நவீன விவசாய தொழில்நுட்பத்தில் நானோ உரங்கள் பயன்பாடு செயல் விளக்கம்!!
நானோ உரங்கள் என்றால் என்ன?
நானோ தொழில்நுட்பம் அல்லது மீநுண் தொழில்நுட்பம் என்பது அணு, மூலக்கூறு, மீமூலக்கூறு அளவில் பொருள்களைக் கையாளும் தொழிற்கலை ஆகும். இத்தனை நம்ம விவசாயதிற்கு பயன்படுத்தினால் நமக்கு நன்மை பயக்கும் மற்றும் சுற்றுசூழலை பாதுகாக்கும்.
மீநுண் தொழில்நுட்பம் இன்று பல்வேறு இடங்களில் மேம்படுத்தப்பட்டுள்ளது, மிகவும் முக்கியமான தொழில்நுட்பமாக கருதப்படுகிறது. மீநுண் தொழில்நுட்பம் என்பது குறைந்தது ஒரு பரிமாணத்தில் 1 முதல் 100 நானோ மீட்டர் அளவு வரை உள்ள நுண்ணிய பருப்பொருள் ஒன்றைக் கையாளும் திறம் கொண்ட நுட்பமாக வரையறுக்கப்பட்டது.
இந்த வரையறையின்படி நானோ பொருளின் பரும அளவு மிகக்குறைவாக இருப்பதால் அவற்றின் பேரளவு நிலை (Macro level) பண்புகள் பெரிதும் மாறுபட்டு குவைய இயக்கவியல் (குவாண்டம் இயக்கவியல்) விளைவுகள் மிகவும் வினைப்படுவதைக் காணக்கூடியதாக இருக்கும்.
இன்று இது குறிப்பிட்ட பரும அளவுக்குக் கீழே அமைந்த பொருளின் சிறப்பு இயல்புகளை விவரிக்கும் அனைத்து ஆராய்ச்சிகளையும் தொழில்நுட்பங்களையும் உள்ளடக்குகிறது.
நானோ உரங்கள்
இந்த துறையில் செயலில் உள்ள ஆராய்ச்சியின் ஒரு பகுதி நானோ உரங்களின் பயன்பாடு ஆகும். நானோ துகள்களின் மேற்கூறிய சிறப்புப் பண்புகள் காரணமாக, நானோ உரங்களைத் தாவரங்களுக்குச் சிறப்புப் பிரத்தியேகமாக வழங்குவதற்கு மாற்றியமைக்க முடியும்.
வழக்கமான உரங்கள் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தாக முடியும், ஏனெனில் அவற்றின் பயன்பாட்டிலிருந்து வெளியேறும் ரசாயன பொருள்கள் மன்னை, கற்றை, நீரை மாசுபடுத்துகின்றது. இது மனிதர்களுக்கு மட்டும் அல்லாமல் விலங்குகள் உள்ளிட்டவைகளும் தீங்கு விளைவிக்கிறது. இத்தனை தவிக்க நாம் நனோ உரங்கள் பயன்படுத்தலாம்.
நனோ உரங்கள் செயல்பாடு
நனோ உரங்கள் இன்று மிகவும் முக்கியம்மானது நனோ யூரியா மட்டுமே ஆகும். இந்த செயல்பாடு திரவம் நிலையில் இருக்கும். இது பயிர், இலை மீது படிந்து விடும். அதனால் அந்த இலை பாதுகாக்கப்படும். அதுமட்டும் இல்லாமல் மிகவும் நீண்ட காலம் வரும்.
எனவே உரத்திற்கான செலவு குறையும். இந்த நனோ யூரியாவின் துகள்கள் மிகவும் சிறியதாக இருப்பதனால் இலை துவாரங்களுக்கு சென்று நேரடியாக சத்து கொடுக்கும். இதுவே இதன் முக்கிய செயல்பாடு ஆகும்.
நனோ யூரியா பயன்படுத்தும் முறை
2-4 ஏம்அல் யூரியாவை 1 லிட்டர் தண்ணிரில் கலந்து தெளிக்க வேண்டும். விதைத்த 30 வது நாள் முதல் தெளிக்க வேண்டும். பூ பூப்தற்கு முன்பு இரண்டாம் தெளிப்பு தெளிக்க வேண்டும்.
நனோ யூரியா பயன்கள்
நனோ யூரியா 8% பயிர் வளர்ச்சியை கூட்டும். பூ பூக்கும் திறனை அதிகரிக்கிறது. அதிக மகசூல் தரும். மண்ணை பாதுகாக்கும் எந்த உயிருக்கும் தீங்கு விளைவிக்காது. பயிர்களுக்கு தழைச்சத்தை தந்து காய் பிடிப்பு திறனை அதிகரிக்கும்.
கட்டுரையாளர்கள்
இரா.புவனேஸ்வரன், வீ.பாலாஜி (இறுதி ஆண்டு மணவர்கள்) மற்றும் ஆர்.வீ.எஸ்.வேளாண் கல்லூரி, தஞ்சாவூர், வலங்கைமான் தொகுதி மாணவர்கள்.
மேலும்
படிக்க....
PMFBY பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் "என் பாலிசி எனது கையில்" வழங்கும் திட்டம்!!
சூரியகாந்தி உற்பத்தியை நுண்ணீர் பாசனம் மூலம் அதிகரிக்க அரசின் புதிய திட்டம்!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற
YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை
தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக
வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...