வேளாண் துறை திட்டங்கள் மற்றும்  திட்டங்களுக்கான மானியங்கள் பற்றிய விழிப்புணர்வு முகாம்!! 


தமிழ்நாடு அரசு செயலாளர் அவர்களின் அறிவுரைப்படி மதுக்கூர் வட்டாரத்தில் உள்ள 33 பஞ்சாயத்துகளிலும் இன்று 2 பஞ்சாயத்துக்கு ஒரு ஒருங்கிணைப்பு அலுவலர் வீதம் வேளாண்மைத்துறை மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வேளாண் துறை திட்டங்களையும் திட்டங்களுக்கான மானியம் உள்ளிட்டவைகள் பற்றியும் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு வேளாண் துறை அலுவலர்கள் மூலம் விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது. 



மேலும் தோட்டக்கலை அலுவலர்கள் வேளாண் பொறியியல் துறை அலுவலர்களும் கூட்டத்தில் கலந்துகொண்டு துறையின் மூலம் இவ்வருடம் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் அதற்கான தகுதிகள் போன்றவை பற்றி எடுத்துக் கூறினார். 


இன்றைய தினம் மாண்புமிகு பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை அவர்கள் தலைமையில் ஆலத்தூர் சிவன் கோவில் மரத்தடியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மற்றும் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டங்கள் பயன்படுத்தி அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்புடன் ஆலத்தூர் ஊராட்சி மன்றத்தில் கிராம மேம்பாட்டுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளுடன் விவசாயிகளின் தனிப்பட்ட தேவைகளும் சந்திக்கப்படும்.


எனவே விவசாயிகள் கிராம மேம்பாட்டிற்கு தேவையான சாலைகள் கழிப்பறைகள் கட்டுதல் ஆகியவற்றுடன் வேளாண் துறை திட்டங்களையும் பயன்படுத்தி பயன்பெற கேட்டுக்கொண்டார். 



ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர். ஊராட்சி மன்ற தலைவர் ஜோதிலட்சுமி மற்றும் செயலாளர் அவர்களால்  வரவு செலவு கணக்குகள் எடுத்துரைக்கப்பட்டது. 


வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வேந்திரன் மற்றும் ராஜ் ஆகியோர் இவ்வருடம் ஆலத்தூர் ஊராட்சி மன்றத்துக்கு திட்டமிடப்பட்டுள்ள சாலைகள் மட்டும் 100 நாள் திட்ட பணிகளை பற்றி விளக்கமாக எடுத்துக் கூறினார்.


வேளாண் உதவி இயக்குனர் திலகவதி வேளாண் திட்டங்களை பற்றி எடுத்துக் கூறியதோடு தற்போது பரவலாக தென்னையில் காணப்படும் தண்டு அழுகல் நோய் மற்றும் அதற்கான தீர்வுகள் பற்றி எடுத்துக்கூறி தொழில்நுட்ப பிரசுரங்களை பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை மூலம் விவசாயிகளுக்கு விளங்கினார். 



வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் கலைவாணி வேளாண் பொறியியல் துறைக்கான மானியத்திட்டங்கள் பற்றி எடுத்துரைத்தார். கூட்டத்தில் துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி வேளாண் உதவி அலுவலர் சுரேஷ் மற்றும் கவுன்சிலர்கள் செல்வராஜ் மற்றும் கைலாசம் ஆகியோர் கலந்து கொண்டனர்.


தகவல் வெளியீடு


S.திலகவதி,

வேளாண்மை இணை இயக்குனர், மதுக்கூர்

தஞ்சாவூர் மாவட்டம்.

 

மேலும் படிக்க....


ரூ.3 லட்சம் விவசாயக் கடன் பெற விரைவாக இதனை செய்யுங்கள்!! KCC விண்ணப்பிப்பது எப்படி?


உர விலை உயர்வு காரணமாக விவசாயிகள் உர பயன்பாட்டை 10% முதல் 20% வரை குறைத்துள்ளனர்!!


பப்பாளி சாகுபடியில் 3 வருடத்திற்கு 6,33,000 வருமானம் விவசாயியின் அனுபவம் மற்றும் செலவினங்கள்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post