பண்ணைக்குட்டைகள் அமைக்க, 100 சதவீதம் மானியம்!! விவசாயிகளின் வாழ்வை வளமாக்க 92 ஊராட்சிகள் தேர்வு!!
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 92 ஊராட்சிகளை தன்னிறைவாக மாற்ற, வேளாண் வளர்ச்சி திட்டத்தில், அனைத்து துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளின் வாழ்வுக்கு வளம் சேர்க்கும் விதமாக மானியம், இலவச திட்டங்களை செயல்படுத்தி, அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த முயற்சி மேற்கொண்டுஉள்ளனர்.
ஆய்வு கூட்டம்
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் முதற்கட்டமாக, 2021 - -22ம் ஆண்டிற்கு, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், செங்கல்பட்டில் 55 ஊராட்சிகளும், காஞ்சிபுரத்தில் 37 ஊராட்சிகளும் என மொத்தம் 92 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.
தொடர்ந்து, மேற்கண்ட ஊராட்சிகளில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், பல துறைகள் சார்பாக பல திட்டங்கள் செயல்படுத்தி, தன்னிறைவு ஊராட்சியாக மாற்றும் திட்டம் துவங்கியுள்ளது.
இது தொடர்பான ஊரக வளர்ச்சி, வேளாண், வருவாய் உள்ளிட்ட பல துறை அதிகாரிகள், பங்கேற்ற ஆய்வு கூட்டம் சமீபத்தில் நடந்தது. அதில், விவசாயம் மற்றும் அது சார்ந்த பணிகளை மேம்படுத்துவது, விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு வளம் சேர்க்கும் வகையில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்து, அதிகாரிகள் கலந்து ஆலோசித்தனர்.
ஊராட்சிகளில் உள்ள தரிசு நிலங்கள் தேர்வு செய்யப்பட்டு, விளை நிலமாக மாற்றப்பட உள்ளது. அதற்காக கிணறு, ஆழ்துளை கிணறு, நுண்ணீர் பாசனம், சூரிய சக்தி பம்ப் செட்டுகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளன.
வேளாண் விளை பொருட்களை மதிப்பு கூட்டி சந்தைப்படுத்துதல், கால்நடைகளின் நலன் காத்து, பால் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
வருவாய் துறை மூலம், விவசாயிகளுக்கு புதிய பட்டா, பட்டா மாறுதல் செய்யும் பணியும் செயல்படுத்தப்பட உள்ளது. கூட்டுறவு சங்கங்கள் மூலம் அதிகளவு பயிர்க் கடன்கள் வழங்க, விவசாயிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். நெட்டை தென்னங்கன்று, வரப்பு பயிர் துவரை, உளுந்து, பச்சைப்பயறு, தட்டைப்பயறு விதைகள் மானியத்தில் வழங்கப்படுகின்றன.
பயிர் பாதுகாப்பு
பயிர் பாதுகாப்பு கருவிகள், கைத்தெளிப்பான், விசைத்தெளிப்பான் கருவிகள் மானியத்தில் வழங்கப்படுகின்றன. வீட்டுத் தோட்டம், தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்ய ஊக்கத்தொகை தரப்படுகிறது. பிளாஸ்டிக் கூடைகள் மற்றும் பயிர் பாதுகாப்பு செய்ய, பிளாஸ்டிக் உருளை வினியோகம்.
விவசாயிகளின் வருமானத்தை பெருக்க, வயல்வெளிகளில் வரப்பு ஓரங்களில் பழச்செடிகள், மரக்கன்றுகள் நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்தில் கிணறுகள் அமைத்து தரப்படுகிறது.
பண்ணைக்குட்டைகள் அமைக்க, 100 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. ஊராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சிறுபாசன குளங்கள், ஊருணிகள், குளங்கள் மற்றும் வரத்து கால்வாய்களை துார்வாரி மேம்படுத்த, பணிகள் செயல்படுத்தப்பட உள்ளன.
இந்த திட்டங்களை, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 92 ஊராட்சிகளில் முறையாக செயல்படுத்தினால், விவசாயிகளின் வாழ்வு வளமாகும் என, விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
வேளாண் இணை இயக்குனர் சுரேஷ் கூறியதாவது:கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், தேர்வு செய்யப்பட்டுள்ள ஊராட்சிகளில் அனைத்து துறையினர் ஒன்றுணைந்து, வளர்ச்சி பணிகளை செயல்படுத்த உள்ளனர்.
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS
கண்காணிப்பு குழு
இந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை கண்காணிக்க, மாவட்ட கலெக்டர் தலைவராகவும், வேளாண் இணை இயக்குனர் உறுப்பினர் செயலராகவும், ஏழு துறைகளின் அலுவலர்களை உறுப்பினர்களாகவும் உடைய மாவட்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இயற்கை விவசாயம் செய்ய, விவசாயிகளுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. இத்திட்டப் பணிகள் விரைவில் துவக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
படிக்க....
விவசாயிகளுக்கு புதிய பயிர் கடன் ஒரு ஏக்கருக்கு 8640 ரூபாய் கிடைக்கும், முழு விவரம்!!
விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் கடன் பெற விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரம் உள்ளே!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற
YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை
தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக
வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...