்படுத்தலாம்.
தீவிர குறைந்த தொகுப்பு அளவு
ஒரு எக்டேருக்கு தோராயமாக 1 முதல் 5 லிட்டர் வரை திரவம் தேவைப்படுவது. பூச்சிக்கொல்லிகளுக்கு ஏற்றது. அதிக சுழற்சி சுழல் வட்டுத் தெளிப்பான், விசைத் தெளிப்பான் மற்றும் வானூர்திகளையும் பயன்படுத்தலாம்.
கட்டுரையாளர்கள்
வெ.நாகவர்ஷினி, நா. நிவேதா (நான்காம் ஆண்டு, பிஎஸ்சி வேளாண்மை, அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள்), நீடாமங்கலம் தொகுதி மாணவிகள், திருவாரூர் மாவட்டம்.
மேலும்
படிக்க....
நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த "பயிர் பாதுகாப்பு கிட்" மற்றும் "கையேடு" வழங்கப்பட்டது!!
PMFBY பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் "என் பாலிசி எனது கையில்" வழங்கும் திட்டம்!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற
YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை
தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக
வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...