PM Kisan புதிய அப்டேட் e_KYC இல்லாமல் 11-வது தவணையை பெற வாய்ப்பு!!
PM-kisan திட்டத்தில், மத்திய அரசிடம் இருந்து, விவசாயிகள் 2000 ரூபாய் நிதியுதவி பெறுவதற்கான கட்டாய விதிமுறையான e_KYC-யானது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், அடுத்தத் தொகை வருவதில் சிக்கல் ஏற்படலாம் என ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏப்ரல் 1 முதல் ஜூலை 31 வரை
PM கிசான் திட்டத்தின் கீழ் பதிவு செய்த அனைத்து விவசாயிகளுக்கும், மத்திய அரசு சார்பில் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ. 2,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. இதன் அடிப்படையில், ஒவ்வொரு நிதியாண்டின் தொடக்கத்திலும் ஏப்ரல் 1 முதல் ஜூலை 31 வரை விவசாயிகளுக்கு கிசான் திட்டத்தின் தவணை கிடைக்கும்.
அந்த வகையில், இந்த நிதியாண்டிற்கான முதல் தவணைத் தொகையை, பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் பெற சுமார் 12 கோடி விவசாயிகள் தற்போது காத்திருக்கின்றனர்.
ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் 11-வது தவணைக்கான பணம் கிடைக்கும் என்றுத் தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது வரையில் பணம் வந்துசேரவில்லை. இந்த திட்டத்தின் கீழ், பதிவு செய்யப்பட்ட விவசாயிகள் கோடிக்கணக்கில் உள்ளனர். அவர்கள் இந்த நிதியுதவியைப் பெறுவதில் தற்போது சிக்கல் எழுந்துள்ளது.
e-KYCக்கான கெடு நீட்டிப்பு
PM கிசான் திட்டத்தில் விவசாயிகள் நிதியுதவி பெறுவதற்கு மத்திய அரசு e-KYC விதிமுறையைக் கட்டாயமாக்கியுள்ளது. e-KYCக்கான கடைசித் தேதி 2022ம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி தான்.
இருப்பினும் விவசாயிகளின் பிரச்சினையைக் நினைவில் கொண்டு இந்த கால அவகாசம் 2022ம் ஆண்டு மே 31 வரையில் தற்போது தான் நீட்டிக்கப்பட்டது. மேலும் பிரச்சனை என்னவென்றால், தற்போது e-KYC காண ஆப்சன் கிசான் போர்ட்டலில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.
இந்தக் குளறுபடி காரணமாக, இந்த முறையை மத்திய அரசு சில நாட்களுக்கு ஒத்திவைத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய சூழ்நிலையில், e-KYC முடிக்காத விவசாயிகளுக்கு அடுத்த தவணை கிடைக்குமா?, கிடைக்காதா? என்பது குறித்த சந்தேகங்கள் விவசாயிகளிடையே உள்ளன.
விவசாயிகள் செய்ய வேண்டியது என்ன?
இப்போது, கிசான் போர்ட்டலில் e-KYC ஆப்சன் தெரியவில்லை என்ற சூழ்நிலையில், பயனாளிகள் என்ன செய்வது வேண்டும் என்பது புதிதாக உள்ளது. இருப்பினும், உங்களுக்கு 2 விருப்பங்கள் உள்ளன. ஒன்று, அருகிலுள்ள இ-சேவை அல்லது ஆதார் சேவை மையத்திற்குச் சென்று உங்கள் e-KYC விபரங்களை முடிப்பது. இதில் அதிக சிரமம் இருக்கலாம்.மற்றொரு விருப்பம் என்னவென்றால், காத்திருப்பது.
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS
உண்மையில், கடந்த முறை 10-வது தவணையானது e-KYC இல்லாமல் விவசாயிகளின் கணக்கில் அரசாங்கம் தவணைப் பணத்தை அனுப்பியது போல, இந்த முறையும் அனுப்ப வாய்ப்புள்ளது என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே காத்திருப்பதே நல்லது.
மேலும்
படிக்க....
SMAM திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு விவசாய இயந்திரங்கள் வாங்க 50% மானியம்!!
PMFBY பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் "என் பாலிசி எனது கையில்" வழங்கும் திட்டம்!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற
YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை
தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக
வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...