தென்னையினை தாக்கும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த ஆலோசனை!!


தென்னை மரங்களைத் தாக்கும்; ரூகோஸ் வெள்ளை ஈக்களை ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்திட சிங்கம்புணரி வேளாண்மை உதவி இயக்குநர் அ.அம்சவேணி ஆலோசனை தெரிவித்துள்ளார். 



தென்னை மற்றும் வாழை மரங்களில் ரூகோஸ் சுருள் வெள்ளைஈ எனும் பூச்சியின் தாக்குதல் தற்சமயம் அனைத்து பகுதிகளிலும் பரவலாகக் காணப்படுகிறது. நடப்பாண்டில் ஒரு சில பகுதிகளில் இதன் தாக்குதல் தென்படுகிறது. 


எனவே, விவசாயிகள் இவ்வெள்ளை ஈக்களை பற்றி தெரிந்து கொள்வதோடு ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்திடகேட்டுக் கொள்ளப்படுகிறது.


ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள்


வயதில் முதிர்ந்த பெண் வெள்ளை ஈக்கள் மஞ்சள் நிற முட்டைகளை சுழல் வடிவ அமைப்புகளில் ஓலைகளின் அடிப் பாகத்தில் இடுகின்றன. இம்முட்டைகள் மெழுகுப்பூச்சுடன் காணப்படும். 


முட்டைகளில் இருந்துவெளிப்படும் இளங்குஞ்சுகள் இலைகளில் அடிப்பரப்பில் இருந்துகொண்டு இலைகளின் சாற்றினை உறிஞ்சி வளர்கின்றன. சுமார் 20-30 நாட்களில் முழு வளர்ச்சியடைந்த ஈக்களாக மாறி கூட்டம் கூட்டமாக தென்னை ஓலைகளின் அடிப்பகுதிகளில் காணப்படுகின்றன. 



இவைகள் காற்றின் திசையில் எளிதில் பரவி அடுத்தடுத்த தோட்டங்களில் உள்ள தென்னைமரங்களில் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.


தாக்குதல் அறிகுறிகள்


குஞ்சுகளும் வளர்ச்சியடைந்த ஈக்களும் தென்னை மரங்களின் ஓலைகளில் அடியில் இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சுவதோடு தேன் போன்ற திரவக் கழிவுகளையும் வெளியேற்றுவதால் கீழ்மட்ட அடுக்கில் உள்ள ஓலைகளின் மேற்பரப்பில் கரும்பூசணம் படர்ந்து காணப்படும். 


வெள்ளை ஈக்களானது தென்னை மரங்களைத் தவிர வாழை, சப்போட்டா ஆகிய பயிர்களிலும் தாக்குதல்களை ஏற்படுத்துகிறது. தற்பொழுது இதன் தாக்குதல் ஆங்காங்கே தென்னந்தோப்புகளில் காணப்படுகிறது. எனவே கீழ்கண்ட வழிமுறைகளைக் கடைபிடித்து கட்டுப்படுத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.


வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த பின்பற்ற வேண்டிய நடவடிக்கை முறைகள்


மஞ்சள் நிறமானது வளர்ச்சியடைந்த வெள்ளை ஈக்களைக் கவரும் தன்மையுடையதால் மஞ்சள்நிற பாலித்தீன் தாள்களிலான ஆமணக்கு எண்ணெய் தடவிய ஒட்டும் பொறிகளை (நீளம் 5 அடி , அகலம் 1 1/2அடி) ஏக்கருக்கு 10 என்ற எண்ணிக்கையில் 5-6அடி உயரத்தில் ஆங்காங்கே கட்டிவைத்து அல்லது மரங்களைச் சுற்றி கட்டி வைத்தும் வெள்ளை ஈக்களை கவர்ந்து அழிக்கலாம்.



