மகத்தான மகசூலுக்கு மண் ஆய்வு தான் தீர்வு! மண்வளம் மற்றும் மேலாண்மை!!
ஒவ்வொரு விவசாயியும் தங்கள் நிலத்தின் மண்வளம் மற்றும் மேலாண்மை குறித்து அறிந்து கொள்ள உதவுவது மண்ணாய்வு அறிக்கை. ஓரிடத்தில் உள்ள கரிமச்சத்தின் அளவை பொறுத்துதான் ஒரு பயிருக்கு தேவையான இதர சத்துக்களும் கிடைக்கும்.
அதனால்தான், எளிய வடிவில் தொழுவுரம், மட்கிய தழையுரம், மண்புழு உரம், மட்கிய கோழியெரு, மட்கிய கரும்புச்சக்கை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை, ஏக்கருக்கு ஐந்து டன்னுக்கு குறையாமல் இடவேண்டுமென்று பரிந்துரை செய்யப்படுகிறது.
மண்ணின் காரஅமில நிலை பி.எச். எனும் அலகுமூலம் குறிப்பிடப்படும். சமஅளவு என்பது 7 ஆகும். இதற்கு மேலுள்ள மண் உப்புத்தன்மை மிக்கது எனப்படும். இதற்கு கீழேயுள்ள மண் அமில தன்மை மிக்கது எனப்படும்.
பாசன நீருக்கும் இதே அலகு கணக்கு உண்டு. நீருக்கும் சமநிலை என்பது 7 தான். மண்ணும், நீரும் இந்த சமதநிலையில் இருந்தால், அந்த நிலத்தில் எந்த உரத்தை போட்டாலும் நல்ல விளைவுகளை காணலாம்.
மண்ணிலுள்ள உப்புகளின் அளவை சுட்டிக்காட்ட இ.சி. எனப்படும் மின்கடத்தும் திறன் மதிப்பீடு பயன்படுகிறது. மின் கடத்தும் திறன் கூடுதலாக இருப்பது, அதாவது 4க்கு மேலே இருந்தால், அது உவர் அல்லது உவர் களர் தன்மையுள்ள மண்ணாகும். இத்தகைய பி.எச். மறறுமட இ.சி. மிகுதியாக இருக்கும் மண், சாகுபடிக்கு ஏற்றதாக இருக்காது.
இத்துடன், அந்த மண்ணிலுள்ள பேரூட்டங்களான, தழை, மணி, சாம்பல் சத்துகளின் அளவும் இந்த மண்வள அட்டையில் தெரிவிக்கப்படும். கந்தகம், மெக்னீசியம், கால்சியம், இரும்பு, மாங்கனீசு, துத்தநாகம், காப்பர், போரான் ஆகிய நுண்ணூட்டங்களின் அளவுகளும் ஆய்வு செய்து தரப்படும். மேலும், சிக்கலான மண்ணை சீராக்க, எவ்வளவு ஜிப்சம் அல்லது சுண்ணாம்பை இடவேண்டும் என்பதை பற்றியும் குறிப்பிடப்படும்.
உப்பு நிலங்களை உவர் நிலம், களர் நிலம், உவர் களர் நிலம் என மூன்று வகைகளாக பிரிக்கலாம். உவர் மண் என்றால், இ.சி. என்னும் மின் கடத்தும் திறன் 4க்கு மேல் இருக்கும். சோடிய அயனியின் படிமானம் 15 சதத்துக்கு கீழும், கார அமில நிலை 8.5க்கு கீழும் உள்ளன என்று பொருளாகும்.
இப்படி இல்லாமல், மின் கடத்தும் திறன் 4க்கு கீழும், சோடிய அயனியின் படிமானம 15க்கு மேலும், பி.எச். 8.5க்கு மேலும் இருந்தால் களர் மண்ணாகும். எல்லா மண்ணையும் திருத்த முடியும். சரியான பயிர்களை சாகுபடி செய்து கூடுதலான வவை பெறுவதற்கான வழிகள் நிறைய உள்ளன.
தகவல் வெளியீடு
டாக்டர் பா.இளங்கோவன் மேலும் விபரம் பெற 98420 07125.
மேலும்
படிக்க....
PM Kisan 11வது தவணைத் தொகை இந்த தேதியில் வரும்! நரேந்திர சிங் தோமர் அறிவிப்பு!!
வேளாண் கருவிகளுக்கு ரூ.3000 வரை மானியம் வேளாண்துறை அறிவிப்பு!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற
YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை
தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக
வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...