Random Posts

Header Ads

7 வாரங்களில் ஏக்கருக்கு 5 டன் வரை தழைசத்து தரும் மண்ணுக்கு வளமும் தரும் சணப்பு பயிர்!!



7 வாரங்களில் ஏக்கருக்கு 5 டன் வரை தழைசத்து தரும் மண்ணுக்கு வளமும் தரும் சணப்பு பயிர்!!


மதுக்கூர் வட்டாரத்தில் தற்பொழுது கோடை நெல் அறுவடை மற்றும் 50 சதவீத குறுவை நடவு முடிந்து உள்ளது. விவசாயிகள் தற்பொழுது மேட்டூர் அணையிலிருந்து முன்கூட்டியே நீரும் திறந்து விடப்பட்டுள்ளதால் குறுவை சாகுபடி பரப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. 



இதற்கு குறுகியகால ரகங்களான நெல் ஏ.எஸ்.டி 16 சான்று பெற்ற விதைகள் அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களிலும் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. 


விவசாயிகள் விதை கிராமத் திட்டத்தின் கீழ் மானியத்தில் விதைகள் விநியோகிக்கப்படுவதால் 20 கிலோ நெல் வாங்கும் பட்சத்தில் ஒரு ஆதார் கார்டுடன் பதிவு செய்து பெற்றுக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. 


அக்டோபர் 15 வாக்கில் பருவமழையும் எதிர்பார்க்கப்படுவதால் விவசாயிகள் குறுவை விதைப்பு மற்றும் நடவு பணிகளை ஜூலை முதல் வாரத்திற்குள் முடித்துக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. 


இதன் மூலம் அறுவடை செய்யப்படும் குறுவை நெல் பயிரானது மழை பாதிப்பின்றி அறுவடை செய்ய வாய்ப்பு உள்ளது. எனவே விவசாயிகள் நெல் சாகுபடி துவங்குவதற்கு முன் சணப்பு பயிரினை பசுந்தாள் உர பயிராக பயிரிட்டு உரச் செலவை குறைக்க முடியும். 



இதற்கு ஏக்கருக்கு 20 கிலோ வீதம் சணப்பை விதைப்பு செய்ய வேண்டும். சணப்பு மிக வேகமாக வளரக்கூடிய பயிர். 7 வாரத்தில் பூப்பூக்க துவங்கிவிடும். 2  மீட்டர் வரை உயரம் வளரக்கூடியது. இதன் ஆழமான வேர் அமைப்பினால் மண்ணுக்குள் நன்றாகவே ஊடுருவி மண்ணின் கட்டமைப்பையும் மாற்றக்கூடியது மண்ணுக்கு காற்றோட்டத்தையும் அதிகரிக்கும். பிற பயிர்களுடன் போட்டியிடும் தன்மை அற்றது. 


இப்பயிரின் முக்கியத்துவமே இது தழைச்சத்தை காற்றிலிருந்து கிரகித்து ரைசோபியம் எனும் நுண்ணுயிர் மூலம் வேர் முடிச்சுகளில் வைத்திருந்து பயிருக்கு அளிக்கக் கூடிய தன்மை உடையது. மண்ணிலும் தழைச்சத்தை அதிகரிக்கும். 


7 வாரங்களில் இதை மண்ணில் மடக்கி உழுவதன் மூலம் ஏக்கருக்கு 5 டன் வரை தழைகளை மண்ணில் சேர்க்கும். எளிதாக மக்க கூடிய தன்மையும் உடையது.ஏக்கருக்கு 40 முதல் ஐம்பது கிலோ வரை தழைச்சத்தை மண்ணில் சேர்க்கும் மண்ணில் கரிம வளமும் அதிகரிக்கிறது. 



இதனால் தேவையற்ற உரச் செலவை குறைக்கலாம்.தழை சத்துக்காக யூரியா வாங்கி செலவழித்து பயிரிடுவதை காட்டிலும் பசுந்தாள் உரப் பயிர் சாகுபடி செய்து மண்ணில் மடக்கி உழுவதால் உரச் செலவை மிக எளிதாக குறைக்க முடியும். மண்ணில் கரிம அமிலங்கள் அதிகரிப்பதால் நுண்ணுயிர்களும் பெருகும் மண்ணின் கட்டமைப்பும் மாறும். 


எனவே விவசாயிகள் எளிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி உரச் செலவை குறைக்கவும் மண்ணுக்கு வனப்பும் வளமும் தரும் சணப்பு போன்ற பசுந்தாள் உரப் பயிர்களை நெல் நெல் சாகுபடி துவங்குவதற்கு முன்னும் தென்னையில் ஊடுபயிராகவும் பயிரிட்டு பயன் பெற வேளாண்மை உதவி இயக்குனர் மதுக்கூர் கேட்டுக்கொண்டார். 



தற்போது மதுக்கூர் வட்டாரத்தில் வாட்டாகுடி அத்திவெட்டி இளங்காடு மற்றும் புலவஞ்சி போன்ற பகுதிகளில் விவசாயிகள் சணப்பை பயிரிட்டு பயன்பெறுகின்றனர். சிரமேல்குடி வேளாண் உதவி அலுவலர் முருகேஷ் பசுந்தாள் உரப் பயிரின் பயன்களை விவசாயிகளுக்கு எடுத்துக்கூறி பிற விவசாயிகளும் இதனை பின்பற்ற கேட்டுக்கொண்டார்.

 

மேலும் படிக்க....


நடப்பு ரபி 2021-22 பருவத்தில் பயிர் காப்பீடு செய்ய பிரதம மந்திரியின் திருந்திய பயிர் காப்பீட்டு திட்டம்!!


PM-Kisan 11- வது தவணை 10,58,32,641 விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு! பணம் கிடைக்காதவர்கள் உடனே இதனை செய்யுங்கள்!!


விவசாயிகளுக்கு முக்கிய தகவல்.. eKYC முடிக்க கடைசி தேதி நீட்டிப்பு! விவசாயிகள் மகிழ்ச்சி!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


Post a Comment

0 Comments