PM-Kisan தகுதியுள்ள விவசாயிகளுக்கு பணம் வராவிட்டால் இந்த எண்களில் புகார் அளிக்கலாம்!!
PM கிசான் திட்டத்தின் கீழ் 11ஆவது தவணைத் தொகை அடுத்த வாரம் தகுதியுள்ள விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது. அவ்வாறு விண்ணப்பித்த உங்கள் வங்கிக்கணக்கில் பணம் வராவிட்டால், இந்த தொலைப் பேசி எண்களில் புகார்கள் அளிக்கலாம்.
PM கிசான் திட்டம்
மத்திய மோடி அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (PM-Kisan) என்ற திட்டத்தின் கீழ் இந்தியாவில் பொருளாதார ரீதியில் நலிவடைந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகளின் நிதிச்சுமையைக் குறைக்கும் வகையில் இந்த நலத்திட்டத்தை மோடி தலைமையிலான மத்திய அரசு அறிமுகம் செய்தது.
இந்தத் திட்டத்தின்படி, தகுதியுள்ள விவசாயிகளுக்கு மொத்தம் 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்தத் தொகை தலா ரூ.2,000 வீதம் 3 தவணைகளாக, நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கிலேயே டெபாசிட் செய்யப்படுகிறது.
நிதியுதவி பெற தகுதி
பயிரிடக்கூடிய நிலங்களைத் தங்களது பெயரில் வைத்திருக்கும் விவசாயிகளின் குடும்பங்கள் பிரதமர் கிசான் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம். கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
11-வது தவணை
PM கிசான் திட்டத்தின் கீழ் இதுவரை 10 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. 11ஆவது தவணைப் பணம் எப்போது கிடைக்கும் என்று விவசாயிகள் காத்திருக்கின்றனர். கடந்த இரண்டு மாதங்களாகவே பணம் வரும் தேதி தொடர்பான செய்திகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால் இன்னும் விவசாயிகளுக்கு நிதியுதவி விடுவிக்கப்படவில்லை.
பணம் வரும் தேதி
இந்நிலையில் PM கிசான் திட்டத்தின் 11ஆவது தவணைத்தொகை மே 31ஆம் தேதி, அதாவது அடுத்த வாரம் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. ஜூன் மாதத்திலிருந்து பயனாளிகள் வங்கிக் கணக்கில் பணம் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விவசாயிகள் சிலருக்கு தங்களுக்கு நிதியுதவி கிடைக்குமா அச்சம் இருக்கிறது. பிஎம் கிசான் கணக்கில் பயனாளியின் விவரங்கள் சரியாக இல்லாவிட்டால் நிதியுதவி வராமல் போக வாய்ப்பு உள்ளது. அதைச் சரிபார்க்க pmkisan.gov.in என்ற வெப்சைட்டில் சென்று பார்க்கலாம். அதிலுள்ள 'Beneficiary Status' என்ற ஆப்சனில் இதுகுறித்து தெரிந்துகொள்ளலாம்.
புகார் அளிக்க
ஒருவேளை தகுதியுள்ள விவசாயிகளுக்கு பணம் வராவிட்டால் கீழ்க்காணும் எண்களில் புகார் கொடுக்கலாம்.
- PM கிசான் டோல் ஃபிரீ நம்பர்: 18001155266
- பிஎம் கிசான் ஹெல்ப்லைன் நம்பர்: 155261
- லேண்ட் லைன் நம்பர்கள்: 011—23381092, 23382401
- PM கிசான் நியூ ஹெல்ப்லைன்: 011-24300606
- மற்றொரு ஹெல்ப்லைன்: 0120-6025109
மேலும்
படிக்க....
ஆழ்துளை கிணறு, சொட்டு நீர் பாசனம் போன்றவற்றுக்கு 100% மானியம் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!!
Pm Kisan 11 தவணைக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு! மே 31 அன்று பிரதமர் நரேந்திர மோடி வெளியிடுகிறார்!!
ஆட்டுக்கிடை முறையை பயன்படுத்தி எளிய முறை மண்ணின் வளத்தை அதிகரிக்கலாம்!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற
YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை
தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக
வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...