வேளாண் கருவிகளுக்கு ரூ.3000 வரை மானியம் வேளாண்துறை அறிவிப்பு!!


பொள்ளாச்சியில் உள்ள உடுமலை வட்டாரத்தில் விவசாயிகளுக்கு வேளாண் கருவிகளுக்கு மானியம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த அரிய வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்திக்கொண்டுப் பயனடையுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.



வேளாண்மை உழவர் நலத்துறையின் வாயிலாக, உடுமலை வட்டத்திற்கு உட்பட்ட கல்லாபுரம், ஆண்டியகவுண்டனூர், ஜல்லிப்பட்டி ஊராட்சிகளுக்கு, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண் கருவிகளுக்கான மானியம் வழங்கப்படுகிறது.


மானியம் எவ்வளவு?


குறிப்பாக விசைத்தெளிப்பான்கள் 5 எண்களும், கைத்தெளிப்பான்கள் -5 எண்களும் வரப்பு பயிராக உளுந்து சாகுபடி செய்ய 15 விவசாயிகளுக்கும் மானிய விலையில் வழங்கப்பட உள்ளது. 


இந்த கருவிகள் அனைத்தும் அங்குள்ள, வேளாண்மை விரிவாக்க மையத்தில் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் விசைத்தெளிப்பான் முழு விலை ரூ.8,820, மானியம் ரூ. 3,000 விவசாயியின் பங்களிப்பு தொகை ரூ.5,820 ஆக இருக்கும்.



இதேபோல் கைத்தெளிப்பான் மொத்த விலை ரூ.2,649, மானியம் ரூ. 750, விவசாயின் பங்களிப்பு தொகை ரூ. 1900. உளுந்து 5 கிலோவிற்கான விலை ரூ.485 மானியம், ரூ.363 (75 சதவீதம் மானியம்) விவசாயியின் பங்களிப்பு தொகை ரூ.122.



மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS


கூடுதல்  விபரங்களுக்கு தொடர்பு கொள்ள 


கூடுதல்  விபரங்களுக்கு, வேளாண்மை உதவி இயக்குனர், உடுமலை, 9944557552 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். எனவே விவசாயிகள் இவற்றை வாங்கிப் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

மேலும் படிக்க....


PM Kisan 11வது தவணைத் தொகை இந்த தேதியில் வரும்! நரேந்திர சிங் தோமர் அறிவிப்பு!!


விவசாயிகளுக்கு புதிய பயிர் கடன் ஒரு ஏக்கருக்கு 8640 ரூபாய் கிடைக்கும், முழு விவரம்!!


விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் கடன் பெற விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரம் உள்ளே!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post