சின்ன வெங்காயத்திற்கான சராசரி பண்ணை விலை கிலோ ரூ.22 வரை இருக்கும்!!
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தகவல்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டமானது, சின்ன வெங்காயத்திற்கான விலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரபிரதேசம் மற்றும் ஒடிசா ஆகிய பகுதிகளில் அதிகளவு சின்ன வெங்காயம் பயிரிடப்படுகிறது. சின்ன வெங்காயம் பயிரிடுவதிலும், வியாபாரம் செய்வதிலும் தமிழகத்திற்கு கர்நாடகா முக்கிய போட்டியாளராக திகழ்கிறது.
தமிழ்நாடு தோட்டக்கலை மற்றும் தோட்டப்பயிர்த் துறையின் அறிக்கையின் படி, 2020-21 ஆண்டில், தமிழ்நாட்டில் சின்ன வெங்காயம் 0.51 இலட்சம் எக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 3.57 இலட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், மொத்த வெங்காய பரப்பளவில் 80 சதவீதத்திற்கும் மேல் சின்ன வெங்காயமும் மீதம் பெல்லாரி வெங்காயமும் பயிரிடப்படுகின்றன.
திண்டுக்கல், திருப்பூர், பெரம்பலூர், திருச்சி மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் சின்ன வெங்காயத்தை அதிகளவு பயிரிடுகின்றனர். கர்நாடகா மற்றும் ஆந்திரபிரதேசம் போன்ற அண்டை மாநிலங்களிலிருந்து வரும் அதிக வெங்காய வரத்து காரணமாக தமிழகத்தில் சின்ன வெங்காயத்தின் விலை தொடர்ந்து அழுத்தத்தில் உள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் சின்ன வெங்காயத்தின் பரப்பளவு, உற்பத்தி மற்றும் போதுமான அளவு இருப்பு இருப்பதன் காரணமாக வரவிருக்கும் மாதங்களில் விநியோக நிலைமை தேவைக்கும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இச்சூழல் ஆகஸ்ட் 2022 வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விலை முன்னறிவிப்புத் திட்டமானது, கடந்த 23 ஆண்டுகளாக திண்டுக்கல் சந்தையில் நிலவிய சின்ன வெங்காயம் விலையை மற்றும் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது.
ஆய்வுகளின் அடிப்படையில், வரும் ஆகஸ்ட் மாத இறுதி வரை தரமான சின்ன வெங்காயம் சராசரி பண்ணை விலை கிலோவிற்கு ரூ.20 முதல் 22 வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
எனவே, விவசாயிகள் மேற்கூறிய சந்தை ஆலோசனை அடிப்படையில், சந்தை முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகின்றனர்.
மேலும் விவரங்களுக்கு, கோயம்புத்தூர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இயங்கும், உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தை 0422-2431405 என்ற தொலைபேசி எண்ணிலும்,
இயக்குனர் மற்றும் முனை அதிகாரி, தமிழ்நாடு பாசன விவசாய நவீன மயமாக்கல் திட்டம், நீர் தொழில் நுட்ப மையம், 0422-2431405 என்ற தொலைபேசி எண்ணிலும், பேராசிரியர் மற்றும் தலைவர், காய்கறிப் பயிர்கள் துறை, 0422-6611374 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
மேலும்
படிக்க....
PM-Kisan தகுதியுள்ள விவசாயிகளுக்கு பணம் வராவிட்டால் இந்த எண்களில் புகார் அளிக்கலாம்!!
ஆழ்துளை கிணறு, சொட்டு நீர் பாசனம் போன்றவற்றுக்கு 100% மானியம் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற
YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை
தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக
வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...