கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன்! அதிகாரபூர்வ அறிவிப்பு!!
திருச்சி மாவட்டத்தில் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.
தேவையான ஆவணங்கள்
- ஆதார் நகல்
- ரேசன் கார்டு நகல்
- நிலவுடமை தொடர்பான கணினி சிட்டா
- பயிர் சாகுபடி தொடர்பாக விஏஓ அடங்கல் சான்று
- பாஸ்போர்ட் அளவு போட்டோ
வட்டியில்லா கடன்
திருச்சி மாவட்ட விவசாயிகள் ஆகிய ஆவணங்களுடன் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை தொடர்பு கொண்டு கடன் மனு சமர்ப்பிக்க வேண்டும். இதன் மூலம் பயிர்க்கடன் மற்றும் இதர கடன்கள் பெற்று பயனடையலாம்.
கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இல்லாத விவசாயிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினர் படிவத்தை பெற்று ரூ.110 பங்குத் தொகை மற்றும் நுழைவுக் கட்டணம் செலுத்தி, உடன் உறுப்பினராக சேர்ந்து உரிய ஆவணங்களுடன் மனுவை சமர்ப்பித்து, அனைத்து வகையான கடன்களையும் பெற்று பயனடையலாம்.
சங்கத்தின் உறுப்பினர் மற்றும் உறுப்பினர் அல்லாத விவசாயிகள் தங்களுக்கு தேவையான உரங்களை சில்லரை விற்பனை மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
இதில் ஏதாவது சேவை குறைபாடுகள் இருந்தால், திருச்சி மண்டல இணை பதிவாளரை 73387 49300, திருச்சி சரக துணை பதிவாளரை 73387 49302, லால்குடி சரக துணைப் பதிவாளரை 73387 49303, முசிறி சரக துணைப் பதிவாளரை 73387 49304 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று ஆட்சியர் சிவராஜ் தெரிவித்து உள்ளார்.
மேலும்
படிக்க....
பணமதிப்பிழப்பு நடவடிக்கை இனி 2000 ரூபாய் நோட்டுகள் கிடையாது ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
உற்பத்தியை மேம்படுத்த 50% மானியத்தில் வேளாண் இயந்திரங்கள் பெறுவது எப்படி?
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற
YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை
தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக
வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...