7 நாட்களாகியும் முளைக்காத நெல் விதைகள் விவசாயிகள் வேதனை! விவசாயிகளுக்கான விழிப்புணர்வு தகவல்!!
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் முதல் போக சாகுபடிக்கு விதைத்த விதை நெல் முளைக்காததால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். போலி விதைகள் பற்றி விவசாயிகளிடம் போதிய விழிப்புணர்வு இல்லாமல் தனி நபரிடம் விதை நெல் வாங்கி சிக்கலில் மாட்டிக் கொள்வது தொடர்கதையாகி வருகிறது.
7 நாட்கள்
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் முதல் போக சாகுபடிக்கு விவசாயிகள் விதை நெல்லை வாங்கி நாற்றாங்கால் பயிரிடுவதற்காக விதைத்து வருகின்றனர். நாற்றாங்கால் 7 நாளுக்குள் முளைத்து, அதிலிருந்து 25 நாட்களுக்கு பிறகு நாற்றை எடுத்து வயல்வெளியில் நடுவார்கள்.இதற்காக விதை நெல் வேளாண்மை துறை மூலமும், தனியார்களும் விற்பனை செய்து வருகின்றனர்.
விதைகள்
வேளாண்மை துறை மூலம் கோ.51 ரக விதைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சுருளிப்பட்டியில் தனியார் மூலம், 509 ரக விதைநெல் விவசாயிகள் சிலர் பெற்று உத்தமுத்து, சுருளிப்பட்டி ஆகிய பாசன பரவுகளில் நாற்றாங்காலுக்காக விதைத்துள்ளனர்.
அதிர்ச்சி அளித்த நெல்
7 நாட்களாகியும் நாற்றாங்கால் முளைக்கவில்லை. அருகே உள்ள மற்ற நிலங்களில் நாற்றாங்கால் வளர்ந்து வருகிறது. இதனால் தனியாரிடம் விதை நெல் வாங்கியவர்கள் நாற்றாங்கால் முளைக்காததால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். விதை நெல் விற்றவர் கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதுபற்றி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
விழிப்புணர்வு இல்லை
போலி விதை நெல் பற்றி விவசாயி ஒருவர் கூறியதாவது, சான்றளிக்கப்பட்ட விதைகளை வேளாண்மை துறை மூலம் வழங்குவதாக அதிகாரிகள் விவசாயிகளுக்கு முறையான தகவல்களை தெரிவிப்பது இல்லை. இதனால் விவசாயிகளிடம் போதிய விழிப்புணர்வு இல்லாமல் தனி நபரிடம் விதை நெல் வாங்கி சிக்கலில் மாட்டிக் கொள்கின்றனர். வேளாண்மை துறை விவசாயிகளிடையே தகவல் தொடர்பு இல்லாததே இதற்கு காரணம்.
நடவடிக்கை
இது குறித்து மாவட்ட ஆட்சியர் விசாரணை செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயி கூறினார்.
மேலும்
படிக்க....
விவாசாயிகளுக்கு 4% வட்டியில் 5 ஆண்டுகளுக்கு ரூ. 3 லட்சம் விவசாயக்கடன் பெறுவது எப்படி?
வேளாண் பயிர் சாகுபடியில் மகசூலை அதிகரிக்கும் TNAU பயிர் பூஸ்டர்கள் பயன்படுத்துவது எப்படி?
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற
YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை
தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக
வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...