ஆட்டுக்கிடை முறையை பயன்படுத்தி எளிய முறை மண்ணின் வளத்தை அதிகரிக்கலாம்!!


வேதியியல் உரங்களின் பயன்பாடு அதிகரித்து வருவதாலும், உயர் விளைச்சல் பயிர் ரகங்கள் வருகையாலும் மண்ணிலுள்ள அங்ககச் சத்துக்கள் எனப்படும் கரிம அமிலங்களின் அளவு குறைந்து கொண்டே வருகின்றது.


உழவிற்கு எருதுகளை நம் முன்னோர்கள் பயன்படுத்திய போது எருதுகளின் சாணம் மற்றும் பயிர் கழிவுகளை மட்க வைத்தும் அவரவர் நிலங்களில் வருடந்தோறும் விவசாயிகள் இட்டு மண்ணின் அங்ககச் சத்தின் அளவை நிலை நிறுத்தி வந்தனர். 



தற்போது நவீன விவசாய முறையில் இயந்திரங்கள் வருகை, வேதியியல் உரங்களின் அதிகப் படியான பயன்பாடு, உயர் விளைச்சல் ரகங்களின் மூலம் அதிக சத்துக்கள் நிலத்தில் இருந்து எடுக்கப்பட்டதாலும், அங்கக உரங்களின் பயன்பாடும் குறைந்துள்ளதாலும் மண்ணின் வளம் மிகக் குறைந்து 0.5 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது.


அங்ககச் சத்து அதிக அளவில் இருந்தால் தான் மண்ணில் மண்புழு, வளிமண்டல நைட்ரஜனை மண்ணில் நிலை நிறுத்தும் நுண்ணுயிரிகளான அசோஸ்பைரில்லம், ரைசோபியம் மற்றும் பாஸ்பரஸ் சத்தினை கிடைக்காத நிலையிலிருந்து கிடைக்கும். 


நிலைக்கு மாற்றும் பாஸ்போ பாக்டீரியாக்களின் பெருக்கம் அதிகரித்து மண்ணின் வளம் மேம்படும். அங்ககச் சத்தை அதிகரிப்பதற்கு நிலத்தில் இயற்கை உரங்களான மக்கிய மாட்டுச் சாணம், ஆட்டுப்புழுக்கை, கோழி எரு மற்றும் இலை உரங்களான சணப்பு, தக்கைப்பூண்டு, கொழுஞ்சி போன்றவற்றை நிலத்தில் இட்டு மண்ணின் வளத்தை அதிகரிக்கலாம்.



நெல் வயல்களுக்கு தண்ணீர் வசதி இருக்கும் என்பதால் தக்கைப்பூண்டு, சணப்பை வளர்த்து மடக்கி உழுது மண்ணில் அங்ககச் சத்தின் அளவை நிலை நிறுத்தலாம். 


மானாவாரி மற்றும் குறைந்த நீர் வசதி உள்ள நிலங்களுக்கு மாட்டுப் பண்ணைகளில் மாட்டுச் சாணத்தை விலைக்கு வாங்கி போக்குவரத்து செலவினம் அதிக அளவில் செலுத்தி ஏக்கருக்கு 5 டன் நிலத்தில் இட்டு, அதனை ஆட்கள் கொண்டு பரப்புதல் என்பது சற்றே கடினம் ஆகும்.


இதற்கு ஓர் எளிய தீர்வாக ஆட்டுக்கிடை, மாட்டுக்கிடை பயன்பாடு இருக்கும் என்பதில் ஐயமில்லை. 500 ஆடுகள் கொண்ட ஒரு ஆட்டுப்பட்டியினை கொண்டு நாள் ஒன்றுக்கு 20 முதல் 25 சென்ட் நிலத்தில் அடைக்க இயலும் என்பதால் ஏக்கர் ஒன்றுக்கு 4 நாட்கள் வீதம் கிடை அமர்த்தலாம். 


இதன் மூலம் ஆட்டின் புழுக்கை, சிறுநீர் நிலத்தில் விழுந்து மண்ணிற்கு தேவையான அங்ககச் சத்து கிடைத்து மண்ணின் கரிமச் சத்தினை ஓரளவிற்கு ஈடு செய்ய முடியும். நிலம் முழுவதும் கிடை அமர்த்தப்பட்டவுடன் மழை பெய்வதற்கு முன்னால் நிலத்தை உழவு செய்து விட வேண்டும். 


இல்லையேல் நீரில் அடித்துச் சென்றுவிட வாய்ப்புள்ளது. மாட்டுச் சாணத்தை விட ஆட்டு எருவில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் 3 சதவீதம் நைட்ரஜன், 1 சதவீதம் பாஸ்பரஸ், 2 சதவீதம் பொட்டாசியம் சத்தும் உள்ளது. 



எனவே விவசாயிகள் தங்கள் நிலத்தில் ஆட்டுக்கிடை முறையை பயன்படுத்தி பயன்பெறுமாறு மதுரை விதைப் பரிசோதனை அலுவலர் ம.மகாலட்சுமி மற்றும் வேளாண்மை அலுவலர்கள் இரா.இராமசாமி, பா.சாய்லெட்சுமி சரண்யா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.


மேலும் படிக்க....


மகத்தான மகசூலுக்கு மண் ஆய்வு தான் தீர்வு! மண்வளம் மற்றும் மேலாண்மை!!


PM Kisan 11வது தவணைத் தொகை இந்த தேதியில் வரும்! நரேந்திர சிங் தோமர் அறிவிப்பு!!


பண்ணைக்குட்டைகள் அமைக்க 100 சதவீதம் மானியம்!! விவசாயிகளின் வாழ்வை வளமாக்க 92 ஊராட்சிகள் தேர்வு!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post