உரக்கடைகளில் வேளாண் உதவி இயக்குனர் மற்றும் உர ஆய்வாளர் திடீர் ஆய்வு!! செயல்படாத உர விற்பனை நிலையங்களுக்குத் தடை!!
மதுக்கூர் வட்டார உரக்கடைகளில் வேளாண் உதவி இயக்குனர் மற்றும் உர ஆய்வாளர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
வேளாண் இணை இயக்குனர் தஞ்சாவூர் அவர்களின் அறிவுரைப்படி மதுக்கூர் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு உரம் மற்றும் இடுபொருள் விற்பனை செய்யும் 11 தனியார் உர விற்பனையாளர்கள் மற்றும் 10 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் வேளாண்மை உதவி இயக்குனர் திலகவதி மற்றும் உர ஆய்வாளர் சாந்தி ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
உரக்கடை ஆய்வின்போது விற்பனை முனைய கருவியில் உள்ள உர இருப்பு புத்தக இருப்பில் உள்ள உரத்தின் அளவுடன் சரியாக உள்ளதா மற்றும் வேறுபாடு உள்ளதா போன்றவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
யூரியா உரம் இருப்பில் உள்ளதா மற்றும் யூரியா உரத்துடன் உப பொருட்கள் ஏதேனும் விவசாயிகளின் விருப்பம் இல்லாமல் இணைத்து விற்பனை செய்யப்படுகிறதா உரங்களின் விலை பட்டியல் கடையின் முன்னால் விவசாயிகள் தெரியும் வகையில் வைக்கப்பட்டுள்ளதா போன்றவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
அனைத்து உரவிற்பனையாளர்களுக்கும் யூரியா உரத்தினை விவசாயிகளுக்கு வழங்கும் பொழுது அவர்களின் விருப்பமின்றி உப பொருட்கள் இணைத்து விற்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது.
மேலும் அனைத்து உர விற்பனையாளர்களும் உரம் மற்றும் பூச்சி மருந்து ஒவ்வொரு மாதமும் எவ்வளவு விற்கப்பட்டுள்ளது என்ற விற்பனை அறிக்கை விபரத்தை 22ஆம் தேதிக்குள் ஒரு ஆய்வாளர் வசம் ஒப்படைக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
உரக் கட்டுப்பாட்டு ஆணைப்படி செயல்படாத உர விற்பனை நிலையங்களுக்குத் தடை
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவின்படி மாவட்டத்திலுள்ள சில்லறை உர விற்பனை நிலையங்களில் வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை மற்றும் வருவாய்த் துறை ஆகியோர் கொண்ட சிறப்புக்கு குழுவினரால் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனப் புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் இராம.சிவகுமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தற்பொழுது புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த வடகிழக்குப் பருவமழையால் பெறப்பட்ட மழையினைத் தொடர்ந்து நீர் நிலைகளில் போதுமான நீர் இருப்பு உள்ளதால் விவசாயிகள் நெல், மக்காச்சோளம், கரும்பு, நிலக்கடலை, உளுந்து மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்துவருகின்றனர்.
எனவே விவசாயிகள் நடவுப் பணிகளிலும், நெற்பயிருக்கு மேலுரம் இடுவதிலும் ஈடுபட்டுவருகின்றனர். மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாரங்களிலும் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கம் மற்றும் தனியார் சில்லறை விற்பனை நிலையங்களில் மாவட்ட ஆட்சியரின் ஆணைப்படி திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வில், உரக் கட்டுப்பாட்டு ஆணை 1985-ஐ சரியாகப் பின்பற்றாத 3 சில்லறை விற்பனை நிலையங்களுக்குத் தற்காலிகமாக விற்பனைத் தடை விதித்து உத்தரவிடப்பட்டு, முறையாகப் பின்பற்றப்படாமைக்கான விளக்கம் கோரப்பட்டுள்ளது.
எனவே, சில்லறை உர விற்பனையாளர்கள் உரக் கட்டுப்பாட்டு ஆணைப்படி மானிய விலை உரங்களை விற்பனை முனையக் கருவி மூலம் விவசாயிகளின் ஆதார் எண் மூலமே விற்பனை செய்ய வேண்டும். உரங்களின் இருப்பு மற்றும் விலை விபரங்கள் அடங்கிய தகவல் பலகை தவறாமல் விவசாயிகளின் பார்வையில் படும்படி பராமரிக்கப்பட வேண்டும்.
உர மூட்டைகளில் குறிப்பிட்டுள்ள அதிகபட்ச விலைக்கு மிகாமல் உரங்களை விற்பனை செய்ய வேண்டும். விவசாயிகளுக்குத் தேவையான உரங்களுடன் வேறு சில இடுபொருட்களை இணைத்து வழங்கக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக புகார் தெரிவிக்க வேளாண்மை உதவி இயக்குநர் (தரக் கட்டுப்பாடு) 90807 09899 என்ற எண்ணிலும், மாவட்ட உரக் கண்காணிப்பு மையத்தை 04322-221666 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு மாவட்டத்தில் உர விற்பனைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் இராம.சிவகுமார் அதில் தெரிவித்துள்ளார்.
மேலும்
படிக்க....
10.89 லட்சம் விவசாயிகளுக்கு 2020-21 பயிர் காப்பீடு இழப்பீட்டுத்தொகை ரூ.2285 கோடி விடுவிப்பு!!
PM கிசான் போன்ற திட்டங்கள் விவசாயிகளுக்கு புதிய பலத்தை அளித்து வருகின்றன என் பிரதமர் பெருமிதம்!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற
YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை
தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக
வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.



0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...