நடப்பு ரபி 2021-22 பருவத்தில் பயிர் காப்பீடு செய்ய பிரதம மந்திரியின் திருந்திய பயிர் காப்பீட்டு திட்டம்!!
பயிர்களுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி விவசாயிகளை பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும், பிரதம மந்திரியின் திருந்திய பயிர் காப்பீட்டுத் திட்டம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மாநில மற்றும் ஒன்றிய அரசுகளின் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் நடப்பு ரபி பருவத்தில் அக்ரி கல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நடப்பு ரபி 2021-22 பருவத்தில் பயிர் காப்பீடு செய்ய பிர்கா அளவில் அறிவிக்கை செய்யப்பட்ட கரும்பு பயிருக்கு வருகின்ற 31 ஆகஸ்டு 2022 காப்பீடு செய்ய கடைசி நாளாகும். கரும்பு பயிருக்கு காப்பீடு செய்ய ஏக்கருக்கு ரூ.2875/- பிரீமியத் தொகையாக செலுத்த வேண்டும்.
கரும்பு பயிருக்கு அறிவிக்கை செய்யப்பட்டுள்ள பிர்காக்களின் கீழ் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களைச் சேர்ந்த அனைத்து விவசாயிகளும் திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம்.
காப்பீடு செய்யும் முறை
இத்திட்டத்தின் கீழ், கடன் பெறும் விவசாயிகள், தாங்கள் பயிர் கடன் பெறும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாகவோ அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவோ தங்கள் விருப்பத்தின் பேரில் கரும்பு பயிருக்கு காப்பீடு செய்து கொள்ளலாம்.
கடன் பெறா விவசாயிகள் நடப்பு பசலி ஆண்டுக்கான அடங்கல் அல்லது பயிர் சாகுபடி சான்றினை கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்று அதனுடன், சிட்டா, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை கொண்டு பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசிய வங்கிகள் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம்.
பிரதம மந்திரியின் திருந்திய பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் குத்தகை விவசாயிகள் உள்பட அனைத்து விவசாயிகளும் தவறாமல் முன் கூட்டியே பதிவு செய்து தங்கள் பயிர்களுக்கு ஏற்படும் எதிர்பாராத மகசூல் இழப்புகளில் இருந்து பாதுகாத்து பயனடையுமாறு ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சி.சின்னசாமி கேட்டுக் கொண்டார்.
மேலும்
படிக்க....
PMFBY 2022 புதுப்பிக்கப்பட்ட பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு!!
மலிவான விலையில் யூரியா 500ml பாட்டிலின் விலை விவசாயிகளுக்கு ரூ.240 மட்டுமே!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற
YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை
தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக
வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...