உற்பத்தியை மேம்படுத்த 50% மானியத்தில் வேளாண் இயந்திரங்கள் பெறுவது எப்படி?
விவசாயம் செய்வதற்கு வேளாண் கருவிகள் மிக இன்றியமையாதவை ஆகும். அவற்றை ஒவ்வொரு விவசாயியும் தாங்களே சொந்தமாக வாங்கிக் கொள்ள முடியும். அவ்வாறு வாங்க அரசே 50% மானியத்தினை வழங்குகிறது. அத்தகைய திட்டம் தான் Krishi Yantra Subsidy Scheme 2022 ஆகும். இதில் எவ்வாறு வேளாண் இயந்திரங்களைப் பெறலாம் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
விவசாயமே இந்தியாவின் முதுகெலும்பாக இருக்கின்றது. அத்தகைய விவசாயத்தினை மேம்படுத்துவதற்கு அரசுகள் பல்வேறு செயல்பாடுகளைச் செய்து வருகின்றது. அந்த நிலையில் விவசாயத்திற்கு உதவக் கூடிய வேளாண் இயந்திரங்களைக் குறைந்த விலையில் வாங்குவதற்கு அரசு உதவுகிறது.
ஒவ்வொரு விவசாயிகளுக்கும், தாங்களே சொந்தமாக வேளாண் கருவிகளை வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதற்கான பொருளாதார நிலை அவர்களிடம் இருக்காது.
அந்த கவலையைப் போக்கும் நிலையில் அரசே விவசாயத்திற்குத் தேவையான வேளாண்கருவிகளை வாங்க 50% மானியத்தினை வழங்குகிறது. எஞ்சிய 50% தொகையை வங்கியில் கடனாகவும் பெற்றுக் கொண்டு சொந்தமாக வேளாண் இயந்திரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
கிருஷி யந்திர மானியத் திட்டம் என்பது விவசாய உற்பத்தியை மேம்படுத்தவும், விவசாய உற்பத்திக்கு ஏற்றவாறு விவசாயக் கருவிகளை வாங்குவதற்கும் மானியம் வழங்க மத்திய மற்றும் மாநில அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் ஆகும்.
இத்திட்டத்தின் மூலம் விவசாயத்திற்கு உதவும் வேளாண் கருவிகளான டிராக்டர், டில்லர், ரோட்டாவேட்டர், ஹே டேக்கர், வைக்கோல் பேலர், நியூமாடிக் பிளாண்டர், லேசர் லேண்ட் லெவெலர், டிஎஸ்ஆர் இயந்திரம், நெல் டிரான்ஸ்-பிளாண்டர் முதலான விவசாயம் சார்ந்த கருவிகள் மானியத்தில் வழங்கப்படுகின்றன.
திட்டத்தைப் பெற தகுதி
விவசாயம் செய்பவராக இருக்க வேண்டும். வேளாண் கருவிகளுக்கு என வழங்கப்படும் மானியத்தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்பதால் விண்ணப்பதாரர் வங்கியில் கணக்கு வைத்திருக்க வேண்டும். சொந்த நிலம் வைத்திருப்பவராக இருக்க வேண்டும்.
தேவையான் சான்றுகள்
- ஆதார் கார்டு
- வாக்காளர் அட்டை
- வங்கி கணக்கு புத்தகம்
- பான் கார்டு
- விண்ணப்பப் படிவம்
- கட்டணரசீது
சான்றிதழ்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பின் வேளாண் கருவி மானியத்திற்குத் தகுதிபெற்றவர் குறித்த தகவல் அறிவிக்கப்படும். விவசாய நிலத்தின் அளவைப் பொறுத்து 40 முதல் 50% வரை மானியம் வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. எனவே, விருப்பம் உள்ள விவசாயிகள் விண்ணப்பித்துப் பயன்பெறுங்கள்.
மேலும்
படிக்க....
விவசாயிகளுக்கு புதிய பயிர் கடன் ஒரு ஏக்கருக்கு 8640 ரூபாய் கிடைக்கும், முழு விவரம்!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற
YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை
தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக
வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...