பூச்சி விரட்டிகள்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், வாழவச்சனூர், திருவண்ணாமலை மாவட்டம் பாரம்பரிய பூச்சிக்கொல்லிகள் தயாரிப்பு முறைகள் குறித்து பின்வருமாறு:
வேப்ப இலைசாறு
5 கிலோ வேப்ப இலையை நன்றாக அரைத்து 6 லிட்டர் தண்ணீரில் கலக்க வேண்டும். இந்த கலவையை காலையில் நன்கு கொதிக்க வைத்து, அந்த கலவையுடன் 150 கிராம் சோப்பு தூள் சேர்த்து, மற்றும் 60 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்க வேண்டும்.
புங்கை இலைசாறு
கர்நாடக விவசாயிகள் நதி பக்கங்களிலும், சாலை பக்கங்களிலும் மற்றும் காடுகளிலும் மற்றும் நடவுக்கு முன் தண்ணீர் தேங்கி நிற்கும் வயல்களிலும் இருக்கும் புங்கை இலையை சேகரித்து, இந்த இலைகளை நன்றாக மண்ணில் 2 அல்லது 3 நாட்கள் முற்றிலும் மட்கிய பிறகு சேற்றுழவு செய்கின்றனர்.
எருக்கு இலைசாறு
1 கிலோ எருக்கு இலையை அவற்றின் பாலுடன் சேகரித்து, அவற்றை நன்கு சுத்தம் செய்து, அவற்றை நறுக்கி நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். இக்கலவையை 50 லிட்டர் நீருடன் கலந்து வடிகட்டி தெளிக்கலாம்.
காட்டாமணக்கு தாவர இலை சாறு
சுத்தமான காட்டாமணக்கு தாவர இலை மற்றும் தண்டை சுத்தமான நீருடன் நன்கு அரைக்க வேண்டும், இந்த எண்ணெய் பசையுடன் கூடிய 5 கிலோ காட்டாமணக்கு சாறு கலவையை 5 லி மாட்டு கோமியத்துடன் ஒரு நாள் இரவு முழுவதும் வைக்க வேண்டும்.
மேலும் 3-4 மணி நேரம் இதனை 2 லிட்டர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இந்த கலவை 5 லிட்டர் அடர் கலவையாகும்போது அவற்றை ஒரு காடா துணியை பயன்படுத்தி நன்கு வடிகட்டி பிறகு தெளிக்க வேண்டும்.
கற்றாழைசாறு
சாலை ஓரங்களில் வளர்ந்திருக்கும் கற்றாழை வெட்டி, சுத்தம்செய்து, துண்டுகளாக நறுக்கி அவற்றை நன்றாக அரைக்க வேண்டும். இதனை நல்ல சுத்தமான தண்ணீருடன் கலந்து 24 மணி நேரம் ஊற வைத்து நன்கு கலக்கி மஸ்லின் துணியை பயன்படுத்தி நன்கு வடிகட்ட வேண்டும்.
இந்த கலவை 100 மி.லிட்டருடன் 500 மி.லி மாட்டு கோமியம் மற்றும் 10 கிராம் சோப்பு தண்ணீரை கலந்து தெளிக்க வேண்டும்.
பூண்டு கிராம்பு சாறு
சுத்தமான பூண்டை துண்டுகளாக வெட்டி அவற்றை நன்கு அரைத்து அவற்றை அதன் சம அளவு மண்ணெய்யில் ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். இச்சாற்றை நன்றாக கலக்கி காடா துணியில் வடிகட்ட வேண்டும். இச்சாற்றுடன் 150 கிராம் சோப் தூளை கலந்து ஒரு சுத்தமான பாட்டில் அல்லது ஏதேனும் ஒன்றில் சேகரித்து வைத்துக்கொள்ளலாம்.
அரளி விதை சாறு
அரளி விதைகளை சேகரித்து, சில நாட்கள் நிழலில் உலர வைத்து, அதை தூள் செய்து, இத்தூளை சலித்து நீருடன் கலந்து ஒரு நாள் இரவு முழுவதும் இடையூறுயின்றி ஊற வைத்து, பின் காடா துணியில் வடிகட்டி தெளிக்க வேண்டும்.
வேம்பு எண்ணெய் தெளிப்பு
வேப்ப எண்ணெய் (3 லி) 200 மிலி சோப்பு கரைசலுடன் கலந்து ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்க வேண்டும்.
மேலும்
படிக்க....
SMAM திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு விவசாய இயந்திரங்கள் வாங்க 50% மானியம்!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற
YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை
தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக
வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...