விவசாயிகளுக்கு வட்டியே இல்லாமல் ரூ.3 லட்சம் கடன் வழங்கப்படுகிறதா? உண்மையா?


கிசான் கிரெடிட் கார்டில் விவசாயிகளுக்கு வட்டியே இல்லாமல் ரூ.3 லட்சம் கடன் கிடைக்கும் என்ற செய்தி பரவிக் கொண்டிருக்கிறது. நாடு முழுவதும் பரவிவரும் இந்தத் தகவல் காரணமாக, விவசாயிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.


கிசான் கிரெடிட் கார்டு (KCC)


விவசாயிகள் அவசர தேவைக்காகக் கடன் பெறவும், வேளாண் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளவும், வங்கிகள் சார்பில் கிசான் கிரெடிட் கார்டு வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. 



இதன்படி, ஆயிரக்கணக்கான விவசாயிகள் குறைந்த வட்டியில் கடன் பெற்றுப் பயனடைந்துள்ளனர். கிசான் கிரெடிட் கார்டு மூலம் உத்தரவாதமில்லா கடன்கள் குறைந்த வட்டியில் வழங்கப்படுகின்றன. கிசான் கிரெடிட் கார்டுகளுக்கான செயல்முறை கட்டணங்கள் உள்ளிட்ட பல்வேறு கூடுதல் கட்டணங்களை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.


குறைந்த வட்டி


இந்த கிசான் கிரெடிட் கார்டு குறைந்த வட்டியில் விவசாயக் கடன் வழங்குவதற்காக விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு இதன் மூலம் 4 சதவீத வட்டிக்கு கடன் கொடுக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 2 சதவீத வட்டிக்குக் கூட கடன் வாங்கலாம்.


இலவச கடன் 


இந்நிலையில் கிசான் கிரெடிட் கார்டுகள் மூலமாக வட்டியே இல்லாமல் கடன் கொடுக்கப்படுகிறது என்ற செய்தி தற்போது வேகமாகப் பரவி வருகிறது. அது தொடர்பான செய்தித்தாளின் துண்டு பகிரப்பட்டு, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


உண்மையா?


இதுதொடர்பாக PIB தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தில் வட்டி இல்லாமல் கடன் என்பது போலியான செய்தி என்று தெளிவுபடுத்தியுள்ளது. எனவே இதுபோன்ற போலியான செய்திகளை நம்ப வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது.



விண்ணப்பிப்பது எப்படி? 


ஒருவேளை நீங்கள் கிசான் கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்க நினைத்தால் வங்கிகளிலேயே சுலபமாக விண்ணப்பிக்கலாம். இணையதளத்தில் கிசான் கார்டுக்கான விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து அதைப் பூர்த்தி செய்த பின்னர் வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். 


உங்களுக்கு விருப்பமான வங்கியைத் தேர்ந்தெடுத்து அந்த வங்கியில் விண்ணப்பிக்கலாம். ஒப்புதல் அளிக்கப்பட்டவுடன் விண்ணப்பதாரரின் வீட்டிற்கு கிசான் கிரெடிட் கார்டு அனுப்பப்படும்.


என்னென்ன தேவை?


கிசான் கிரெடிட் கார்டு வாங்குவதற்கு நில ஆவணங்கள் மற்றும் பயிர் விவரங்களைச் சமர்ப்பித்து விண்ணப்பப் படிவத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். இதுபோக நில ஆவணத்தின் நகலையும் சமர்ப்பிக்க வேண்டும். 



ஆதார் அட்டை, பான் அட்டை, 100 நாள் வேலைத் திட்டத்துக்கான அட்டை, வாக்காளர் அட்டை போன்ற ஏதேனும் ஒரு ஆவணத்துடன் சேர்த்து, நில ஆவணங்கள், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ போன்ற ஆவணங்கள் தேவை.

 

மேலும் படிக்க....


PM KISAN 11வது தவணை ரூ. 2000 பயனாளிகளுக்கு மே 31 அன்று மாற்றப்படும், சமீபத்திய புதுப்பிப்புகளைப் பார்க்கவும்!!


விவசாயிகளுக்கு புதிய பயிர் கடன் ஒரு ஏக்கருக்கு 8640 ரூபாய் கிடைக்கும், முழு விவரம்!!


விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் கடன் பெற விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரம் உள்ளே!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post