சின்ன வெங்காயத்தை தாக்கும் நோய்க்காண காரணங்கள் மற்றும் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்!!


தமிழகத்தில் சின்ன வெங்காயம் ஏப்ரல்-மே மாதங்களிலும் மற்றும் அக்டோபர்-நவம்பர் மாதங்களிலும் சாகுபடி செய்யப்படுகிறது. சின்ன வெங்காய பயிருக்கு நல்ல வடிகால் வசதியுடன் கூடிய வண்டல்மண் மிகவும் நல்லது. களர்நிலங்கள் பயனற்றவையாகும். களிமண் நிலத்தில் வெங்காயம் சாகுபடி மிகவும் கடினம். 


வெப்பமான பருவ நிலையில் போதுமான அளவு மண்ணின் ஈரப்பதத்தில் இப்பயிர் நன்கு வளரும் தன்மை கொண்டது. சிறந்த மகசூலுக்கு மண்ணின் கார அமிலத்தன்மை 6-7 சதவீதம் இருத்தல் வேண்டும். சின்ன வெங்காய சாகுபடியில் மகசூலை குறைக்கும் வகையில் பல முக்கிய நோய்கள் தாங்குகின்றன.



அடித்தாள் அழுகல் நோய் 


இலைகள் மஞ்சள் நிறமாக மாறி, பின் மெதுவாக காய ஆரம்பிக்கும் தாக்கப்பட்ட செடிகளின் இலைகள் நுனியிலிருந்து கீழ்நோக்கி காயும் வெங்காயம் குமிழ் மென்மையாகி அழுகும். வேர்கள் அழுகும் வெள்ளை நிற பூஞ்சாண வளர்ச்சி இதன் மேல் தோன்றும்.


கட்டுப்படுத்தும் முறை 


பயிர் சுழற்சி முறையை மேற்கொள்ள வேண்டும். அறுவடை செய்த வெங்காயக் குமிழ்களை சுத்தமாக சேமிக்க வேண்டும். மண்ணில் தாமிர சத்துக்கள் குறையும் போது வெங்காயம் நோய்க்கு ஆளாகும். அதனால் தாமிரத்தை கூடுதலாக நிலத்தில் சேர்க்க வேண்டும். தாமிர ஆக்ஸி குளோரைடு 0.25% மண்ணில் நனைத்து இடவேண்டும்.



ஊதா கொப்புள நோய் 


வெள்ளை நிற நுண்ணிய புள்ளிகள் இலைகளில் தோன்றும் பின் ஒழுங்கற்ற தேமல் பகுதியாக இலையின் நுனிப்பகுதியில் மாறும். இலையின் கீழ்ப்புறத்திலிருந்து மேல்நோக்கி நோய்ப்புள்ளிகள் உருவாகும், இந்த புள்ளிகள் ஒன்றிணைந்து இலைப்பரப்பு முழுவதும் பரவி பயிரை சேதப்படுத்தும்.


வட்டவடிவ கருப்புநிற அடர் வளையங்கள் வெல்வெட் நிறத்தில் மென்மையாக பசுங்சோகை/தேமல் போன்றவை காணப்படும். இலைகள் மெதுவாக நுனியிலிருந்து கீழ்நோக்கி மடிய ஆரம்பிக்கும்.



கட்டுப்படுத்தும் முறை 


நோயற்ற வெங்காய விதைக் குமிழ்களை பயிரிடுவதற்கு தேர்ந்தெடுக்க வேண்டும். திரம் 4 கி/கிலோ விதை என்ற அளவில் விதைநேர்த்தி செய்ய வேண்டும். வயலை நீர் வடியுமாறுவைத்துக் கொள்ள வேண்டும். காப்பர் ஆக்ஸி குளோரைடு 0.25% (அ) குளோரோதாலோனில் 0.2% (அ) ஜினப் 0.2% மான்கோசெய் 0.2% தழைத் தெளிப்பாக தெளிக்க வேண்டும்


இலைக் கருகல் நோய் 


மிதமான தாக்குதல் விளைச்சலைப் பாதிக்காது. ஆனால் அதிக தாக்குதல் விளைச்சலை வெகுவாகக் குறைக்கும். இலைப்பரப்பில் நூற்றுக்கும் அதிகமான வெள்ளை நிறப்புள்ளிகள் தோன்றும், இந்தநோய் வேகமாகப் பரவி, செடியின் அனைத்து பகுதியும் மடியும்.



கட்டுப்படுத்தும் முறை


கேப்டான்திரம் 0.25% என்ற அளவில் விதை நேர்த்தி செய்ய வேண்டும். மேனேப் (அ) மேன்கோசெப் (அ) குளோரோதேலோனில் தெளிக்க வேண்டும். பூஞ்சாணக் கொல்லிகளை ஒவ்வொரு முறையும் 5-7 நாட்கள் இடைவெளியில் தெளித்துக் கொண்டே இருக்க வேண்டும்.


வெள்ளை அழுகல் நோய் 


இலைகள் மஞ்சளாதல் மற்றும் நுனிக்கருகுதல். செடிகளை பிடுங்கிப் பார்க்கும் பொழுது வேர்கள் அழுகிக் காணப்படும். வெங்காயக் குமிழின் அடிப்புறத்தில் வெள்ளை நிற அல்லது சாம்பல் நிற பூஞ்சண வளர்ச்சியுடன் காணப்படும். இவற்றின் தாக்குதல் அதிகரிக்கும் போது, சிறிய கருப்பு நிற கோவை வடிவஸ்கிளிரோசியா உருவாகும். வெங்காயக் குமிழ்கள் முழுவதும் அழுகி விடும்.


கட்டுப்படுத்தும் முறை


பயிர் சுழற்சி முறை, சுத்தமான விதைகளைப் பயன்படுத்துதல், அங்கக உரங்களுடன் சேர்த்து உரமிட வேண்டும். பெனோமில், கார்பண்டசிம் அல்லது கையோபேனேட்மீத்தைல் (100 – 150 கி/கிலோ விதை) சேர்த்து விதைநேர்த்தி செய்ய வேண்டும்.



சின்ன வெங்காய பயிரை தாக்கும் முக்கிய நோய்களை கண்டறிந்து தகுந்த கட்டுப்பாட்டு முறைகளை பின்பற்றி பயிரை பாதுகாத்து நல்ல மகசூலை பெற விவசாயிகளை கேட்டுக் கொள்கிறோம்.


மேலும் விபரங்களுக்கு 


யாழினி புகழேந்தி, பிரித்திகா குணசேகர், ராஜகமலினி வேதநாராயணன், ராமினேனி பாக்யசரளா, இளங்கலை வேளாண் மாணவர்கள் மற்றும் இராமலிங்கம், நிவேதா, முனைவர் செ.சேகர், திருவேங்கடம், உதவிப் பேராசிரியர்கள், பயிர் பாதுகாப்புத் துறை, ஆர்.வி.எஸ். வேளாண்மைக் கல்லூரி, உசிலம்பட்டி, தஞ்சாவூர் தொடர்பு கொள்ளலாம். 


மேலும் படிக்க....


PMFBY பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் "என் பாலிசி எனது கையில்" வழங்கும் திட்டம்!!


PM Kisan திட்டத்தை மேலும் வெற்றிகரமாக செயல்படுத்த அரசின் பல்வேறு நடவடிக்கைகள்!!


நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த "பயிர் பாதுகாப்பு கிட்" மற்றும் "கையேடு" வழங்கப்பட்டது!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post