பணமதிப்பிழப்பு நடவடிக்கை இனி 2000 ரூபாய் நோட்டுகள் கிடையாது- ரிசர்வ் வங்கி அறிவிப்பு!


தற்போது, ஏடிஎம்களில் இருந்து 2000 ரூபாய் நோட்டுகள் வருவது கணிசமாகக் குறைந்துள்ளது. இந்நிலையில், ரூ.2000 நோட்டுக்கள் இனி அச்சடிப்பு கிடையாது என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.



பணமதிப்பிழப்பு நடவடிக்கை


பிரதமர் நரேந்திர மோடி அரசின் முதல் பதவிக் காலத்தில், 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி இரவில் அறிவிக்கப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையில், முந்தைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன.


அதன் பிறகு பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட 4 நாட்களில் 2,000 ரூபாய் நோட்டு அறிமுகமானது. அப்போது வங்கிகளிலும், ஏடிஎம்களிலும், 2,000 ரூபாய் நோட்டுக்கள் தான் அதிகம் கிடைத்தன.



ஆனால் தற்போது, நிலைமை தலைகீழாக மாறி விட்டது. இப்போது 2,000 ரூபாய் நோட்டுகளைப் பார்ப்பது அபூர்வமாகிவிட்டது. ஏடிஎம்களில் இருந்து 2000 ரூபாய் நோட்டுகள் வருவதில்லை. இதற்கு என்ன காரணம் என்பதை இந்திய ரிசர்வ் வங்கி தனது ஆண்டு அறிக்கையில் விளக்கியுள்ளதாவது:-


மார்ச் 2022 வரையிலான காலக்கட்டத்தில் புழக்கத்தில் இருந்த மொத்த கரன்சிகளுக்கு எதிராக புழக்கத்தில் இருந்த ரூ.2,000 நோட்டுகளின் எண்ணிக்கை, தற்போது 1.6 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதனால்தான் ஏடிஎம்களில் 2000 நோட்டுகள் மிக அரிதாகக் கிடைக்கின்றன.


2,000 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாகவே குறைந்து வருகிறது.. இந்த ஆண்டு மார்ச் இறுதி வரையிலான காலகட்டத்தில், மொத்த கரன்சி நோட்டுகளில் அவர்களின் பங்கு 214 கோடி அல்லது 1.6 சதவீதமாக குறைந்துள்ளது.



500 கோடி குறைவு


இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை அனைத்து மதிப்பிலான நோட்டுகளின் மொத்த எண்ணிக்கை 13,053 கோடியாக இருந்தது. இதற்கு ஓராண்டுக்கு முன், இதே காலத்தில், இந்த எண்ணிக்கை, 12,437 கோடியாக இருந்தது. 


புழக்கத்தில் குறைவாக இருந்தாலும் ரூ.2000 ஆயிரம் நோட்டு மீண்டும் அச்சிடப்படாது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும் படிக்க....


விவசாயிகளுக்கு புதிய பயிர் கடன் ஒரு ஏக்கருக்கு 8640 ரூபாய் கிடைக்கும், முழு விவரம்!!


விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் கடன் பெற விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரம் உள்ளே!!


தமிழக அரசின் இலவச ஆட்டுக்கொட்டகை திட்டம் 2022 விண்ணப்பிப்பது எப்படி?


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post