விவசாயிகளுக்கு முக்கிய தகவல்.. eKYC முடிக்க கடைசி தேதி நீட்டிப்பு! விவசாயிகள் மகிழ்ச்சி!!



விவசாயிகளுக்கு முக்கிய தகவல்.. eKYC முடிக்க கடைசி தேதி நீட்டிப்பு! விவசாயிகள் மகிழ்ச்சி!!


விவசாயிகளுக்கு பிஎம் கிசான் பணம் பெறுவதற்கு eKYC முடிக்க கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.


விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்குவதற்காக பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டம் (Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana) 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் எல்லா விவசாயக் குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு 6,000 ரூபாயை மத்திய அரசு வழங்குகிறது.



பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயக் குடும்பங்களுக்கு ஒரு காலாண்டுக்கு 2000 ரூபாய் என்ற விகிதம் ஆண்டுக்கு மொத்தம் 6000 ரூபாயை மத்திய அரசு வழங்கி வருகிறது. நிலம் உடைய எல்லா விவசாயக் குடும்பங்களுக்கும் இந்த பணம் கிடைக்கும்.


இந்நிலையில், பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் பணம் பெற வேண்டுமெனில் eKYC (ஆதார் சரிபார்ப்பு) கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்தது. இதன்படி, இதற்கு முன் மார்ச் 22ஆம் தேதி eKYC முடிப்பதற்கான கடைசி தேதி என மத்திய அரசு தெரிவித்திருந்தது.


இதையடுத்து மே 31ஆம் தேதி கடைசி தேதி என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பிரதமர் கிசான் திட்டத்தின் பலன்களை பெற eKYC முடிப்பதற்கான கடைசி தேதி வரும் 31 ஜூலை 2022 ஆம் தேதிக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கிசான் இணையதளத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.



ஆன்லைனில் eKYC முடிப்பது எப்படி?


ஆன்லைனில் eKYC முடிக்க https://pmkisan.gov.in/ இணையதளத்துக்கு செல்லவும்.



மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS


அதில் உள்ள Farmers Corner பிரிவில் eKYC தேர்வு செய்யவும். புதிதாக திறக்கும் பக்கத்தில் ஆஹ்டார் எண் பதிவிட்டு Search பட்டனை கிளிக் செய்யவும்.


இப்போது மொபைல் எண் பதிவிட்டு OTP பெறவும். OTP பதிவிட்டு Submit கொடுக்கவும். இத்துடன் உங்கள் eKYC முடிந்துவிடும்.

 


மேலும் படிக்க....


PMFBY 2022 புதுப்பிக்கப்பட்ட பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு!!


கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன்! அதிகாரபூர்வ அறிவிப்பு!!


சின்ன வெங்காயத்திற்கான சராசரி பண்ணை விலை கிலோ ரூ.22 வரை இருக்கும்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


Post a Comment

0 Comments