நெற் பயிரில் பாக்டீரியா இலை கருகல் நோயை தடுத்து பயிரை பாதுகாப்பது எப்படி?
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டாரத்தில் சேத்தூர், கோவிலூர், மேட்டுப்பட்டி, முத்துசாமியாபுரம், வடக்கு தேவதானம், தெற்கு தேவதானம் ஆகிய கிராமங்களில் தற்போது நெல் பயிர் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு 40-45 நாள் பயிர் முதல் அறுவடைபருவம் வரை பயிராக உள்ளது.
இந்நிலையில் நெல் பயிரிலுள்ள பாக்டீரிய இலைக்கருகல் மற்றும் பாக்டீரிய இலைக்கோடு நோய் தாக்குதலிலிருந்து பயிரை பாதுகாக்க விருதுநகர், வேளாண்மை இணை இயக்குநரின் அறிவுரையின் பேரில் கோவிலாங்குளம், மண்டல ஆராய்ச்சி நிலைய பயிர் நோயியியல் உதவிப்பேராசிரியர் முனைவர் அகிலா, வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுபாடு) சி.இராஜேந்திரன், இராபாளையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் (பொறுப்பு) கு.தனலெட்சுமி மற்றும் வேளாண்மை அலுவலர் (தரக்கட்டுபாடு) கீதா ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
வயலாய்வின் போது நெல் பயிரில் பாக்டீரியா இலைக்கருகல் மற்றும் இலைக்கோடு நோய் தாக்குதல் அறிகுறிகள் காணப்பட்டது. சாந்தோமோனாஸ் ஒரைசேபிவி. ஒரைசே மற்றும் சாந்தோமோனாஸ் ஒரைசேபிவி. ஒரைசிகோலோ போன்ற இரண்டு வகையான பாக்டீரியாக்கள் தான் இந்த நோயை ஏற்படுத்துகின்றன.
இதில் முதலாவதாக இருக்கும் பாக்டீரியாவினால் தான் நோயின் தாக்கம் அதிகம் உள்ளது. நெல் இலைப்பரப்பில் விளிம்புகளின் ஓரமாக மஞ்சள் நிற கருகல் அறிகுறிகள் தென்பட்டது.
நோயின் தாக்கம் அதிகமாக காணப்பட்ட இடங்களில் இலைப்பரப்பின் நடுப்பகுதியிலும் மற்றும் இலையின் மேற்பரப்பு மற்றும் இலையுறை முழுவதுமாக பாதிக்கப்பட்டு இருந்தது.
மேலும் இத்தாக்குதல் ஏற்பட அதிக மழை, பனிப்பொழிவு, அதிக நீர்ப்பாசனம் மற்றும் வயல்களில் நீர் தேங்குதல், பகல் நேர வெப்பநிலை (25-30ழஊ), பருவம் தப்பிய மேல் உரமிடல் ஆகிய நோய்க்கான சாதகமான சூழ்நிலை காரணிகளாக வயலாய்வின் போது கண்டறியப்பட்டது.
இதனை கட்டுப்படுத்திட விவசாயிகள் தங்களது நெல்வயல்களில் நீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ளவேண்டும். நீர் மறைய நீர் கட்டவேண்டும். நோயின் தீவிரம் அதிகமாகும் போது காப்பர் ஹைட்ராக்ஸைடு 2.5 கிராம் / 1 லிட்டர் என்ற அளவில் ஒரு ஏக்கருக்கு 500 கிராம் என்ற வீதம் ஒட்டும் திரவம் கலந்து (1மில்லி/1 லிட்டர்) தெளிக்க வேண்டும்.
நோயின் தீவிரத்தைப் பொறுத்து 15 நாட்கள் இடைவெளியில் இரண்டாவது முறையும் தெளிக்கலாம் என விருதுநகர் மாவட்ட வேளாண்மை வேளாண்மை இணை இயக்குநர் ச.உத்தண்டராமன் தெரிவித்தார்.
மேலும்
படிக்க....
விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் கடன் பெற விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரம் உள்ளே!!
தமிழக அரசின் இலவச ஆட்டுக்கொட்டகை திட்டம் 2022 விண்ணப்பிப்பது எப்படி?
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற
YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை
தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக
வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...