கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கிராம மேலாண்மை குழு கூட்டம்!!
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மதுக்கூர் வட்டாரம் சிராங்குடியில் கிராம மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் வட்டாரத்தில் இவ்வருடம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் சிராங்குடி பஞ்சாயத்து தேர்வு செய்யப்பட்டுள்ளது.
பஞ்சாயத்துக்களின் முன்னேற்றத்துக்கான 16 துறைகள்
இத்திட்டத்தின் கீழ் வேளாண்மை துறை வேளாண் பொறியியல் துறை தோட்டக்கலை பட்டுப்புழு வளர்ப்பு, கைத்தறித்துறை, வருவாய் துறை, கூட்டுறவுத்துறை, பால்வளத்துறை, ஊரக வளர்ச்சித் துறை, மகளிர் நல மேம்பாடு, எரிசக்தி துறை, மின்சாரம் மற்றும் மீன்வளத்துறை நீர்வள ஆதாரத்துறை உள்ளிட்ட 16 துறைகள் ஒருங்கிணைத்து தேர்வு செய்யப்பட்ட பஞ்சாயத்துக்களின் முன்னேற்றத்துக்கான அனைத்து வழிகளையும் செயல்படுத்தும்.
பஞ்சாயத்துக்களின் முன்னேற்றத்திற்கு துறைகளை ஒருங்கிணைப்பதை வேளாண்மை உதவி அலுவலர் ஒருங்கிணைப்பு அலுவலராக செயல்படுவார். அனைத்து துறைகளும் தங்களது திட்டங்களில் தேர்வுசெய்யப்பட்ட பஞ்சாயத்துக்களில் அதிக முன்னுரிமை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இத்தோடு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும் கிராமத்து விவசாயிகள் தன்னிறைவு அடையத் தக்க வகையிலும் விவசாயிகளின் தேவையறிந்து பணியாற்ற முனைப்புடன் செயலாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விவசாயிகள் குறித்த அடிப்படை விபரங்கள்
எனவே விவசாயிகள் தங்களை குறித்த அனைத்து அடிப்படை விபரங்களையும் பஞ்சாயத்து அலுவலகத்தில் வழங்கப்பட்டுள்ள படிவத்தில் தங்களது புகைப்பட நகல் நில விபரம் ஆதார் கார்டு நகல் வங்கி புத்தக நகல் மற்றும் ரேஷன் கார்டு நகல் ஆகியவற்றுடன் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.
விவசாயிகள் விவரங்கள் மென்நகலாக தொகுக்கப்பட்டு அனைத்து துறை அலுவலர்களுடன் பகிரப்படுகிறது எனவே அனைத்து துறைகளும் தங்களது திட்டங்களை செயல்படுத்துவது மிகவும் எளிதாகும் எனவே விடுபாடு இன்றி அனைத்து விவசாயிகளும் தங்கள் விபரங்களை பதிவு செய்து தங்களுடைய முன்னேற்றத்துக்கும் பஞ்சாயத்தின் முன்னேற்றத்துக்கும் தேவையான கருத்துக்களையும் கூட்டங்களில் தெரிவித்து பதிவு செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.
70க்கும் மேற்பட்ட மகளிர் குழு உறுப்பினர்கள் பங்கேற்பு
இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட சிராங்குடி பஞ்சாயத்தில் சிராங்குடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சிராங்குடி மேலாண்மை குழு கூட்டம் வேளாண்மை அலுவலர் சாந்தி தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் 70க்கும் மேற்பட்ட மகளிர் குழு உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டு தங்கள் தேவைகளை பதிவு செய்து அடிப்படை விவரங்கள் பதிவிற்கான படிவத்தையும் பெற்றுச் சென்றனர்.
இக்கூட்டத்தில் சிராங்குடி ஊராட்சி மன்ற தலைவர் கிருபாகரன் முன்னிலை வகிக்க துணைத் தலைவர் முருகேசன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் வளர்மதி விஜயலட்சுமி ஆகியோரின் கருத்துரையுடன் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கலந்துகொண்டு கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித் திட்டம் குறித்து வேளாண் அலுவலர் சாந்தி விளக்கிக் கூறினார். வேளாண் உதவி அலுவலர் பூமிநாதன் வேளாண் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் பிற துறைகளின் மூலம் கிடைக்கக்கூடிய நலத்திட்ட உதவிகள் குறித்தும் கலந்துகொண்ட விவசாய உறுப்பினர்களுக்கு எடுத்துக் கூறி அனைத்து விவசாயிகளும் விடுபாடு இன்றி தங்கள் தகவல்களை உரிய ஆவணங்களுடன் பதிவுசெய்து பயன் பெற கேட்டுக்கொண்டார்.
தகவல் வெளியீடு
S.திலகவதி,
வேளாண்மை இணை இயக்குனர்,
மதுக்கூர், தஞ்சாவூர் மாவட்டம்.
மேலும்
படிக்க....
பயிர்களைத் தாக்கும் பூச்சிகள் மற்றும் நோய்களை தடுக்கும் தாவர பூச்சிக் கொல்லிகள்!!
PM Kisan புதிய அப்டேட் e_KYC இல்லாமல் 11-வது தவணையை பெற வாய்ப்பு!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற
YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை
தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக
வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...