தமிழகத்தில் இன்று முதல் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!!
தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முன் அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது,
இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக, அடுத்த இரண்டு நாட்களுக்கு கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் தமிழ்நாட்டின் பிற பகுதிகளான, புதுவை மற்றும் காரைக்காகாலில் அடுத்த 3 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் வருகிற ஏப்ரல் 11 மற்றும் ஏப்ரல் 12-ம் தேதிகளில் தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை அல்லது கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் வரையில் பதிவாகும்என கூறப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், வத்திராயிருப்பு12 செ.மீ., கூடலூர் 10, பேரையூர் , மீமிசல், வைகை அணை தலா 6 செ.மீ., குறிஞ்சிப்பாடி, பிலவாக்கல் , சோழவந்தான், பெரியகுளம், பெரியகுளம், ஆயக்குடி, தேக்கடி தலா 5 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
தமிழக கடலோர பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் கேரள கடலோரப்பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும் எனவும், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் செந்தாமரை கண்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும்
படிக்க....
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட செயலாக்க குழு கூட்டம்!!
சொர்ணவாரி பருவத்திற்கு ஏற்ற நெல் ரகங்கள் இருப்பு வைக்க நடவடிக்கை!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற
YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை
தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக
வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...