கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகளுக்கு பொது நகை கடன் வட்டியில்லா கடன் அறிவிப்பு!!



கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகளுக்கு பொது நகை கடன் வட்டியில்லா கடன் அறிவிப்பு!!


சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு, 


  • பொது நகைக்கடன், 


  • வட்டியில்லா பயிர்க்கடன், 


  • வட்டியில்லா கால்நடை பராமரிப்பு கடன், 


  • குறைந்த வட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கான கடன், 


  • சுய உதவிக்குழு கடன், 


  • பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் கடன் போன்ற அனைத்து விதமான கடனுதவிகள் வழங்கப்படுகிறது.



புதிய உறுப்பினர் சேர்க்கை


கடனுதவி பெற புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. எனவே சிவகங்கை மாவட்ட விவசாயிகள் தங்களின் கீழ்கண்ட ஆதாரங்களை சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


  • ஆதார் அட்டை நகல், 


  • ரேஷன்கார்டு நகல், 


  • நிலவுடமை தொடர்பான 10(1) கணினி சிட்டா, 


  • பயிர் சாகுபடி தொடர்பாக விஏஓ அடங்கல் சான்று, 


  • பாஸ்போர்ட் அளவு போட்டோ 


ஆகியவற்றுடன் தங்கள் எல்லைக்கு உட்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை தொடர்பு கொண்டு மனு சமர்ப்பித்து பயிர்க்கடன் மற்றும் இதர கடன்கள் பெற்று பயனடையலாம்.



கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இல்லாத விவசாயிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினர் படிவத்தை பெற்று பங்குத்தொகை மற்றும் நுழைவுக்கட்டணமாக ரூ.110ஐ செலுத்தி, உறுப்பினராக சேர்ந்து, உரிய ஆவணங்களுடன் மனுவை சமர்ப்பித்து கடன்களை பெற்று பயனடையலாம்.


கூடுதல் விபரங்களுக்கு


  • இது தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு சிவகங்கை மற்றும் திருப்புவனம் வட்ட கள அலுவலரை 73391 29088, 


  • காளையார்கோவில் வட்ட கள அலுவலரை 94429 26797, 


  • மானாமதுரை கள அலுவலரை 96005 48022, 


  • இளையான்குடி வட்ட கள அலுவலரை 97878 04562, 



  • கல்லல், தேவகோட்டை மற்றும் திருப்பத்தூர் வட்ட கள அலுவலரை 95975 08277, 


  • எஸ்.புதூர் மற்றும் சிங்கம்புணரி வட்ட கள அலுவலரை 96778 18959,


  • சாக்கோட்டை மற்றும் கண்ணங்குடி வட்ட கள அலுவலரை 91235 52294 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று சிவகங்கை மண்டல இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.

 


மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS


மேலும் படிக்க....


சிறு குறு விவசாயிகளுக்கு 50% மானியத்தில் நெல் அறுவடை இயந்திரம் பெறுவது எப்படி?


நடப்பு ரபி 2021-22 பருவத்தில் பயிர் காப்பீடு செய்ய பிரதம மந்திரியின் திருந்திய பயிர் காப்பீட்டு திட்டம்!!


PMFBY 2022 புதுப்பிக்கப்பட்ட பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments