விவசாயிகளுக்கு 3 லட்சம் மானியத்தில் சோலார் மின் இணைப்பு விண்ணப்பித்து பெறுவது எப்படி?
வேளாண்மைத் துறையின் மூலம் விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தில் விதைகள், உரங்கள், வேளாண் உபகரணங்கள், பண்ணைக் குட்டை அமைத்தல் முதலான பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்கின்றன.
தற்பொழுது ஊரக வளர்ச்சித்துறையுடன் இணைந்து தரிசு நிலங்களைச் சீரமைத்து விவசாய நிலங்களாக மாற்றும் முயற்சியின் ஒரு பகுதியாக விவசாயத்திற்குப் பயன்படும் வகையில் சோலார் மின் இணைப்பினை ஊக்குவிக்கத் தொடங்கியுள்ளது மத்திய, மாநில அரசுகள்.
ஒவ்வொரு விவசாயியும் வேளாண்மைத் துறையின் வாயிலாக அரசுகள் வழங்கும் மானியதினைச் சரிவர பயன்படுத்தி விவசாயத்தினைப் பெறுக்குவதில் கவனத்தைச் செலுத்துதல் வேண்டும். அந்த நிலையில் சோலார் மின் இணைப்புக்குச் சுமார் ரூ. 5 லட்சம் செலவாகும்.
அந்த ஐந்து லட்ச ரூபாயில் ரூ. 3 லட்சம் மானியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள ரு. 2 லட்சத்தினை வங்கியில் கடனாகவும் பெற்று சோலார் மின் இணைப்புகளை விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு அமைக்கலாம்.
தேவையான சான்றுகள்
- புகைப்படம் 2
- ஆதார் கார்டு
- நிலத்தின் சிட்டா
- நிலத்தின் பட்டா
- நில வரைபடம்
- நில அடங்கல்
- கிராம நிர்வாக அலுவலர் சான்றிதழ்
- வாய்தா ரசீது
(குறிப்பு: சான்றுகளை நகல்கள் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.)
செயல்முறை
இவற்றை டிவிசன் அலுவலகத்தில் கொண்டு சென்று பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பதாரரின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும். அதன் பின் சான்றிதழகள், உதவி மின் பொறியாளருக்கு அனுப்பி வைக்கப்படும்.
நிலத்தில் போர் இருந்தால் பொதுப்பணித் துறை அதிகாரிகளிடமிருந்து NOC வாங்கிக் கொள்ள வேண்டும். அதன் பின் ரூ.118 கொடுத்துப் பதிவு செய்ய வேண்டும். இப்பொழுது ஒப்புகைச் சீட்டுக் கொடுக்கப்படும். அதன் பிறகு தோட்டக்கலை அலுவலகத்திலிருந்து தகவல்கள் வரும்.
விவசாயத்திற்கு என இலவச மின் இணைப்புப் பெற்ற விவசாய நிலங்களுக்கு இந்த சோலார் மின் இணைப்பு வழங்கப்படுகிறது எனக் கூறப்படுகிறது. எனவே, விருப்பம் உள்ள விவசாயிகள் விண்ணப்பித்துப் பயன்பெறுங்கள்.
மேலும்
படிக்க....
மகத்தான மகசூலுக்கு மண் ஆய்வு தான் தீர்வு! மண்வளம் மற்றும் மேலாண்மை!!
PM Kisan 11வது தவணைத் தொகை இந்த தேதியில் வரும்! நரேந்திர சிங் தோமர் அறிவிப்பு!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற
YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை
தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக
வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...