தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளின் திட்டங்களின் தற்போதைய நிலை மற்றும் செயல்படுத்தும் முறைகள் பற்றி ஆய்வு!!
தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர் அறிவுரை கிணங்க தஞ்சை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு துறைகளின் திட்டங்களின் தற்போதைய நிலை மற்றும் செயல்படுத்தும் முறைகள் பற்றி ஆய்வு செய்வதற்காக சிறப்பு அலுவலர் திரு செபஸ்டின் பிரிட்டோராஜ் அவர்கள் இன்று தஞ்சாவூர் ஒரத்தநாடு பட்டுக்கோட்டை மட்டும் மதுக்கூர் வட்டாரங்களில் ஆய்வு மேற்கொண்டார்.
மதுக்கூர் வட்டார ஆய்வின்போது விக்ரமம் பஞ்சாயத்தில் சுய உதவி குழு மகளிரிடம் கலந்துரையாடி அந்தந்த பஞ்சாயத்துகளில் உள்ள சுயதொழில் முன்னேற்றங்களுக்கு தேவையான அடிப்படை ஆதாரத்துடன் முன்னேறுவது குறித்தும் அவர்களுடைய பொருளாதார நிலையை முன்னேற்ற தேவையான விஷயங்கள் குறித்தும் கலந்துரையாடினார்.
கலந்துரையாடலின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வேந்திரன் ராஜு மற்றும் செயற்பொறியாளர்கள் உடனிருந்தனர். பின் விக்ரமம் கிராம கிராம நிர்வாக அலுவலரிடம் சாகுபடி பரப்பு எவ்வாறு ஒத்திசைவு செய்யப்படுகிறது அடங்களில் சாகுபடி பரப்புகள் பிரதி மாதம் பதிவேற்றம் செய்யப்படுகின்றன என்பதை குறித்து பதிவேடுகளை நேரடியாக ஆய்வு செய்து கேட்டறிந்தார்.
வேளாண் துறை வருவாய் இணைந்து பயிர் சாகுபடி பரப்பினை சரியாக ஒத்திசைவு செய்திட கேட்டுக்கொண்டார் பின் வாடியகாடு கிராமத்தில் அங்காடியை ஆய்வு செய்ததுடன் வாடிய காடு துவக்கப்பள்ளியில் உள்ள கழிவறைகளில் தூய்மை மற்றும் நீர் இருப்பு பற்றியும் ஆய்வு மேற்கொண்டார்.
பின் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் வேளாண்மை துறை அலுவலர்களுடன் ஒவ்வொரு வட்டாரத்திலும் பஞ்சாயத்து வாரியாக நீர் வழித்தடங்கள் இதுவரை தூர்வாரி முடித்தது மற்றும் தூர்வார வேண்டிய விபரங்களை பஞ்சாயத்து வாரியான வரை படங்களாக தயாரித்தால் சிறப்பாக இருக்கும் என அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வேளாண்மை கோமதி தங்கம் மற்றும் வேளாண் துணை இயக்குனர் ஈஸ்வர் மற்றும் சிறப்பு அதிகாரியின் தொடர்பு அலுவலர் திரு ஐயம்பெருமாள் ஆகியோர் உடன் இருந்தனர். வேளாண் துறை ஆய்வுக்கான ஏற்பாடுகளை வேளாண் உதவி அலுவலர்கள்ஜெரால்டு முருகேசு தினேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.
மேலும்
படிக்க....
உளுந்து பயிரில் தோன்றும் உலர் வேரழுகல் நோயினை கட்டுப்படுத்துவது எப்படி? முழு விபரம் உள்ளே!!
உங்கள் நிலத்தில் உள்ளது களர் மண்ணா? உவர் மண்ணா? அறிவது எப்படி?
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற
YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை
தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக
வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...