மஞ்சள் விளக்கு பொறிகளை ஏக்கருக்கு 2 வீதம் தென்னந்தோப்புகளில் வைப்பதன் மூலம் மாலை வேளைகளில் 6 மணி முதல் 11 மணி வரை ஒளிரச் செய்வதன் மூலமும் வெள்ளை ஈக்களை கவர்ந்து அழிக்கலாம்.


தாக்கப்பட்ட தென்னை மரங்களின் இலைகளின் மேல் தெளிப்பான்களை கொண்டு வேகமாக நீரை அடிப்பதன் மூலம் வெள்ளை ஈக்கள் மற்றும் கரும்பூசணங்களை அழிக்கலாம்.


வெள்ளைஈ அதிகளவு பரவும்போது பொறிவண்டுகள், என்கார்ஸியா ஒட்டுண்ணிகள் போன்ற இயற்கை எதிரிகள் தோப்புகளிலேயே இயற்கையாகவே உருவாக ஆரம்பிக்கும். 


என்கார்ஸியா ஒட்டுண்ணிகள் அதிகளவு உருவாகி வெள்ளை ஈக்களின் சேதத்தை பெருமளவு குறைக்கின்றது. என்கார்ஸியா ஒட்டுண்ணிகளானது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டுவரும் ஆழியார் தென்னைஆராய்ச்சி நிலையத்தின்; மூலம் வழங்கப்படுகிறது. இதனை வாங்கி விவசாயிகள் தென்னந்தோப்பில் வெளியிடலாம்.



கிரைசோபெர்லா இரை விழுங்கிகள் தென்னை மரங்களைத் தாக்கும் வெள்ளை ஈக்களின் இளம் குஞ்சுகளை நன்றாக உட்கொள்வதால் தாக்கப்பட்ட தோட்டங்களில் ஏக்கருக்கு 400 முட்டைகள் என்ற எண்ணிக்கையில் கிரைசோபெர்லா இரைவிழுங்கிகளின் முட்டைகளை விடுதல் நல்ல பயனளிக்கும். 


இந்த இரை விழுங்கிகளின் முட்டைகள் அடங்கிய அட்டையானது திருச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மத்திய ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மையம் மற்றும் உயிரியல் கட்டுபாட்டு ஆய்வகத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது இதனை வாங்கி பயன் பெறலாம்.


ஆதிக அளவு பூச்சிக் கொல்லிகளை உபயோகிக்கும்போது நன்மை செய்யும் இயற்கை எதிரிகள் அழிந்து விடுவதால், இரசாயன பூச்சிக்கொல்லிகளை கண்டிப்பாக தவிர்த்து இயற்கை எதிரிபூச்சிகள் வளர்வதற்கு உரிய சூழலை மேம்படுத்துவது சிறந்ததாகும்.


உழவன் செயலி


விவசாயிகள் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட உழவன் செயலியல் பூச்சி நோய் கண்காணிப்பு என்ற பகுதியில் பயிர் பாதிப்பினை புகைப்படம் எடுத்து அனுப்பினால் விவசாயிகளுக்கு பயிர்பாதுகாப்பு மேலாண்மை முறைகள் விவசாயியின் அலைபேசிக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படும். 


விவசாயிகள் இந்தவாய்ப்பினையும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் கூடுதல் விபரங்களுக்கு தங்கள் பகுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தினைஅணுகிடக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.



எனவே, தென்னை விவசாயிகள் மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றி தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளைஈ தாக்குதலை கட்டுப்படுத்திடுமாறு சிங்கம்புணரி வேளாண்மை உதவி இயக்குநர் அவர்கள் கேட்டுக் கொள்கிறார்கள்.

 

மேலும் படிக்க....


மகத்தான மகசூலுக்கு மண் ஆய்வு தான் தீர்வு! மண்வளம் மற்றும் மேலாண்மை!!


வேளாண் கருவிகளுக்கு ரூ.3000 வரை மானியம் வேளாண்துறை அறிவிப்பு!!


PM Kisan 11வது தவணைத் தொகை இந்த தேதியில் வரும்! நரேந்திர சிங் தோமர் அறிவிப்பு!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post