தமிழகத்தில் இன்றும் கன மழை!! தணியும் கோடை வெப்பம் வானிலை மையம் தகவல்!!


தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 13) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.



நாளை (14ஆம் தேதி) நீலகிரி, கோயம்பத்தூர், திருப்பூர் , தென்தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஏப்ரல் 15 மற்றும் ஏப்ரல்  16 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.


இந்நிலையில், தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில், தேனி மாவட்டத்தில் போடி, ஆண்டிபட்டி சுற்றுவட்டாரத்தில் நேற்றிரவு அரை மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால், சாலைகளில் தண்ணீர் வழிந்தோடியது. 



கோடை வெயிலின் பிடியில் சிக்கித் தவித்த தேனி மக்களுக்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவது சற்று ஆறுதலாக அமைந்துள்ளது. கோவை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது. நாகை மாவட்டத்தில் 8 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.


திண்டுக்கல்லில் தொடர்ந்து 3-வது நாளாக கோடை மழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. கொடைக்கானல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பிற்பகலில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை பெய்தது. 


மழை பெய்த பின் கோக்கர்ஸ் வாக் சுற்றுலாத் தலத்தில் இருந்து எதிரே உள்ள மலைமுகடுகளைப் பார்க்கும் போது, மலைமுகடுகளின் இடையில் தோன்றிய வெண்பனி மூட்டங்கள், வெண் ப‌ஞ்சுக‌ள் போன்று ரம்மியமாக காட்சியளித்தது. தொடர்ந்து இரவிலும் மிதமான மழை பெய்தது.



இதேபோன்று, கோவை மாநகர் முழுவதும் அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்ததால் குளிர்ந்த சூழல் நிலவியது. நாகை மாவட்டம் திருக்குவளை அருகே ஆதமங்கலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட 8 ஆயிரம் நெல் மூட்டைகள் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையில் நனைந்துள்ளதாகவும், கனமழை நீடித்தால், நெல் மணிகள் வீணாகும் அபாயம் உள்ளதாகவும் விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.


மேலும் படிக்க....


தென் தமிழகத்தில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!


தமிழகத்தில் இன்று முதல் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!!


உளுந்து மற்றும் பாசிப்பயறுகளில் சத்து பற்றாக்குறை அறிகுறிகள் மற்றும் மேலாண்மை முறைகள்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post