ஏரிகளில் விவசாய பயன்பாட்டிற்காக வண்டல் மண் எடுக்க அனுமதி! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
அரியலூர்
மாவட்டத்தில் நீர்வளத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில், விவசாய பயன்பாட்டிற்காக
வண்டல் மண் இலவசமாக எடுத்துக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ரமணசரஸ்வதி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து
அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், அரியலூர் மாவட்டத்தில் நீர்வளத்துறையின்
கட்டுப்பாட்டில் உள்ள 92 ஏரிகள் மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள
454 குளம், ஏரிகளில் மட்டும் வண்டல் மண், சவுடுமண், கிராவல் மண் போன்ற கனிமங்களை வேளாண் உபயோகம், சொந்த வீட்டு உபயோகம் மற்றும் மண்பாண்டம்
தயாரித்தல் ஆகிய காரியங்களுக்காக இலவசமாக எடுத்துச்செல்ல அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
எனவே,
பொதுமக்கள், விவசாயிகள், மண்பாண்டம் தயாரிப்பு மற்றும் பதிவு செய்யப்பட்ட மண்பாண்டம்
தயாரிக்கும் தொழிலாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள
ஏரிகளில் இருந்து மட்டும் வண்டல் மண், சவுடுமண், கிராவல் மண் போன்ற கனிமங்களை இலவசமாக
எடுத்துக்கொள்ள அனுமதிகோரி சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்களிடம் விண்ணப்பிக்கலாம்.
மேற்படி
விண்ணப்பங்கள் மீது சம்மந்தப்பட்ட வட்டாட்சியரால் உடன் விசாரணை மேற்கொண்டு, வண்டல்
மண் எடுத்துச்செல்ல உரிய அனுமதி வழங்கப்படும் என ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
ஆட்சியரின் இந்த அறிவிப்பு அரியலூர் மாவட்ட விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள்
இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும்
படிக்க....
பண்ணைக்குட்டைகள் அமைக்க 100 சதவீதம் மானியம்!! விவசாயிகளின் வாழ்வை வளமாக்க 92 ஊராட்சிகள் தேர்வு!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற
YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை
தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக
வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...