தமிழக அரசின் இலவச மாட்டுக்கொட்டகை திட்டம் 2022 விண்ணப்பிப்பது எப்படி?
கொட்டகை இலவசம்
விவசாயத்திலும் கால்நடைகளின் பங்கு இன்றியமையாதது. அந்தக் கால்நடைகளை வளர்ப்பதில் விவசாயிகளுக்கு உள்ள சிரமத்தையும், நிதிச்சுமையையும் போக்குவதற்கு, மத்திய-மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களைச்செயல்படுத்தி வருகின்றன.
அப்படியொரு திட்டம் தான் இலவச மாட்டுக்கொட்டகைத் திட்டம். அதாவது 100% மானியம். நீங்கள் எந்தவித முதலீடும் செய்யத் தேவையில்லை. உழைத்தால் மட்டுமேப் போதுமானது.
இத்திட்டம் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 2, 3, 5, 9 மாடுகள் என பல்வேறு பிரிவுகள் செயல்படுத்தப்படுகின்றன. இத்திட்டத்தின் மூலம் பயன்பெற ஊரக வேலைவாய்ப்பு ஊறுதித் திட்ட அட்டை வைத்திருக்க வேண்டியது அவசியம்.
இதன் படி பயன்பெற சுயஉதவிக் குழுக்களையோ, பஞ்சாயத்து கிளார்க், கால்நடை மருத்துவரையோ அல்லது நேரடியாகத் திட்டங்கள் தொடர்பான வட்டார வளர்ச்சி அலுவலரையோ (Scheme BDO)ஆவின் பால் சங்கத்தையோ விவசாயிகள் அல்லது மாடு வளர்க்க விரும்புவோர் அணுக வேண்டும்.
கொட்டகை வகைகள்
இரண்டு மாடுக் கொட்டகை 98 ஆயிரம் ரூபாய் செலவிலும், 3 மாடுகளைக் கொண்ட கொட்டகை 1,20,000ரூபாய் செலிவிலும் அமைத்துத்ததரப்படுகிறது.
இதுபோல் கொட்டகை அமைக்க அதிகபட்சம் 10 லட்சம் ரூபாய் வரை தமிழக அரசால் வழங்கப்படுகிறது.
கொட்டகை பெற தகுதி
ஏற்கனவே மாடு வளர்த்துவருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஆவின் நிறுவனத்திற்கு அதிகளவில் பால் விநியோகம் செய்பவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். இதைத்தவிர மாடு வளர்க்க ஆசைப்படும் அனைவருமே விண்ணப்பிக்கலாம்.
தேவைப்படும் ஆவணங்கள்
- சொந்தமாக நிலம் வேண்டும்.
- சாப்கார்டு ஏற்கனவே போட்டதாக இருக்க வேண்டும்.
- ஆதார் அட்டை.
- வாக்காளர் அடையாள அட்டை.
- கம்ப்யூட்டர் சிட்டா.
யாரை அணுகுவது?
- பஞ்சாயத்துக் கிளார்க்
- கால்நடை மருத்துவர்
- சுய உதவிக் குழுக்கள்
- வட்டார வளர்ச்சி அலுவலர்
இவர்களில் யாரேனும் ஒருவரிடம் இருக்கும் விண்ணப்பத்தைப் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.விருப்பம் உள்ள விவசாயிகள் விண்ணப்பித்துப் பயன்பெறலாம்.
மேலும்
படிக்க....
வேளாண் கருவிகளுக்கு ரூ.3000 வரை மானியம் வேளாண்துறை அறிவிப்பு!!
விவசாயிகளுக்கு வட்டியே இல்லாமல் ரூ.3 லட்சம் கடன் வழங்கப்படுகிறதா?
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற
YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை
தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக
வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...