உங்கள் நிலத்தில் உள்ளது களர் மண்ணா? உவர் மண்ணா? அறிவது எப்படி?
இன்று பலரும் மண்வளம் பேணுதல் குறித்து சிந்திப்பது நல்லதே. அரை அடி மண் உற்பத்தி ஆக ஆயிரம் ஆண்டுகள் ஆகிறது. நமது நிலம் நமக்கு இறைவன் தந்த வரம். இதைக்காப்பதும் அழிப்பதும் நிர்வாக முறைகள் மூலம் தான் என்பது பலரும் அறியாதது தான்.
மனித உடலுக்கு மெடிக்கல் செக்கப் செய்வது கட்டாயம் தேவை என்பர். அதே போல் தான் நமது நிலம், கால்நடைகள், பயிர்கள், தண்ணீர், கருவிகள், சேமிப்புக்கிடங்குகள், மார்க்கெட், வாகனங்கள் ஆகியவற்றை கட்டாயம் விவசாயிகள் சரியாக இயங்குகிறதா? என செக்கப் செய்ய வேண்டும். பயன்படும் நிலையில் உள்ளதா என உறுதி நிபுணர்கள் ஆலோசனை அவ்வப்போது பெற்று கடைப்பிடிக்க வேண்டும்.
நமக்கு தெரியாது என்பதால் நல்ல பராமரிப்பு உத்திகளைக்கையாளாது விடுவரும் காலத்தே முன் தடுப்பு நடவடிக்கை எடுக்காது விடுவது ஆபத்தானதாகும் அருகில் உள்ள நிபுணர்கள், பத்திரிக்கை மற்றும் தினசரி இதழ்களில் படித்தோ தெரிந்தவர்களிடம் அது பற்றி கேட்டோ, அறிந்து கொண்டாலும் முறையாக நாம் பரிந்துரைகளை செய்யாது விடுவது வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்.
மண்ணையும், தண்ணீரையும் முழு பரிசோதனை செய்தால் மண்ணில் உள்ள உப்பின் நிலையை அறியலாம். அதற்கு இ.சி. என்ற அலகு உதவும். கார அமில நிலையை அறிய பி.எச். என்ற அலகு உள்ளது. சோடிய அயனிகள் அளவை அறிய இ.எஸ்.பி.என்ற அலகும் உதவுகிறது. பாசன நீரில் உப்பு அளவு அறியவும் இதே அலகு தான் உதவும்.
ஒரு மண்ணில் உவர் தன்மை மட்டுமோ களர் தன்மை மட்டுமோ அல்லது இரண்டும் சேர்ந்தோ இருந்தால் அது பிரச்சினை மண் ஆகும். அதனை சரி செய்ய வேண்டும் மண்ணிலோ, தண்ணீரிலோ கரையக்கூடிய உப்புகள் சம நிலை பி.எச்.7 எண்ணைத் தாண்டி இருந்தால் அதாவது 7க்கு மேல் 8.5 க்கு கீழே இருந்து அதில் இ.சியும் 4க்கு மேல் இருந்து இ.எஸ்பி எனும் மாற்றக்கூடிய சோடியம் அயனிகள் 15 சதவீதத்திற்கு கீழே இருந்தால் அது உவர் தன்மை உடைய மண் அல்லது நீர் என வகைப்படுத்தப்படுகிறது.
களர் தன்மை என்பது ஈ.சி.அலகு 4க்குக்கீழேயும், இ.எஸ்.பி அலகு 15க்கு மேலேயும், கார அமில நிலை (பி.எச்) 8.5க்கு மேலேயும் இருக்கும் தன்மையை குறிக்கும். களர் மற்றும் உவர் பிரச்சினை உள்ள மண்ணை தண்ணீரின் இ.சி. மின்கடத்தும் திறன் அலகு 4க்கு கீழேயும், பி.எச்.8.5க்குள்ளேயும், இ.எஸ்.பி. சோடியம் அயனி பரிமாற்ற சதவீதம் 15 சதவீதத்தை விட அதிகமாகவும் இருந்தால் பிரச்சினை ஏற்படும் இவற்றை சீர்திருத்திட பல வழிகள் உள்ளன.
வடிகாலை சீராக வைத்துக்கொண்டு வருடா வருடம் தக்கைப்பூண்டு, கொளுஞ்சி, தக்கைப்பூண்டு போன்ற பசுந்தாள் உரப்பயிர்களை பயிரிடலாம் நன்கு வளர்ந்தது மடக்கி உழுது நீரைத் தேக்கி வடிய வைத்தல் அவசியம்.
மிதமான களர் நிலத்தை அதாவது பி.எச். 8.6 முதல் 8.9 வரை உள்ள நிலத்தை நல்ல நிலமாக மாற்றலாம். களர் நிலத்திற்கு ஜிப்சம் இட்டு சீராக நீர் பாய்ச்சி நீரை 4 முதல் 6 அங்குலம் உயரம் தேக்கி தானாக கசிந்து வடிகாலில் வடிய செய்ய வேண்டும்.
நீர்குறைய குறைய 2 அல்லது 3 நாட்கள் தொடர்ந்து நல்ல நீரைத் தேக்கவும். இவ்வாறு 3 அல்லது 4 முறை செய்யவும். இதற்கு சரியாக திட்டமிட்டு மழை கிடைக்கும் தருணம் எளிதில் நிவாரணம் தேடலாம்.
தகவல் வெளியீடு
டாக்டர் பா.இளங்கோவன், வேளாண்மை இணை இயக்குநர், காஞ்சிபுரம். கைபேசி எண் : 98420 01725.
மேலும்
படிக்க....
கரும்பில் கட்டைப் பயிர் குட்டையாதல் நோயும் அதன் மேலாண்மை முறைகளும்!!
கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகளுக்கு பொது நகை கடன் வட்டியில்லா கடன் அறிவிப்பு!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற
YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை
தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக
வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...