விவசாய நிலம் வைத்துள்ள சிறு குறு விவசாயிகள் ரூ.25000 மானியம் பெற விரைவாக இதனை செய்யுங்கள்!!
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சார்ந்த விவசாயிகளுக்கு நிலத்தில் நீர்பாசன வசதிக்காக PVC பைப் அமைக்க திட்டத்தொகையில் 50% சதவிகிதம் மானியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுள்ளது.
மேலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சார்ந்தவர்களுக்கு விவசாய நிலத்தில் பி.வி.சி. பைப் (PVC Pipe) அமைத்தல் மட்டும் இல்லாமல் விவசாய பம்பு செட்டிற்கு அதாவது புதிய மின் மோட்டார் வாங்குதல் போன்ற திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளது.
இது தொடர்பாக கடலூர் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
விவசாய நிலத்தில் நீர்பாசன வசதிக்காக PVC பைப் அமைக்க திட்டத்தொகையில் 50% சதவிகிதம் மானியம் அதிகபட்சம் ரூ.15,000/ வழங்கப்படும்.
அதேபோல், விவசாய பம்பு செட்டிற்கு புதிய மின் மோட்டார் வாங்க திட்டத்தொகையில் 50% சதவிகிதம் அதிகபட்சம் ரூ.10,000/-மானியமாக வழங்கப்படும்.
இந்தத் திட்டங்களில் பயன்பெற விருப்பம் உள்ள ஆதிதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சார்ந்த சிறு, குறு விவசாயிகள் தாட்கோ இணையதள வாயிலாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
தேவைப்படும் ஆவணங்கள்
- சாதி சான்று
- குடும்ப ஆண்டு வருவாய் சான்று ஆதார் அடையாள அட்டை
- பதிவு பெற்ற நிறுவனங்கள் மூலம் பெற்ற விலைப்புள்ளி
- நிலத்திற்கான ஆவணங்கள்
- போட்டோ
இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விருப்பம் உள்ளவர்கள் மேலேக் கூறிய ஆவணங்களுடன், ஆதிதிராவிடர் வகுப்பை சார்ந்தவராக இருப்பின் HYPERLINK "http://www.application.tahdco.com/"www.application.tahdco.com என்ற இணையதள முகவரியிலும்,
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS
பழங்குடியினர் வகுப்பை சார்ந்தவராக இருப்பின் HYPERLINK "http://www.fast.tahdco.com/"www.fast.tahdco.com என்ற இணையதள முகவரியிலும் விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்கள் பெற மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, (2-ம் தளம்) மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கடலுார்-1 ஆல்பேட்டை,
(தொலைபேசி எண்.041/ 221087) என்ற முகவரியில் தொடர்புகொண்டு விவரங்கள் பெற்று பயன்பெற்றுகொள்ளுமாறுக் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
படிக்க....
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு! வானிலை ஆய்வுமையம் தகவல்!!
ரூ.3 லட்சம் விவசாயக் கடன் பெற விரைவாக இதனை செய்யுங்கள்!! KCC விண்ணப்பிப்பது எப்படி?
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற
YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை
தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக
வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...